
மழை
தீர்க்கத்தின் உட்சுவர்களிலிருந்து
வெளியாகிறது மழை.
நீர் பிதற்றல்களில் எங்கும்
உள்முகங்கள்.
சாலைகளெங்கும் உடல் சிதறி
பூ உதிரும்.
பாதங்களிளெல்லாம்
ஒருமுறையேனும் ஆகாயம்
தன் ஸ்தன
வெளிகளைக் காட்டி
துருவ மோட்சம் பெருகிறது.
காடு தன் இலையற்ற உடலை
மீட்சியாக்கி கர்ப்ப ரேகையில்
அடைகிறது.
3 comments:
//நீர் பிதற்றல்களில் எங்கும்
உள்முகங்கள்.//
அழகான வரிகள். நன்றாக இருக்கிறது.
good
நல்லாருக்கு
Post a Comment