Tuesday, 13 October, 2009

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)


பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்
ஆசிரியர்
செல்வ புவியரசன்
உதவி ஆசிரியர்
கிருஷ்ணமூர்த்தி
ஆலோசகர்
சுமா ஜெயராம்

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.

செல் : 9894931312

தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும். உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.

- பதிப்பாசிரியர்

இதழின் உள்ளடக்கம்

பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-
செல்வ புவியரசன்
4


உலகமயமாதலும் அதன் இயலாமையும்-
க.செண்பகநாதன்
9

வெண்ணிறம் கொண்ட கரும்பறவை-
ஆல்பெரட் டி முஸோட்
(தமிழில்:க. செண்பகநாதன் 13

ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-
க. செண்பகநாதன்
30

பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்-
க. செண்பகநாதன்
44

பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து -
தமிழச்சி தங்க பாண்டியன்
50

திருச்சாரணத்து மலைக் கோயில் -
ப. சோழநாடன் 55

Friday, 2 October, 2009

ஷியாம் பெனகல்:: நேர்காணல்


கேள்வி: நீங்கள் ஹதராபாத்தில் வளர்ந்தவர். உங்களது பாலிய பருவத்தில் ஏற்பட்ட பல்வேறு பலவிதமான பாதிப்புகளை கூறுங்கள். ஏனெனில் எதையும் கருத் தோற்றம் கொள்ள கூடிய பருவம் அது இல்லவே?
ஷியாம் பெனகல்: ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படியே குழந்தை பருவத்துடன், கருத்தில் ஏதும் ஊன்றி இருப்பதாக நான் எண்ணவில்லை. இளம் பிரயாயத்தில் எந்தவொரு கருத்தாக்கங்களிலும் ஆட்படாத்தைப் போல் தான் இப்போதும் நான் உள்ளேன். அப்படி எதாவது ஒரு கருத்தாக்கத்தில் ஆட்ப்பட்டு விட்டால், அத்தகையது மிக பயங்கரமானது. அப்படியாக கருத்தாக்கத்திற்குள் ஆட்பட்டு விட்டால் புதிதாக கற்பது என்பது இல்லாமல் போய் விடும். அத்தகையது வாழ்வதை நிறுத்திக் கொண்டது போலானது. அத்தகைய நிலை எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் எனது இளைய வயதில் பாதித்தவைகள் குறித்து அறிய விரும்பிகிறீர்கள் என்றே நினைக்கிறேன்? சிறு பிரயாயத்தில் எல்லோரையும் போல் எனக்கும் குடும்பம் இருந்தது. அதில் சாதகமும் இருந்தது, பாதகமும் இருந்தது. சாதகமானவைகளை மட்டுமே எடுத்துகொண்டேன். அதில் ஒரு விஷயம், எங்கள் குடும்பம் மிக பெரியது. பரந்ததொரு மனவிலாசத்தை அடு அளித்து அகர்ஷித்தது. எனது உறவினர்கள் பல வித்தியாசமான மனவிலாசத்தை தங்களுக்குள் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, எங்கள் இடத்திலிருந்து உடல்நலம் தேறிக்கொண்டிருந்த மாமா, நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். அத்தருணத்திலிருந்து எனது ஆர்வமும் தொடங்கியது. எனது மூத்த சகோதரர் ஓர் ஓவியர். அதனால் தான் ஓவியம் பற்றிய ஆர்வமும் அரும்பியது. திரைப்படம் மீதும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததினால் எனது ஆர்வமும் திரைப்படத்தை நோக்கியும் ஊடிச்செல்ல செய்தது. அந்த தருணத்தில் பல்வேறு சம்பவங்களை பற்றி நோக்கியதால் பல விதமான விஷயங்கள் சாதகமாக எனது சிறு பிரயாயத்திலேயே குடிப்புகுந்து ஆர்வமூட்ட செய்தது.

கேள்வி: விளம்பர நிறுவனங்களுக்கான படியெழுத்தராக(copy-writer) தொழிலை தொடங்கிய நீங்கள், பின்னர் வணிக ரீதியான திரைப்படங்களையும், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவணப்படங்களையும்-அதாவது கலை, அறிவியல், மானுடவியல் போல் பல விஷயஙள் குறித்த ஆவணப்படங்களை உங்களுக்கு நல்ல பெயரை தந்தன. தொடக்க காலத்தில் நேர்ந்த இறுக்கந் தொய்ந்த பணியே தேர்ந்த திரைப்படப் படைப்பாளியாக உங்களை வளர்த்தெடுத்ததாக நினைக்கிறீர்களா?
ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி, விளம்பர நிறுவனங்களுக்கு நான் சென்றதற்கு முதல் காரணம் ஹதராபாத்தில் வளர்ந்ததினால் உண்டானது. அந்த காலக்கட்டத்தில் திரைப்பட பயிலகங்கள் ஏதும் அங்கில்லை. திரைப்பட படைப்பாளியாகும் விருப்பத்தை அனைவரும் எள்ளி நகையாடினார்கள். எவரும் அக்கரை காட்டாத நிலை. ஆனால் எனது ஆர்வம் ஒரு திரைப்பட படைப்பாளியாக திகழ வேண்டுமென்பதிலேயே இருந்தது. நிரைப்படத் தொழிலுக்கு ஹதராபாத் எந்த விதத்திலும் வாய்ப்புக்கு உகந்ததாக இல்லை. அக்காலக்கட்டத்தில், பூனாவில் உள்ள FTII - யும் தோன்றவில்லை. அப்போது அது அங்கிருந்தாலும் எனது தந்தையால் அங்கு அனுப்பி படிக்க வைத்திருக்க வாய்ப்பும் வசதியும் இல்லை. அடுத்ததாக பம்பாய் சென்று திரைப்படங்களுக்கு எவ்வகையிலாவது நுழையும் வாய்ப்பு ஒன்றிருந்தது. எவரொருவரிடமும் இணைந்து பணியாற்றும் நிலை எனக்கு அறவே பிடிக்க வில்லை. ஏனெனில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த பெருவகையான
திரைபடங்களை ஏற்று பின்பற்ற முடியாத மனநிலை எனக்கிருந்தது. அந்த படங்கினால் உண்டாகும் பாதிப்பை மனரீதியாக உள்வாங்கிக் கொள் நான் விரும்ப வில்லை. அதனால் தான் விளம்பர நிறுவனங்களுக்கு படியெழுதராக சேர்ந்தேன். கிறகு வணிக ரீதியான வாய்ப்பு கிடைத்தன. அவைகளை செய்ததன் மூலம் தின்ப்படங்கள் படைப்பதை பற்றி உண்மையாக கற்றுகொண்டேன். அதிலிருந்து எனது நிலை எவ்வகையிலும் தாழ்த்திக் கொள்ள வில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
கேள்வி: இப்போது உங்களது முழு நீள திரைப்படத்திற்கு வருகிறேன். உள்களது முதல் மூன்று படங்களான அங்கூர், நிஷாந்து, மந்தன், ஆகியவைகள்(trilogy) முத்தொடர் வகையை சேர்ந்தது. இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கும் மக்கள் நிலையைக் பற்றியது. இத்தகைய நிலையை நேரிடையாக அப்படங்கள் விவரிக்கும் தன்மை வாய்ந்தவைகள். இவற்றிலிருந்து விலகி பூமிக்காவில், நவயுத்தியை பயன்படுத்தினீர்கள். இப்படியான பரிணாமம் உங்களுக்குள் எப்படி நிகழ்ந்தது என்று கூறுங்கள்?

ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி. அங்கூர், நிஷாந்த், மந்தன் ஆகிய திரைப்படங்கள் முத்தொடர் வகையை சேர்ந்தது அல்ல. ஒரு விஷயத்தை பல கோணங்கள் கொண்டு எடுக்கப்பட்டதாகும். ஏனெனில், நான் மாற்றத்தின் ஆதாரங்களையும், சமூக மாற்றத்தையும் எப்போதும் விரும்புகிறவன். திரைப்படத்தில், பொருள் உள்ளடக்கத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டிருப்பவன் என்பதோடு அதன் வடிவ நெறிளோடும் அதனையும் தாண்டி பரந்து விரிந்த தன்மையுடனும் நான் தொடங்கியதன் விளைவாகத் தான் பூமிக்காவை உருவாக்கினேன். பூமிக்காவின் திரைப்பட உருவாக்க வடிவம் அனைவரையும் மன நெகிழச் செய்தது. அதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் நான் கையாண்ட பொருள் உள்ளடக்கம். அதிலிருந்து இருபத்தி ஐந்து வருடங்களாகவே இவ்வகையே பரிணாம வளர்ச்சியை நான் அடைந்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி: பூமிக்காவுக்கு பிறகு நீங்கள் எடுத்த மண்டி, ஒரு மயிற்கல். அதில்(உங்கள் பாணி) காட்சியமைப்பு மற்றும் வண்ண அமைப்புகள் மீது உங்களது பணி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. விபச்சார விடுதியின் வன்ம்ம நிறக்கூடு ரசிக்கத்தக்க மனப்பாங்குடன் காட்சிவெளியில் வெகுவாக அகர்ஷித்திருந்தது நேரிடையாக கதையிலிருந்து விலகி, நவ மாறுதலுடன் பூமிக்காவைப் போலவே இதுவும் சுராசியமான உதாரணம். அந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் கூட அவ்வடிவம் தானே?

ஷியாம் பெனகல்: ஆம், உண்மை தான். நேர் கோட்டில் கதை சொல்வது வரைமுறைக்கு உட்பட்டே நிகழ்கிறது. யதார்த்தத்தின் கருத்துருவம் தான் உண்மையில் உங்களுக்கு முக்கியமென்றால், இயல்பு மற்றும் யதார்த்தம் மீது அக்கரைக் கொள்ள அவசியமில்லை. அவை இரண்டு வகையான வெவ்வேறு விஷயங்களாக உள்ளன. யதார்த்ததின் கருத்துருவத்திற்கும், யதார்த்த படங்களை படைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. யதார்த்தம் எப்போதும் பல்வேறு கோணங்களை கொண்டிருக்கிறது. அவை நேரிடையாக, அதாவது A-B, C-D......Z என்று நேர் கோட்டில் தொடர்ச்சியாக நகர அவசியமில்லை. அதனால் தான் பல்வேறு கோணங்களை கொண்டது என்று கூறுகிறேன். அவே ஒற்றை கோட்டில் அமைய வில்லை. அவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து புதிய திரை வடிவத்தை கண்டுப்பிடிப்பதே என் திரை வடிவமாகும்.

கேள்வி: புதிய கலாச்சார சூழலில் உள்ளுர் வண்ணத்தை மிக நுட்பமாக கையாளும் திரன் உங்களுக்கு கை வந்திருக்கிறது. அதனுடன் திரைப்படத்தில் கையாளப்படும் களத்திற்கு தகுந்தாற் போல் பொருத்தமாக, மக்களின் அதே இயல்புத் தன்மையுடன் உங்களால் திரைப்படம் எடுக்க முடிந்திருக்கிறதாகவே நான் கருதுகிறேன். அவ்வகையில் நீங்கள் எடுத்த இந்தி மொழி திரைப்படங்களான மந்தன், மண்டி, திரிக்கால், ஜூணுன், அரோகன், சுஸ்மான், சுராஜ்கா சாத்வான் கோடா ஆகியவைகளை நிதர்சனமாக கொள்ளலாம். இப்படங்களில் இந்தி மொழி கையாளப்பட்டிருந்தாலும் அந்தந்த பகுதிக்கேற்ப கலாச்சாரத்தை சிற்சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டிருந்தன. இலுப்பினும் மந்தனை குஜராத்தியிலும், திரிக்காலை கொக்கனியிலும், அரோகனை வங்கத்திலும், சுஸ்மானை தெலுங்கிலும் எடுத்திருக்கலாம். இவைகளை இந்தியில் நீங்கள் எடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதேனும் உண்டா?...
ஷியாம் பெனகல்: பம்பாயில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தி படங்கள் எடுப்பதற்கு மையமாக பம்பாய் திகழ்ந்து வந்தது. அப்படியென்றால் அது வணிக ரீதியான ஒரு தேசிய சந்தை என்று அர்த்தம். பம்பாயிலிந்து தெலுங்கிலோ அல்லது கன்னடத்திலோ, அல்லது தமிழிலோ அல்லது வங்காளத்திலோ படம் எடுப்பது மிக கடினம். அதனால் தான் நான் இந்தியில் படங்களை உருவாக்கினேன். திரைப்படத்தின் பின்புலச் சூழ்நிலையோடு கலக்கும் அம்சங்களை நான் முக்கியமாக கொள்வேன். அந்த பின் புலத்தைக் கூட வெறும் சூழ்நிலைக் கொண்டு மட்டுமே நான் உருவாக்குவதில்லை. கதாப்பாத்திரங்களோடு முற்றிலுமாக பொருந்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நான் கையாள்வேன். வேறு வார்த்தைகளில் கூறிவதானால், சூழ்நிலைக் கூட கதையின் ஒரு கதாப்பாத்திரம் தான். மற்றதைக் காட்டிலும் மிகுந்த விளைகளைக் கொண்டது. அதனோடு கூடவே சூழலும், அதற்கேற்ப வாழும் மக்களின் சூழ்நிலையும் எனக்கு முக்கியமாகப்படுகிறது. தெழுங்கில் திரைப்படங்கள் நான் எடுக்க வில்லை என்ற போதிலும், அதற்கு இணங்கினாற் போல் கதாப்பாத்திரங்களை நான் படைத்திருந்தேன். அத்தகையதே முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகையது நம்பகத்தன்மையால் விளைந்ததாகும். அதனால் தான் அந்த தொடர்புக்கு மிகுந்த கவணம் செலுத்துவதுண்டு. நீங்கள் அதனை “கலாச்சார முதன்மை” என்ற வார்த்தையைக் கூறிக் கொள்ளலாம். ஏனெனில் கலாச்சாரத் தன்மை மிக அவசியமானது. இல்லையென்றால் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையையும், வேறுப்பாட்டையும் அறிந்து கொள்ளாமலேயே போய் விடும். எதையும் பொது கலாச்சாரத் தன்மைக் கொண்டு நீங்கள் பார்க்க முடியாது. அவ்வாறாக ஒன்றைத் தன்மையுடன் எதையும் அணுகினால் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தி விடும்.

கேள்வி: அத்தகைய காலச்சார அம்சத்துடன் நீங்கள் எடுத்த அணுக்கிரஹகம் என்ற படம் கூட சுவராசியமானது தானே. மராத்தி எழுத்தாளர் கணோக்கரின் “குண்டுராவை” மையமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை நிகழ்வான மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு மாற்றி அமைத்திருந்தீர்கள். அந்த படம் முக்கிய கதாபாத்திரத்தின் உளவியல் சார்ந்த பொருள் நிலைக் கொண்டு விரியும் மனவெளியை இடையது. பத்திரிக்கையார்களும் விமர்சகர்களும் அதன் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். அந்த படத்தின் மூல கதைக்கான இடத்தை மாற்றி எடுக்கும் போது, அதற்கு தகுந்தாற் போல் சுழல்களை தேர்ந்தெடுத்து வெற்றியடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

ஷியாம் பெனகல்: சரியாக செய்து வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறேன். விசாகப்பட்டிணத்தை சுற்றியுள்ள கிழக்கு கடற்கரைப்பகுதியையும், பிராமணச் சமுகத்தையும், பிராமண கிராமத்தையும் சரியாகவே படமெடுத்திருந்தேன். இடத்திற்கு தகுந்தாற் போலான கதாபாத்திரங்களை மிகச் சரியாகவே அமைந்திருந்ததாகவே நினைக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்த படம் வந்த போது, குறிப்பாக இலக்கிய உலகில் பெரும் விவாதங்கள் ஏற்படுத்தியது. அதன் பிறகு திரைப்பட ஆர்வலர்களுக்கும், திரைப்படத்தை வெகுவாக எதிர்ப்பவருகளுக்கிடையையும் பெரியளவில் விவாதங்கள் ஏற்பட்டன. இதை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் எத்தகைய பாதிப்பை அந்த படம் ஏற்படுத்தியது என்பதனை. அதனால் தான் இதனை “குடைத்து மதிப்பிடுதல்” என்ற வார்த்தையை நான் ஏற்க மாட்டேன். இதற்கு பதிலாக திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து வேறு விதமாக மக்களை சந்திக்க வைத்திருக்கிறது என்பதையும், அது கலாச்சாரத்தை கொண்டு செலுத்தும் ஊர்தி என்பதாகவும் நான் கொள்வேன்.

கேள்வி: உங்கள் படத்திற்கென்று சிறப்பாக ஒலி அமைப்புகள் கையாள்கிறீர்கள் என்பது தெரிந்த விஷயம். ஆழ்யுணர்வு நினைவிலி மன ஓட்டத்திற்கு இலகுவாக, காட்சியமைப்புக்கு பொறுத்தமா ஒலிக்கொண்ட இசையைக் கூட்டுகிறீர்கள். உதாரணத்திற்கு எடுத்துகொண்டால் நிஷாண்த்தில் உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் சோக இழையோட நரம்பிசை கருவியின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேப் போல் சப்னா அஸ்மியை கடத்திச் செல்லும் போது கூட தூரத்தில் மனிதர்களின் வினோத சப்தமும், தெரு நாய்கள் ஊளையிடும் ஓசையையும் ஊடாட்டமாக அமைத்திருந்தீர்கள். இவ்வகையான காட்சிகள் பார்வையாளர்கள் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக அகலாதவைகள். செவிகளோடு கூடி இணையும் காட்சிகளை உருவாக்கும் திறன் உங்களுக்கு கை வருவது எப்படி?

ஷியாம் பெனகல்: திரைப்படத்தைப் பொருத்த வரையில் ஒலி ஒளி அமைப்புகள் முக்கியமானதும், இன்றியமையானதுமாகும். இரண்டுக்கும் சரிசமமான பங்களிப்பு உண்டு. ஒன்று மற்றொன்றுக்கு ஊக்கமளிக்கக் கூடியது. பெரும்பான்மையான படைப்பாளிகள் இந்த நிதர்சனமான உண்மையை தவற விட்டு விடுகிறார்கள். காட்சியை விவரிப்பதற்கே ஒலி அமைப்பு என்று எண்ணி விடுகிறார்கள். இந்த எண்ணத்தை நான் ஏற்றுகொள்ள வில்லை. ஒலியும் காட்சியும் முழுமையுடையதாக இருக்க வேண்டும். இசையை உணர்வோடு கலக்கும் வகையில் கூட்ட வேண்டும். அத்தகைய ஒலி கூட பலதரப்பட்ட இசைக் குவியலாக அமைந்து விட கூடாது. காட்சிக்குரிய பரிணாமத்துடன் திகழ வேண்டும். அதற்கு ஒத்த இணைப் போல பரிணமிக்க வேண்டும். திரைப்படத்தில் அந்த ஒலி காட்சிக்கு புனைவு தந்து நகர்த்தும் திறனை கொண்டிருக்க வேண்டும். அத்தகையதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அனைத்தும் உன்னத நிலை பெறும்.

கேள்வி: நீங்கள் எடுத்த கலியுக், மகாபாரத்தின் கதாபாத்திரங்களுக்கு இணையான நவீன கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. இக்கால பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு அது முன்னோடியானதாகும். புராண, இதிகாசங்களை திரைவடிவத்திற்கு உட்படுத்தி எடுக்கப்படும் விதம் பற்றி கூற முடியுமா?

ஷியாம் பெனகல்: இதிகாசங்களை அப்படியே எடுக்க நான் முனைய வில்லை. இருப்பினும் மகாபாரத்திலிருந்து மாதிரியை எடுத்து நான் கையாண்டேன். ஏனெனில் அவைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய பிரதிகள். நான் கலியுக் தொடர் தயாரிக்கையில் மாறி வரும் இந்திய சமூகத்தில் தொழில்த்துறை இயக்கத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு எனக்கிருந்தது. குறிப்பாக குடும்பத் தொழிற்சாலை- இப்போது அதன் நிலை என்ன அல்லது அதன் எதிர்காலம் எப்படி- பண்ணை முறை தொழிலிருந்து பெரும் முதலாளித்துவ தொழில் வகைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தைத் தான் கலியுக்கில் கொண்டு வர நான் எத்தனித்தேன். இப்போது அது தான் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு கருப்பொருளாக விளங்கி வருகிறது. (புன்னகை) அவர்கள் திரைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தான் என்னால் கூற முடியும்.

கேள்வி: மாற்றம் என்ற கருத்தாக்கம் என்றவுடன் உங்கள் படம் திரிக்கால் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. அது ஒரு சிக்கலான படம். போர்ச்சுகீஸிடமிருந்து விடுதலை அடைவதற்கு முந்தய கோவாவின் தளம் அது. அந்த படத்தில் மாற்றம் எனும் விஷயம் வலிந்து செய்யப்பட்டிருந்தது. உண்மையான காலகட்டமும், திரைப்படத்தின் காலம் என்ற கருத்தாக்கமும் உங்களை மாற்றம் என்ற தத்துவார்த்தமும், திரைப்படமென்ற மரபொழுக்கத்தில் காலம் மற்றும் வெளியின் அவசியம் உங்களுக்கு உதவியிருப்பதாக எண்ணுகிறீர்களா?
ஷியாம் பெனகல்: காலம் ஒரு சுவராசியமான கருத்துருவம். ஏனெனில் உங்களது மனதிலும் காலமிருக்கிறது. அந்த காலம் யதார்த்தில் சிந்திக்க வைக்கிறது. காலம் பன்முகப்பட்டது மட்டமல்ல. மனிதனூடாக சென்று பெரிதும் அகர்ஷபடுத்தவும் செய்யும். இலக்கியம் இந்த கருத்துருவத்தில் வெகுவாக பயணித்து செல்லக் கூடியதாக இருக்கிறது என்பதனை நீங்கள் அறிந்தது தான். ஆனால் திரைப்படத்தில் காலம் என்ற கருத்துருவத்தை உருவாக்குவது கடினமானது. திரைப்படத்தின் இயல்பு அதற்கு தடையாகவும் இருக்கிறது. இக்கால திரைப்படங்கள் ஒற்றை சிந்தனைக்குள் சிக்கிக் கிடக்கின்றன. தனி நபர் சார்ந்த மனவெளியை வரைந்தெடுப்பது மிக கடினம். உங்களிடம் உள்ள உள்மன விஷயங்களை பலவகை இலகுவான தன்மைகளை வடிவமைக்கக் கூடியது. உதாரணத்திற்கு, நான் ஒரு விஷயத்தை தருகிறேன். இங்கே அமர்ந்து இருநூறு வருடங்களுக்கு முன் எண்ணிப்பாருங்கள். பிறகு விரைந்து அதன் நோக்கி நீங்கள் செயல்படுவீர்கள். அதில் ஒரு தனித்துவமான உணர்வுடன் உங்கள் மனம் பயணிக்கும். அப்போது இலக்கியத்தில் ஒரு வடிவம் பிறக்கும். ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு எளிதல்ல. எனக்கு அதில் தான் ஆர்வம் அதிகம். திரைப்படத்தில் என்னால் முடிந்த வரை அந்த பிரதேசத்தில் பிரவேசித்து கண்டறிய முயல்வேன். உநாரணத்திற்கு சுராஜ் கே சாத்வான் கோடாவில் அவ்வகை வடிவத்திற்காக உழைத்தேன். சர்தாரி பேகத்தில் அதே நோக்கத்தில் முயற்சித்து கொஞ்சம் வெற்றியும் பெற்றேன்.

கேள்வி: உங்களது படம் சுராஜ் கே சாத்வான் கோடா, தர்மவீர் பாரதியின் இந்தி நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அதன் திரைவடிவம் மிகுந்த சிக்கலும், அகவுணர்வும் கொண்டது. இதைப் போன்ற உருவரை மாதிரியை நீங்கள் இதற்கு முன் செய்ததில்லையே! இந்த படம் கூட புனைவுக்கான வழிவகை என்றே நான் எண்ணுகிறேன். மெய்யியலுக்கும் மீமெய்யியலுக்கும் இடையே மறைப்பொருளான வேறுப்பாட்டை அடூர் கோபால கிருஷ்ணனின் “அனாந்தரம்” படத்தைப் போல் நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். அதில் கூட நீங்கள் மீண்டும் ஒருமுறை காலம் என்ற கருத்தாக்கத்தையும், வெளியையும் கையாண்டு வெற்றியடைந்திருக்கிறீர்கள். ரஷிய இயக்குநர் ட்ராக்கோவ்ஸ்கி(Trokovsky)யைப் போல் காலக்கட்டதின் குறிப்பிட்ட காட்சியை உயிரோட்டத்துடன் வேறுப்படுத்திருந்தீர்கள். திரைப்படத்தின் தலையாய பாத்திரம் மூன்று வெவ்வேறு விதமான தொனியை வெளிப்படுத்தும் படி இருந்தது. எப்படி நீங்கள் இவ்வாறெல்லாம் திட்டமிட்டீர்கள்?

ஷியாம் பெனகல்: ஆம், திட்டமிட்டது தான். உண்மையில் அகக் கூறினை வலியுறுத்திக் காட்டவே விரும்பினேன். ஏனெனில் உண்மையின் இயல்பு ஏதோ ஒரு வகையில் மிகவும் ஈர்க்கக் கூடியது. என்னையும் உண்மையின் இயல்புத் தான் மிகவும் ஈர்த்தது. உண்மையில் நிதர்சனத்தை விட வேறு எதுவும் சிறந்ததாக இல்லை. ஏனெனில், அதனுடன் தொடர்பு கொண்டவனைப் பொறுத்தே உண்மையின் அகவெளி புலப்படப்படும். இது கண்கூடான நிகழ்ச்சி போன்றதல்ல. புலன்களால் உணரக்கூடிய நிகழ்வு. உண்மை என்பது ஏதோ ஒன்று என்பதினால் பார்வையாளர்களுக்கு அணுகத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. அவ்வாறு செய்வதற்கே பலவலையான ஒலிநுட்ப பண்புகளை நான் கையாண்டேன்.

கேள்வி: தூர்தர்ஷனுக்காக நீங்களெடுத்த பாரத் ஏக் கோஜ் உங்களது பணிகளிலேயே மிக்க ஆர்வத்துடன் கூடிய துணிகர முயற்சி. அதனை மிகச் சிறந்த கலைப்படைப்பாக எண்ணுகிறேன். அதனை ஒரு நவீன காவியமெனவும் கருதுகிறேன். நேருவின் செவ்வியலைக் கொண்டு இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றினை நீங்கள் காட்சியாக்கிய விதம் மிகவும் பிரமிக்கத்தக்கது. இந்த மெகாத்தொடரைப் பற்றி ஏராளமாக ஆராய்ச்சிகள் நடந்தேறின, ஒவ்வொர் உட்கதையிலும்(episode) உங்களின் மனப்போக்கினை பின்னணிக் குரல் கொண்டு வலியுறுத்திய அதே வேளையில் நேருவின் கருத்தை சூத்திரதாரி முதலிலும் தொடக்கத்திலும் வெளிப்படுத்துவார். வாழ்மொழியாகவும், மரபு வழி நாட்டுப்புற கதையாடருடனும் மற்றும் பாரம்பரிய இயல், இசை, நாட்டியங்களுடனும் பொருத்தமாக நீங்கள் தந்த விதம் உண்மையான இந்தியத் தன்மையை கொண்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு பல்வேறு கோணத்தில் புதிய அனுபவத்தை தர கூடியவை. அனைவராலும் விரும்புவதற்குரிய இத்தொடரை உருவாக்கியதில் மிகுந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் அல்லவா?

ஷியாம் பெனகல்: ஆம், அந்த அனுபவம் அற்புதமானது, இதுப் போன்ற செயல் முழு வாழ் நாளில் ஒருமுறை தான் கிட்டும். மிக கடினமானதும் கூட. பாத் ஏக் கோஜ் உருவாக்கியதில் எனக்கு தனித்துவமான அனுபவம் கிட்டியது. ஏனெனில், அது நமது வரலாற்றை புரிந்து கொள்ள உதவியது. மற்றவர்களுக்காக நான் உருவாக்கிய இத்தொடரின் மூலம் எனது அனுபவத்தினை நான் பயின்றேன். வரலாற்றை பயில்வதென்பதை காட்டிலும் வரலாற்றைப் பற்றி படமெடுப்பதில் ஒரு வித சாகச உணர்வுக் கிட்டியது.

கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி- உங்கள் பார்வையில் கலையின் நோக்கம் தான் என்ன?

,ஷியாம் பெனகல்: கலையின் நோக்கம் பற்றி கூறுவது மிக்க் கடினம். இருப்பினும் அது வாழ்க்கைக்குள் கூர்ந்து பார்க்கவும், அனுபவங்களை பெறவும், வித்யாசமான உணர்ச்சிகளை பெறுவதற்காகவும் என்று எண்ணுகிறேன். மனதை கிளர்ந்தெடுக்கக் கூடியதாகவும், அறிவுக்குரியதாகவும், புலனுணர்வு சார்ந்த விஷயமெனவும் கொள்ளலாம். எந்த வித கலைப்படைப்பின் ஆக்கமும் குறிப்பிடத்தக்க உள்ளுணர்வில் இயங்கும் ஆளுமையை கொண்டதாகும்.

தமிழில்: க. செண்பகநாதன்.

Friday, 28 August, 2009

கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்


கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்

கிம் கி-டுக் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20 ஆம் நாள் தென் கொரியாவில், கியாங்சாங் என்ற மாகாணத்தில் உள்ள பாங்வா என்ற ஊரில் பிறந்தார். அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் பாங்வாவிலிருந்து சியோலுக்கு குடிப்பெயர்ந்தார்கள். தனது 17 ஆம் வயதிலேயே பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை கிங் கி-டுகிற்கு ஏற்பட்டது. அதன் பின்னர் தொழிற்சாலை ஒன்றில் வேலையில் சேர்ந்தார். பின்னர் தனது இருபதாவது வயதில் கப்பல் பணியில் சேர்ந்தார். அங்கு ஐந்து வருடங்கள் வேலைப் பார்தார். உடல்நிலையை தேற்றிக் கொள்ளும் படி அவர்கள் அறிவறுத்தியதன் பேரில் அந்த பணியை விடுத்து தேவாலையத்தில் பார்வையற்றவர்களை கவனிக்கும் பணியை மேற்கொண்டார். மத போதகராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அப்போது இருந்தது. தான் வைத்திருந்த அனைத்து பணத்தையும் எடுத்துகொண்டு பாரிஸ் செல்ல விமான டிக்கெட் வாங்கினார். அங்கு சென்றார், தான் வரைந்த ஓவியங்களை பாரிஸ் நகர வீதிகளில் அலைந்து திரிந்து விற்றார். இவ்வாறாக 1990 முதல் 1992 வரை பாரிஸில் கழித்தார். தென் கொரியா திரும்பியதும் தனது புதிய ஆர்வத்தை திரைப்படத்தின் மீது திருப்பினார். திரைக்கதை எழுவதற்கு பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனம் 1993 ஆம் ஆண்டு நடத்திய திரைக்கதைக்கான போட்டியில் கிம் கி -டுக் முதல் பரிசை வென்றார். அதையடுத்து 1994 ஆம் ஆண்டு கொரிய திரைப்பட கழகம் நடத்திய திரைக்கதைக்கான போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார். அதே நிறுவனம் 1995 ஆம் ஆண்டு நடத்திய போட்யில் முதல் பரிசை வென்றார். கிம் கி-டுக் 1996ஆம் Crocodile என்ற திரைப்படத்தை எடுத்தார். சியோலில் உள்ள ஹான் நதிகரை பகுதியில் வாழும் ஒருவனைப் பற்றிய படம். தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் பிணங்களை மீட்பதை தொழிலாக கொண்டிருக்கும் அவன், தற்கொலை முனையும் ஒரு பெண்ணை காப்பாற்றும் அவன், அவளை கற்பழித்து பயன்படுத்துவதாக கதை அமையப்பெற்ற படம் அது. அப்படத்தினை முன்னிறுத்த கொண்டு செல்லும் முனைப்பில் பத்திரிக்கையாளர்களிடம் திரையிட்டு கிம் கி-டுக் ஆதரவு கோரினார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக ஆதரவு காண்பிக்க வில்லை. இதனிடையே புசான் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட பின் வெகுவாக பேசப்பட்டது. அடுத்ததாக Wild Animals என்ற படத்தை எடுத்தார். மூன்றாவதாக 1998 ஆம் ஆண்டு அவர் எடுத்த படம் Birdcage Inn. இந்த படம் 28 வயதுடைய பெண்ணை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். Birdcage Inn என்ற தங்கும் விடுதியில் ஏற்கனவே பணியாற்றிருந்த ஒரு விபச்சாரிக்கு பதிலாக வரும் “ஜின்- அ” பற்றிய படம். அடுத்ததாக 2000 ஆம் ஆண்டு Real Fiction மற்றும் The Isle என்ற இரு படங்களை எடுத்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு Address Unknown மற்றும் Bad Guy என்ற இரு படங்களை எடுத்தார். அதையடுத்து 2002 ஆம் ஆண்டு The Coast Guard என்ற படத்தை எடுத்தார். தென் கொரிய கடலோர காவற்படை வீரன் ஒருவன் வடகொரிய உளவாளியை கொன்று விடுகிறான். மறைவில் பெண் ஒருத்தியுடன் ஆலிங்கணம் செய்துகொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடந்து விடுகிறது. இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொல்லும் அவனுக்கு எதிராக அங்கு மக்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். அந்த கொலையை கண்ட அந்த பெண் புத்தி போதலித்து போகிறாள். கிம் கி- டுக்கின் ஏனைய படங்கள் போலவே வன்முறை, பெண், பெண் உலவியல், பாலியல், பிரிந்த இரு தேசங்களினால் ஏற்படும் இழப்புகள் போன்றவைகளை கொண்டது தான் The Coast Guard படம். அடுத்ததாக அவர் எடுத்த படம் Spring, Summer, Fall, Winter... and Spring . . அவரது படங்களிலியே மிக முக்கியமானதாக கருதிப்படும் படம் இது. இதனை 2003 ஆம் ஆண்டு எடுத்தார். நான்கு பருவங்களை கொண்டு ஐந்து பகுதிகளாக இப்படம் எடுக்கப்பட்டது.
இளவேனிற் காலம்:
இளவேனிற் காலத்திலிருந்து படம் தொடங்குகிறது. மலைக்கு நடுவே ஏரி, அதன் நடுவே ஒரு புத்த கோயிலில். அதில் ஒரு புத்த துறவி வசிக்கிறார். அவரோடு ஒரு சிறுவன் உள்ளான். தியானம் செய்வதும், கடவுள் வழிப்பாடு செய்வதும் தான் துறவியின் முக்கிய வேலை. வயதான புத்த துறவியாக ஓ- ங்-சூவும், சிறுவனான சியோ ஜியோ யாங்கும் நடித்திருந்தார்கள். அந்த புத்த கோயிலிருந்து கரைக்கு செல்ல ஒரு படகு உண்டு. அதை கொண்டு தான் இருவரும் காட்டுக்கு சென்று மூலிகையை பறித்து வருவார்கள். ஒரு நாள் அந்து சிறுவன், காட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் ஒரு தவளை பிடித்து, கல்லை அதன் முதுகில் கட்டி விடுகிறான். அதே போல் பாம்பை பிடித்தும் கல்லை கட்டி விடுகிறான். மீனை பிடித்து அவ்வாறே தூலினால் கட்டுகிறான். இதை கண்ட புத்த துறவி, உறங்கி கொண்டிருக்கும் அச்சிறுவனின் முதுகில் ஒரு கல்லை கட்டி விடுகிறார். காலையில் எழுந்த அச்சிறுவன் துறவியிடம் அழுகிறான். அந்த இரு உயிரினங்களையும் விடுவித்தால் தான் அவிழ்த்து விடுவதாக துறவி கூறுகிறார். அவன் போய் முதலில் தவளை முதுகில் கட்டியிருக்கும் கல்லை அவழ்த்து விடுகிறான். பாம்பு இறந்து விடுகிறது. அதே போல் மீனும் பாறை இடுக்கில் இறந்து கிடக்கிறது. அச்சிறுவன் தேம்பி தேம்பி அழுகிறான்.
கோடைக்காலம்:
அடுத்ததாக கோடைக்காலம், அப்போது அச்சிறுவன் வளர்ந்து அடுத்த பருவமான இளைஞனாகிறான். குளத்தின் கரை முகப்பில் இருக்கும் வண்ணம் தீட்டிய கதவு திறக்கிறது. அந்த இளைஞன் படகை செலுத்திகொண்டு கரைக்கு வருகிறான். காட்டின் வழி நடக்கிறான். இரு பாம்புகள் புணைர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இது அவளது காதல் கொள்ளும் பருவம் கொண்டிருப்பதை குறியீடாக உள்ளது. காட்டுப்பாதை வழியாக நவ நாகரிக உடையணிந்த தாயும் மகளும் வருகிறார்கள். உடல் நலமின்றி இருக்கும் தன் மகளை புத்த கோயிலுக்கு அழைத்து வந்திருப்பதாக கூறுகிறாள் தாய். அவர்களை படகில் ஏற்றி புத்த கோயிலுக்கு அழைத்து வருகிறான். வயதான புத்த துறவியிடம் தனது மகளை குணமாக்கும் படி கூறி தாய் சென்று விடுகிறாள். அவளுக்கு மூளிகை மருத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனிடையே அந்த பெண் மீது மோகம் கொள்கிறான். ஒரு நாள் உறங்கி கொண்டிருக்கும் அவளது மார்பில் கை வைக்கிறான். விழித்து கொள்ளும் அவள், அவனது கண்ணத்தில் அரைகிறாள். பிறகு அவளோடு ஆலிங்கணம் செய்கிறான். அவளுடனான பாலுறவு தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ஒரு நாள், படகில் இருவரும் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறே படகில் ஒன்றாக உறங்கி கொண்டிருப்பதை முதிய துறவி பார்த்து விடுகிறார். “உனக்கு குணமாகி விட்டதா? என்று கேட்கிறார் முதிய துறவி. “ஆம்”, என்கிறாள். “அப்படியென்றால் உனக்கு இனி இங்கிருக்க அவசியமில்லை. உனது இடத்திற்கு நீ சென்று விடலாம்”, என்கிறார். “இல்லை, அவள் செல்ல வேண்டாம்,” என்று கதறுகிறான் அந்த இளைய துறவி. “காமம் பற்று கொள்ள ஆசைப்படும். அதுவே கொலை செய்ய தூண்டுதலாக இருக்கும்”, என முதிய துறவி கூறுகிறார். அவள் அங்கிருந்து புறப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். அந்த இளைய துறவி ஆத்திரம் கொள்கிறான். அந்த பெண்ணை தேடி புறப்படுகிறான். அங்கிருக்கும் புத்த சிலையை எடுத்து கொண்டு நள்ளிரவில் புத்த கோயிலை விட்டு போய் விடுகிறான். இலையுதிர் காலம்:
பல வருடங்கள் கழிந்தது. இதனிடையே தனக்காக ரொட்டித் துண்டு வாங்கி வருகிறார் அந்த புத்த துறவி. ரொட்டி சுற்றப்பட்ட காகிதத்தில் முப்பது வயதுள்ள இளைஞன் ஒருவன் தனதி மனைவியை கொன்று விட்டு அந்த முதிய புத்த துறவி கேட்கிறார். சோகம் தழும்பும் முகத்துடன் அவன்
தப்பியோடி விட்டதாக படத்துடன் செய்து போடப்பட்டிருப்பதை காண்கிறார். அந்த இளைஞன் மீண்டும் அந்த புத்த கோயிலுக்கு திரும்பி வருகிறான். ஏரியின் வாயிற் கதவை திறந்து கொண்டு நிற்கிறான். படகுடன் வரும் முதிய துறவி, “பெரிதாக வளர்ந்து விட்டாயே,” என புன்முறுகலுடன் படகில் எறுகிறான். இருவரும் ஏரி நடுவே இருக்கும் புத்த கோயிலுக்கு வருகிறார்கள். “உனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதல்லவா. சுவராசியங்களை கூறு.” என்றார். “என்னை மட்டுமே காதலிப்பதாக கூறிய அவள், காதலுக்கே பாவம் செய்து விட்டாள். வேறொருவனோடு போய் விட்டாள்.” என்கிறான். “ இதற்கு முன் இவ்வுலகில் வாழும் மனிதர்களை நீ அறிந்திருக்க வில்லை. சில சமயங்களில் நமக்கு பிடித்த பொருட்களை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். உனக்கு எது பிடித்திருக்கிறதோ, அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் அல்லவா”, என்று அந்த முதிய புத்த துறவி ஆறுதல் கூறுகிறார். அவன் சமாதானம் அடையவில்லை. இதனிடையே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் அவனை அடித்து தொங்க விடுகிறார். ஒரு நாள் போலிஸ் அவனை கைது செய்கிறது. காலம் கடக்கிறது. தந்தனியாக இருக்கும் முதிய துறவி, படகில் விறகுகளை அடுக்கிக் கொண்டு, கீழே மெழுகுவர்த்தியை கொளுத்தியவாறு தன்னைத் தானே மூச்சை அடக்கிக் கொள்கிறார்.
பனிக்காலம்

அடுத்ததாக பனிக்காலம், சிறைப்பட்டுப் போன அந்த இளைய துறவி இளைய பருவத்தின் முதுநிலையில் வருகிறாள். அந்த வேடத்தில் இயக்குநர் கிம் கி-டுக் நடித்திருக்கிறார். ஏரி பனியால் உறைந்து கிடக்கிறது. திரும்பும் அந்த சிறையிலிருந்து திரும்பும் அவன், தன்னைத் தானே மடித்து கொண்டு எரிந்து போன முதிய துறவியின் சாம்பலிருந்து எஞ்சியதை ஒரு சிவப்பு துணியில் சுற்றுகிறான். பிறகு அங்கு கிடைக்கும் பழைய தீயான புத்தகத்திலிருந்து தியானங்களை பயில்கிறான். இதனிடையே ஒரு பெண் முகத்தை துணியால் சுத்திக்கொண்டு கை குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு வருகிறாள். அங்கு வழிப்பட்டு விட்டு குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நள்ளிரவு பொழுதில் ஓட எத்தனிக்கையில், தண்ணீருக்காக இளையத் துறவி தோண்டிய குழியில் விழுந்து மடிந்து விடுகிறாள். காலையில் இளைய துறவி எழுந்து பார்க்கையில் கை குழந்தையை புத்த கோயிலில் காண்கிறான். பிறகு உறைந்து கிடக்கும் குளத்தில் நடந்து வரும் அவன், தான் தோண்டிய குழியில் அவள் விழுந்து இறந்து கிடப்பதை காண்கிறான். தனது இரு முதுகில் கயிற்றைக் கொண்டு உருண்டை வடிவ கல்லை கட்டி இழுத்து கொண்டு மலை உச்சிக்கு செல்கிறான். தான் கொண்டு வந்த புத்தர் சிலையை அங்கு வைத்து தியானம் செய்கிறான்.

மீண்டும் இளவேனிற் காலம்

இறுதியாக இளவேனிற் காலம் மீண்டும் வருகிறது. கைவிடப்பட்ட குழந்தையுடன் அந்த இளைய துறவி புத்த கோயிலில் வசித்து கொண்டிருக்கிறான். அவன் வளர்ந்து சிறுவனாகிறான். இப்போது அவனுக்கு அச்சிறுவன் சீடனாக இருந்து வருகிறான். ஆமையை சித்தரவதைச் செய்வதும், அந்த இளைய துறவியை சிறுவயதில் செய்ததைப் போல் பாம்பு, மீன், தவளை போன்றவைக¬ளின் உடலில் கற்களை நூலினை கட்டியும் சித்தரவதை செய்து வந்தான்.
இப்படத்தைப் பொருத்தவரையில் இன்பம், கோபம், சோகம், சந்தோஷம் நான்கு பருவ நிலைகளைப் போல் ஒரு சங்கிலித் தொடர்புகளாக பின்னி வருவதை திரைப்படமாக எடுத்துள்ளார்.

Friday, 21 August, 2009

ஷியாம் பெனகல்


ஷியாம் பெனகல்-1


ஷியாம் பெனகல் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹதராபாத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமுல்கேரி என்ற ஊரில் பிறந்தார். சாதாரண நடுத்தர சரஸ்வாத் பிராணமன குடும்பத்தை சேர்ந்தவர். ஷியாம் பெனகலின் குடும்பத்தின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தென் கனரா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை ஸ்ரீதர் பெனகல் சினிமா துறையில் நிழல்ப்பட கலைஞராக பணியாற்றிவர். ஸ்ரீதர் பெனகல் தொழில் முறை நிழற்பட கலைஞர் என்றபோதிலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்தார்கள். ஷியாம் பெனகலின் தந்தை ஒரு சுகந்திர போராட்ட வீரர். காந்திஜியால் 1921 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றியவர் ஸ்ரீதர் பெனகல், அப்போது ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக அவர் மீது கைது உத்தரவு பிரபிக்கப்பட்டது. அதையடுத்து டில்லியிலிருந்து ஸ்ரீதர் பெனகல் தப்பித்து ஹதராபாத் வந்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற சில மாதங்களில் ஷியாம் பெனகல் தனது பள்ளிப்படிப்பை புனித அனிஸ் மடப்பள்ளியில்(convent school) தொடங்கினார். அதன் பிறகு தனது உயர்நிலை பள்ளிப்படிப்பை பிரோட்டஸ்ஸடாண்ட் மிஷினரியால் நடத்தப்படும் வெஸ்லி உயர்நிலை பள்ளியில் தொடர்ந்தார். அங்கு அவருக்கு மகிழ்ச்சியற்ற நிலை உருவானதால் மதசார்பற்ற தேசிய பள்ளி என்று அழைக்கப்படும் மக்பஃப் உயர்நிலை பள்ளிக் கல்லூரில் தனது படிப்பை தொடர்ந்தார். ,
ஷியாம் பெனகலின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவ்வகையில் ஷியாம் பெனகலும் பார்வாட் பிளாக் கட்சியின் உறுப்பினரானார். .அதேப் போல் அவரது மூத்த சகோதரரான சுதர்ஷன் ஒரு ஓவியர், தனது மாமாவுடன் சேர்ந்து கல்கத்தாவில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கம்யூனிச கொள்கையில் பெரும் பற்றுகொண்டவரான அவர், ஏராளமான கம்யூனிச நூல்களை தனது தம்பியர்களுக்கு அனுப்பிவித்தார். அவைகளில் எய்ன்ஸ்டின் மற்றும் புடோவிகினின் புத்தகங்களும் அடங்கும். இவைகளினால் ஷியாம் பெனகலுக்கு பெருமளவில் உந்துதல் ஏற்பட்டது. வால் என்ற ஊரில் பிறந்தார். ஷியாம் பெனகலை பொருத்தவரையில் தனது மாமாவான பி. பி. பெனகலிடமிருந்தே பல்வேறு விஷயங்கள் கற்றுணர்ந்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா, அறிவியல் பேன்றவைகள். ஷியாம் பெனகல் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயிலும், கல்லூரி வாழ்க்கை முழுவதிலும் சினிமாவே வியாபித்திருநதது. அவர் முதலாவதாக பார்த்த ரஷியப்படம் Childhood of Maxim Gorky . இவ்வாறாக ஷியாம் பெனகல் தீவிர சினிமா மீது தனது ஆர்வத்தை வளர்த்துகொண்டார். சுதேச்சையான தனது குடும்ப சூழலில் காந்திய கொள்கையுடனும் மாக்ஸிய சித்தாந்தத்துடனும் தன்னை வளர்த்துகொண்டார் என்றாலும் அவரது இளைய பிரயாயத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நேதாஜியின் செயல்பாடுகள் மீது ஷியாம் பெனகலுக்கு மிகுந்த பற்றி இருந்த காரணத்தால் தான் அவரைப் பற்றி படம் எடுக்கவும் உந்துதலாக அமைந்தது. இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நேரு பேசிய “சினிமாவின் ஆகிருதை” என்ற உரையை ஆற்றினார். அதில் ஷியாம் பெனகலும் பார்வையாளராக கலந்துகொண்டு உரையை கேட்டார். அதையடுத்து காட்சி ஊடகத்தின் மீது ஷியாம் பெனகலுக்கு பெரிய ஆளவில் ஈர்ப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்தி திரைப்பட நடிகர் குரு தத் ஷியாம் பெனகலுக்கு நெருங்கிய உறவினர் ஆவார். கோடை விடுமுறையை ஷியாம் பெனகலின் குடும்பத்துடன் ஹதராபாத்தில் குரு தத் கழிப்பது வழக்கமாக கொண்டிருந்தார். இத்தகைய விஷயங்கள் ஷியாம் பெனகலுக்கு தனது 12 ஆம் வயதிலேயே படம் எடுக்க உந்துதலாக அமைந்தன. தனது முதல் படமாக சுட்டியன் மோஜ் மாஸா(Fun in the holidays) வை பதிரெண்டாவது வயதில் ஷியாம் பெனகல் எடுத்தார். தனது தந்தையின் 16mm காமிராவைக் கொண்டு அந்த படத்தை எடுத்து முடித்தார். அதற்கு அவரது மூத்த சகோதரர் உதவியாக இருந்தார். “சுற்றுலா மேற்கொள்ளும் குடும்பத்தினர் தங்களது குடுபத்தில் உள்ள ஒரு குழந்தையை ரயிலில் தொலைத்து விடுகிறார்கள். அதனை தேடுவதாக அமைந்தது தான் அந்த படம். இந்த காட்சிகளை பிறகு தான் எடுத்த குழந்தைகளுக்கான படமான சரண்தாஸ் சோர் என்ற படத்தில் ஷியாம் பெனகல் பயன்படுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்தே ஷியாம் பெனகல் குறிப்பட்ட இயக்குநர்களின் படங்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினார். வியாழக்கிழமைகளில் மதிய காட்சி சினிமா பார்ப்பதற்காகவே பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சில தருணங்களில் திரையரங்கில் அவர் மட்டும் இருக்கும் சூழல் எற்படவே அரங்க உரிமையாளர்கள் படம் போட மறுத்து விடுவதுண்டு. குறைந்தது ஐந்து நபர்களாவது இருக்க வேண்டும். அப்போது தான் மின்சார கட்டனத்திற்காவது கட்டுப்படியாகும் என்று கூறிவிடுவார்கள். அப்போதெல்லாம் ஷியாம் பெனகல் பள்ளிக்கு சென்று நான்கைந்து மாணவர்களை அழைத்து வருவார். அப்படி அவர் பார்த்தது தான் vittorio de sica வின் “Bicycle thieves”, இப்படியாக தான் அவரது ஆர்வம் தொடர்ந்தது. தனது பள்ளி படிப்பை மக்பஃப் உயர்நிலை பள்ளிக் கல்லூரியில் முடித்த பிறகு ஒஸ்மானியா பல்கலை கழகத்தின் கீழுள்ள நிஜாம் கல்லூரில் தனது கல்லூரிப்படிப்பை பொருளாதார பிரிவு மாணவராகத் தொடங்கினார். நிஜாம் கல்லூரி ஷியாம் பெனகலுக்கு பலவேறு ஊற்று கண்களை திறந்து விட்டது. குறிப்பாக வைதீஸ்வரன், தீவிர மாக்ஸியவாதியான அவர் ஷியாம் பெனகல் இடதுசாரி சிந்தனைகள் மீது ஆழ்ந்து நோக்க காரணியாக இருந்தார். இந்திய ஆட்சிப்பணியான மிகிஷி க்கு தேர்வாகியும் அதனை விடுத்து வைதீஸ்வரன் தெழுங்கான போராட்டத்தில் ஈடுப்பட்டார். பிறகு பேராசியர் கிருஷ்ண மேனன், பேராசியர் செட்டி ஜெகன், பேராசியர் மயர்ஸ் போன்றவர்களின் பயிற்றுவிப்பு பெனகலுக்கு மிகுந்த பயனளித்தன. ஒஸ்மானியா பல்கலை கழக நூலகம் அவருக்கு அமெரிக்க, பிரஞ்ச் ஜெர்மன், ரஷிய இலக்கியங்களை பயிற்றுவித்தது. ஸ்டின்பெக், ஹம்மிங்வே, ரில்கி, தாமஸ் மண் போன்றவர்களின் படைப்புகள் ஷியாம் பெனகல் மிகவும் கவர்ந்தன. கல்லூரியில் பல்வேறு நாடகங்களை இயக்கிய அவர் டி. எஸ். எலியட்டின் “Murder In The Cathedral” என்ற நாடகத்தை இயக்கியும் நடிக்கவும் செய்தார். அக்காலகட்டத்தில் தான் ஆங்கூர் என்ற சிறுதலையினை எழுதினார். அந்த சிறுகதை தான் திரைப்படமாக உருபெற 14 ஆண்டுகள் ஆனாது. தனது நெருங்கிய உறவினரான குரு Mr &Mrs 55, CID, Pyaasa, Kaagaz ke phool போன்ற வெற்றிப்படங்களை எடுத்தது ஷியாம் பெனகலுக்கு சினிமா மீது மேலும் ஆர்வமும் திறனும் கூடியது. இருப்பினும் குரு தத் பாணி திரைப்படங்கள்எடுக்க அவருக்கு ஆர்வம் இல்லை.

( தொடரும்)

Tuesday, 21 July, 2009

உணர்விரல்கள்


நித்திரையில் திறந்த கதவினூடாக
உள் நுழையும் ஞாபகங்கள்.

பியானோவின் கருப்பு வெள்ளை

சுருதி கட்டைகளை
மேலெழுந்தவாறு
மீட்டின
உணர்விரல்கள்.

விரல்கள் கருப்பு வண்ண கட்டைகளை

மீட்டும் போது
மரக்கிளைகளிலிருந்து
பறவைகள்
பறப்பதும்

வெள்ளை கட்டையை மீட்டும் போது

அவைகள் வந்து அமர்வதுமாக

இருந்தன.

Sunday, 19 July, 2009

உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை


உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை-
க. செண்பகநாதன்


உலகமயமாதல் குறித்து விஷயத்தில் பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. உலகமயமாதல் என்றால் நாடுகளுக்கிடையே எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளித்து முதலீடு செய்யப்படும் முறைமை ஆகும். உலகமயமாதல் உடைப்படும் காலகட்டத்தை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு இது புதிதாக வந்த ஒன்று என்றாலும் இதன் ஆதி அந்தம் பல்வேறு முறைகளில் வேவ்வேறு நாடுகளில் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது. கடந்த 1944 ஆம் ஆண்டு இதன் போக்கு இருந்ததாக கண்டறியப்பட்டாலும் 1981 ஆம் ஆண்டில் தான் பொருளாதார நிபுணர்கள் உலகமயமாதல் என்ற சொல்லாடலை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக இதன் செயல்பாடு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது பொதுமை படுத்த முடியாது. இந்தியாவில் 1990களின் தொடக்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன் விளைவால் எஃகு, மருந்து பொருள், பெட்ரோலியம், ரசாயனம், ஜவுளி, சிமெண்ட், சில்லறை வணிகம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடு குவியத் தொடங்கியது. இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு. சுமார் 110 கோடி மக்களின் சந்தையை கருத்தில் கொண்டே முதலீடுகள் குவிந்தன. குறுகிய காலத்திற்குள்ளாகவே பெரும் முதலீடுகள் வந்து குவிந்தன. அத்தகையது நீடித்த வளர்ச்சியாக அமையவில்லை என்பது இப்போது நிரூபனம் ஆகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாதலால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்ளோடு போட்டிப் போட முடியாமல் பெரும் இழப்புகளை சந்தித்தன. உற்பத்தித் துறை, மருந்து, ரசாயனம், எஃகு போன்ற துறைகளில் ஏராளமானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. உலமயமாதல் இவ்வுலகத்திற்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்தியுள்ளது. வறுமை அதிகரித்தும், சமச்சீரற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு மக்களை ஆட்படுத்தியும், அநீதியை ஏற்படுத்தியும், காலகாலமாக கடைப்பிடித்து வந்த கலாச்சாரதிற்கு ஊறு விளைவித்தும், இன்னும் பல உலகலாவிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதலினால் (ஒரு நாட்டிற்குள்ளாகவே) வருமான ஏற்றத் தாழ்வுகள் பெரியளவில் நிகழ்ந்திருப்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள்(120 கோடி மக்கள்) நாள் ஒன்றுக்கு 1 டாலர்(அதாவது இந்திய ரூபாய்க்கு ரூ.50 ) மட்டுமே வருமானமாக பெற்று வருவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் சுமார் 83 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாரிப்பதாக அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எந்த கட்சியோ எந்த அமைப்பின் சார்பாகவோ எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அல்ல. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை. இப்போது உலக அளவில் கிடைக்கக் கூடிய ஆண்டு சராசரி வருமானத்தை பங்கிட்டுக் கொள்பவர்களின் விழுக்காட்டினை காண்போம்: ஒட்டுமொத்த மக்களில் பயன்பெறுவோரின் மொத்த வருவாயில் விழுக்காட்டளவில் - நிலை - விழுக்காட்டளவு 20% முதல் நிலை பணக்காரர்கள் - 82.7% 20% இரண்டாம் நிலை பணக்காரர்கள் - 11.7% 20% மத்திய தர மக்கள் - 2.3% 20% ஏழை மக்கள் - 1.4 20% மிகவும் ஏழைகள் - 1.2% இந்த கணக்கு வெறும் எண்களால் கொண்டது மட்டும் அல்ல. கோடான கோடி மக்களின் சதைத் துளி. அந்த சதைத் துளியைத் தான் பங்குப் போட்டுள்ளது இன்றைய உலகமயமாதல். உலக வங்கி மற்றும் அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கைகள் இதை துள்ளியமாக கொடுத்திருக்கின்றன. இந்த கணக்கை பார்க்கும் போது மற்றொன்றும் தெளிவாக புலப்படுகிறது. அது உலகில் உள்ள 120 கோடி பரம ஏழைகளில் 84 கோடி இந்தியர்கள். அதாவது உலக அளவில் 70 விழுக்காட்டுக்கு மேல், இந்தியா அளவில் 80 விழுக்காடு மக்கள் கால் வயிற்று சாப்பாட்டுக்கே வக்கற்றவர்களாக உள்ளனர். இன்னொன்றும் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க கொள்ள வேண்டும் உலக அளவில் பணம் படைத்தவர்களாக இந்திய பனியாக்கள் திகழ்கின்றனர். இதிலிருந்தே உலக அளவில் இந்தியாவில் தான் சுரண்டலுக்கு எஜமாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள 10 முதல் நிலை செல்வந்தர்களில் 4 பேர் இந்தியர்கள். இந்தியாவின் முதல் பத்து செல்வந்தர்கள். இந்திய பணக்கார்ர்கள் - இனம் - சொத்து மதிப்பு லட்சுமி மிட்டல் - ராஜஸ்தான் மார்வாரி(பனியா) - 160000 கோடி முக்கேஷ் அம்பானி - குஜராத்திய பனியா - 100000 கோடி அனில் அம்பானி - குஜராத்திய பனியா - 90000 கோடி அசிம் பிரேம்ஜி - முஸ்லீம் - 85000 கோடி குஷல் பால் சிங் - உத்தர பிரதேச ஜாட் - 50000 கோடி சுனில் பாரத் மிட்டல் - தந்தை மார்வாரி, தாய் ஷத்திரிய - 47500 கோடி குமாரமங்கலம் பிர்லா - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடி ருயா சகோதரர்கள் - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடி ரமேஷ் சந்திரா - ஜெயின்(பனியா) - 32000 கோடி பல்லோன்ஜி மிஸ்டிரி - பார்சி - 28000 கோடி ஆதி கோத்ரேஜ் - பார்சி 20000 கோடி இவ்வாறாக 100 வது இடம் வரை வரிசைப்படுத்தினாலும் 90 சதவீத செல்வந்தர்கள் பனியா வகுப்பினராக தான் உள்ளனர். அதற்கென்று ஒரு புத்தகம் தான் வெளியிட வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை. திருடர்களுக்கெல்லாம் புத்தகம் போட முடியாது. இவர்கள் ஜாக்கிரதை என்று போஸ்டர் தான் அடித்து ஒட்ட முடியும். சமூகத்தில் இரு துருவங்களாக, எட்ட முடியாத தூரத்தில் இரு பிரிவினரின் பட்டிலையும் பார்த்திருப்பீர்கள். இது தான் உலகமயமாதலின் சாதனை. மனிதனை பணத்திற்காக பேதலிக்க அலைவிட்டுள்ளது உலகமயமாதல். இந்த உலகமயமாதலின் கட்டுப்படற்ற வர்த்தகம் தேவையில்லாத யூக வணிகத்தின் மீது பந்தையம் வைத்து விளையாடுகிறது. இன்றைய நிலையில் அது பரிதாபத்திற்கு உரிய நிலைய அடைந்துள்ளது என்பது தான் உண்மை. உலகமயமாதல் காலவதியாகும் நிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டினர்க்கே வேலை என்ற முழக்கத்தை உரக்க எழுப்பியுள்ளனர். இத்தகைய நிலையில் உலகமயமாதலின் நோக்கம் அடிப்பட்டு போகிறது. அது எந்த வித புரட்சியும் இன்றி தன்னாலேயே மடிந்து விட்டது. உலகமயமாதல் கொள்கையினால் நேர்ந்த விளைவுகள் குறித்து பார்ப்போம்: 1. நாட்டின் எல்லைகளை கடந்து உலகலாவிய சந்தையை ஏறபடுத்தியது. அதன் விளைவால் நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனைத்து விதமான பொருள்களும் முழுமையாக கிடைத்து வந்தன. 2. பெரும் நிறுவனங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், பிராந்தியங்களுக்கும் வணிக சந்தைகளுக்கும் தங்கு தடையின்றி ஏராளமான நிதிகள் கிடைக்கப் பெற்றன. 3. பொருள்களும் முதலீடுகளும் பரிமாற்றத்தின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் உலகலாவிய பொது சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. 4. பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல் துறையிலும் உலகமயமாதல் வியாபித்து, உலகலாவிய அரசாங்கமாக ஒற்றைத் தனைமை ஏற்படுத்தியது( இது தான் மிக முக்கியமானதும் மிக ஆபத்தானதும் கூட, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிகார மீறலை கண்டிருப்பீர்கள். அமெரிக்காவில் மட்டும் புஷ்ஷோ அல்லது பொருளாதார வீழ்ச்சியோ ஏற்பட்டிருக்காவிட்டால் படு பாதகமாக விளைவை உலகம் சந்திருக்க கூடும். 5. உலகில் உள்ள கடகோடிக்கும் தகவல்கள் சென்றடைந்துள்ளது(இதைத் தான் தகவல் தொழிற் நுட்ப புரட்சி என்று கூறுகின்றனர். அதனால் என்ன பயன் கிராம்பபுறங்களில் வாழ்வாதாரம் சிதைந்து நகரங்களை நோக்கி மக்கள் புலம் பெயர்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கிறது. இதனால் கடைக்கோடி என்பதில் பொருளற்று போய் விடுகிறது). 6. காலச்சாரத்தைப் பொருத்தவரையில் ஒரு பொது தன்மை உருவாகி, நிலம் சார்ந்த பண்பாடு மற்றும் காலச்சாரம் சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரபரிய உற்பத்தி முறை மற்றும் அதை சார்ந்த தொழில் முனைவோரின் வாழ்க்கை பெரியளவில் பாதித்திருக்கிறது. 7. சூழலியலைப் பொருத்தவரையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற பொருளாதரக் கொள்கையில் மூலம் தேவையற்ற போக்குவரத்து அதிகரித்து, நுகர் கலாச்சாரம் பெருகி, நச்சு விளைவிக்கும் அமைசங்களின் உற்பத்தியால் புவி வெப்பம் பெருமளவு அதிகரிந்துள்ளது. இந்த பிரச்சனையை தனியரு நாடு சமாளித்து விட முடியாது. புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் உலகமயமாதல் அவசியப்படுகிறது. 8. போக்குவரத்தை பொருத்தவரையில் ஐரோபிய கார்களின் மவுசு குறைந்து, சாலைகளில் அமெரிக்க வகை கார்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தொழிற் நுட்பம் அதிகரித்து, போக்குவரத்துக்கான நேரம் குறைந்து, பயணிக்கும் கால நேரம் வெகுவாக குறைந்துள்ளது(இவ்வாறாக கூறுபடுவது அவ்வளவு உண்மையல்ல, இதிலிருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தை அமெரிக்க முதலாளித்துவம் மிஞ்சி விட்டதை அறிந்து கொள்ளலாம்) 9. சர்வதேச அளவில் கலாச்சாரப் பரிமாற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.(இது பற்றியான நீண்ட ஆய்வு கட்டுரை-”உலகமயமாதலும் வெகுஜன கலாச்சாரமும்” அடுத்த இதழில் வரவுள்ளது). * இதனால் பன்முக கலாச்சாரம் என்ற பெயரில் பெரும் வணிகத்தன்மையோடு மேற்கத்திய இறக்குமதிகள் புகுந்துள்ளது. உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் SULM DOG MILLIONAIRE படத்தை கூறலாம், இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களையும், பிற நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட விருது, உலகில் அதிகமாக வாழும் இஸ்லாமியர்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டதாகும். * இத்தகைய கலாச்சார பரிவர்த்தையில் முக்கிய பங்கு வகிப்பது மேற்கத்திய கலாச்சாரமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். * பெருமளவிலான உல்லாச சுற்றுலா பயணம் அதிகரித்துள்ளது. அதன் மூலம் உலகலாவிய விபச்சாரம் முதன்மையடைந்துள்ளது. கடற்கரை உல்லாச விடுதிகள். பாலர் பாலியல், முதலியவைகள் அதிகரித்திருக்கிறது. இதில் முக்கிய பலிகடாவாகி இருப்பது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, பிரேசில், பிலிப்பென்ஸ் மற்றும் ஏனைய வறிய மற்றும் வளரும் நாடுகள். * இத்தகைய சுற்றுலா மையங்களாக கடற்கரையே அமைந்துள்ளதால் பாரம்பரிய மீனவர்களில் கிராமங்கள் அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் எழுந்து வருகின்றன. அதற்காக முதலில் மேற்கொள்ள படுவது தான் கடலோர சாலை அமைப்பு. * இத்தகைய உல்லாச சுற்றுலா பயணிகளின் இச்சைகளுக்கு விருந்தளிக்க உறுதுணையாக இருப்பது தகவல் தொழிற் நுட்பம். குறிப்பபாக ஆர்குட், பேஸ் புக், யூ டூப், போன்ற இணையத்தளங்கள் உல்லாசம் தேடி வரும் பயணிகளுக்கு அலைச்சல் இல்லாமல் ஆட்களை பிடித்து தர ஏதுவாக இருக்கின்றன. * கடலோர பீச் ரிசோட்கள் பெருக்கத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் பயன்பாடுகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். நான் கூற அவசியமில்ல். * இப்போது அதிகரித்து வரும் பேஷன் ஷோக்களையும் அறிந்து வைத்திருப்பீர்கள். மாடல்களை தேர்ந்தெடுக்க பெரும் முதாலாளிகளே. பரிசுகள் வழங்குவதும் அவர்களே. அதுவும் ஏதாவது உல்லாசத் தீவுகளில் தான் பரிசுகளை வழங்குவார்கள். இது குறித்தும் நான் விரிவாக எழுத அவசியம் இல்லை. உதாரணத்திற்கு கூற வேண்டுமேன்றால் மும்பையில் தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல் போது வெளி வராத பல தகவல்கள் உள்ளன. பெரும் தகை கொண்ட ஊடகங்கள் மெல்லிய சிறகுகளை விரித்து வல்லிய விஷயங்களை வெளியிட்டன. பெரும் மதிப்புக்குரிய பல பெரும் முதலாளிகளின் நல்லாதரவுக் கொண்டு அவர்கள் வலியை தன்னடத்தையுடன் வெளியிட்டன. இதில் எவரையும் குறை கூறுவதற்கில்லை. அங்கு நடந்த கொலைகளில் பல மாடல் அழகிகளுடன் கூடிய தொழில் அதிபர்களிளை பற்றிய செய்திகளை வெளியிடாமல் மரியாதை காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10. கடைசியாக தகவல் தொழிற் நுற்பம் மற்றும் உலகலாலிய சட்டமுறைமைப்பற்றி பார்ப்போம். * இணையத்தளத்துடனான இணையப்பட்ட உலக அளவிலான தகவல் தொழிற் நுற்பம். தகவல் பரிமாற்றம். அதற்கான உள் கட்டமைப்பு. குறிப்பாக செல்பேசி, கடல் வழி பைபர் இழை கேபிள், சேட்டிலைட் தொடர்பு ஆகியவைகளை கூறலாம். (இவை அனைத்துமே வணிகம் சார்ந்தது என்பது தான் முக்கியம்) * உலக பொதுமைக்கான காப்புரிமை சட்டம். அதன் கீழ் ஏழை நாடுகளை சுரண்டும் போக்கு அதிகரித்துள்ளது. இவையனைத்தும் கொண்டு பார்க்கும் போது உலகமயமாதலினால் பெரும் தீங்க நடந்தேறியுள்ளது. இப்படியிருக்க நமது மன்மோகன் சிங்கை என்ன சொல்வது நீங்களை கூறுங்கள். தரகர் தானே. இவைகளுக்கு கடைசி காலம் வரை உறுதுணையாக இருந்து விட்டு பதவித் துறந்த பசியை மாமா என்று தான் அழைக்க வேண்டும். உலகமயமாதல் என்ற போர்வையில் உலாகாவிய பெருமுதலாளிகள் அனைத்து மூளையிலும் கடை விரித்துள்ளனர். இதனால் உள்ளுர் தொழில்கள் மற்றும் வறியப் பிரிவினர் எழுப்பும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஆக பெரும் சக்தியாக தலைகர்த்த அமெரிக்கா முனைந்துள்ளது. இனி உரிமைகள் குறித்து பேச முடியாது. அதை பெரும் ஊடகங்கள் வெளிப்படுத்த முடியாது. அப்படி செய்தால் அவர்களுக்கான விளம்பரம் உட்பட மற்ற உதவிகளும் நிறுத்தப்படும். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும். தீவிரவாத முத்திரை குத்தப்படும். பெருமுதலாளிகளால் சிறு சிறு ரவுடி கும்பல்கள் வளர்த்து விடப்படுவார்கள். என் ஜி ஓக்கள் மூலம் நேரக்கரம் நீட்டுவார்கள். அற்ப இலவசங்கள் வழங்கப்படும். மக்களுக்கு அற்ப உல்லாசங்கள், மூளையை மழுங்கச் செய்யும் கலியாட்டங்கள் நடத்தப்படும். ஊடாகங்கள் மூலமாக முக்கியமான பிரச்சனைகளை மறைத்து உப்பு சப்பு இல்லாத விஷயங்கள் பெரிதாக வெளிகாட்டப்படும். இன்று தமிழகத்தில் மிக பெரிய கார்பிரேட் சிந்தனையாளராக மூத்திர கலைஞர்( எவ்வளவு முயன்றும் அச்சு பிழை திருத்த முடியாதற்கு வருந்துகிறேன்) மூத்த கலைஞர் திகழ்கிறார். அவரது கட்சி கார்பிரேட் கழகமாக மாறியுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர்களாக ஸ்டாலின், தயாநிதி, அழகிரி, கனிமொழி, தயாளு, ராசாத்தி மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். கழக கார்ப்பிரேட் உடன்பிறப்புகள் அங்காங்க பகுதி மேலாளர்களாக இருப்பார்கள். கட்சி தொண்டர்கள் கம்பெனி வளர்ச்சிக்காகவும், வருவாய்க்காவும் பாடுபடுவார்கள். சம்பளமாக தேர்தலின் போது பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் வழங்கப்படும். கம்பனி சுட்டிக்காட்டும் ஆட்களை அடித்து துவேஷம் செய்பவர்களுக்கு கூடுதல் போனஸாக பதவிகள் வழங்கப்படும். இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. உங்களுக்கு இதை கொண்டு இலங்கையை உற்று நோக்குங்கள் புலப்படும். விடுதலை போராட்டம் நசுக்கப்படுவதும். இந்திய வட்டார அடியாளாக ராஜபட்சே உருபெருவதும் நீங்கள் அறிவீர்கள். உலக முழுவதும் இது தான் நடைப்பெறுகிறது. இது தான் கார்ப்பிரேட் கலாச்சாரம். இந்தியாவில் இத்தகைய விஷயத்தில் முதன்மையாக திகழ்வது மேற்கு வங்காளம் என்பது மிகவும் உன்னதம். டாடாவுக்காக அடியாளாக மாறிய புத்த தேவ், அங்கு நடந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள். இது தான் உலகமயமாதல், இந்த சிந்தாந்ததை தான் மன்மோகன் பயின்று மாக அறிஞரானார். பிறகு பார் பேற்றும் உலக வங்கிக்கு போனார்.

Saturday, 18 July, 2009

உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்


உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்
-க. செண்பகநாதன்-


இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(லிணீவீssமீக்ஷ் யீணீவீக்ஷீமீ) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது. தனது ஆகப்பெரும் பெருளாதார ஆதிக்கத்தை செலுத்தம் அதிகாரத்தை இழந்திருக்கும் அமெரிக்கா, வளரும் நாடுகளை சுரண்டும் சதி வேளையில் இறங்கியுள்ளது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலக பெரும் சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் நாடுகளை பின் தள்ளி முன்னுக்கு வந்நது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலக பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது. அமெரிக்காவின் சிம்ம சொப்பனத்திற்கு கீயூபாவின் பிடல் காஸ்ட்ரோ திகழ்ந்து வருகிறார். இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வைக் கொண்டது. ஏன் என்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையானது பெருமுதலாளித்து அமெரிக்கா சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போருக்குக் பின் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை கீழேத் தள்ளி உலக பீடத்தை பிடித்த சுரண்டல் கொள்கை. அத்தகைய நிலை தான் இந்தியா இப்போது கடைப்பிடித்து வருகிறது. அந்த வித்தையைத் தான் அண்டை நாடுகளிடமும் இந்தியா காட்டி வருகிறது. அதற்கு உதாரணம் தான் தெற்காசியாவில் அதிக்கம் செலுத்த முயல்வது, இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த அரை வேக்காடு கருத்தாக்கம், மூடத்தனமானது. அமெரிக்காவை பொருத்தவரை அனைவரும் வந்தேறிகள் தான். ஒற்றை பண்பட்டையுடையது. இந்தியாவோ பல தேசிய இனங்களால் தைக்கப்பட்ட ஒரு ஒட்டு ஆடை. அடை ஜாக்கிரதையாக அணியப்பட வேண்டும். பலருக்கும் சொந்தமான வண்ண ஆடையில் கோர்க்கப்பட்ட கூட்டு நைதல். நூல் அறுப்பட்டால் கழன்று வடும். அதே போல் அமெரிக்காவில் புஷ் அதிபராக இருந்த வரையில் இந்திய ஆட்சியார்கள் ஒரு ஏவல் நாய் போல் தான் செயல்பட்டு வந்தார்கள். இந்த நிலை முந்தைய ஏவல் நாய்களான பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அந்த நாய் சண்டை தான் மும்பை தாக்குதல் சம்பவம். இந்தியாவின் நுண்ணிய கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்களை சற்றும் அறியாமலோ அல்லது மறுத்தோ ஆட்சிப் புரிந்துக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் ஒரு ஏட்டு சுரக்காய். பொருளாதாரத்தை ஒரு பாடப்பிரிவாக பயின்று தேரி, உலக வங்கி மற்றும் அமெரிக்கா தரகராக பிழைப்பு நடத்தியவர். அதன் இந்திய தரகு முதலாளிகளின் கருணைப் பார்வையால் காங்கிரஸில் இணைந்து தனது முந்தைய பணியை அரசியல் முகத்துடன் மேற் கொள்ளத் தொடங்கினார். இந்தியாவின் ஒட்டுமொத்த சீர் குலைவுக்கு முந்தைய நரசிம்மராவின் அரசே காரணம். பாபர் மசூதி மற்றும் உலமயமாதல். பிறகு இந்திய அளவில் ஊழல் ஏற்று கொள்ளப்பட்ட, எழுதப்படாத சட்டமானது, இது பற்றி இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை. இனி அமெரிக்கா உலகை வளைத்துப் போட்ட கதையை பார்ப்போம்: இரண்டாம் உலக போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்த போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளுடம் நிலைக்காட்டிக் கொண்டது. அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலைய செய்த்தும் அமெரிக்காவிற்கு லாபமாக வந்தடைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மைனாலும், நாடு பிடிக்கும் ஆசைகளாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்து பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கும் . பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தைய அட்சிப்புரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுப்பிடிப்புகளையும், வலிமைகளையும் நாடுளை பிடிப்பதிலேயே செலவிட்டது. இதற்கிடையே உலமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அணுகூலத்தை தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளைய செய்தது. இரண்டாம் உலக போரிக்கு பிந்ததைய நிலையில் இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேளை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாபமடைந்தன(இவைகள் பற்றிய நுண்ணிய விவரங்கள் அடுத்தடுத்து தொடர் கட்டுரைகளில் காண்போம்). இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட அமெரிக்க மோக சிந்தனை பற்றி நாம் நகர்வோம்: “எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்தியாவில் நான் வளர்ந்துக் கொண்டிருந்த தருணம் அது. எனது தந்தையின் கையைப் படித்து கொண்டு பலசரக்கு கடைக்கு செல்கிறோம். அப்போது அவ்விழியாக கோயில் பிரகாரத்தை கடக்கையில், பபாபி அமெரிக்கர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும், என்றார் என் தந்தை. அந்த நம்பிக்கை இப்போதும் எனக்கு இருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அமெரிக்கா நிச்சயம் மீண்டு வரும்” இந்த கதையை யார் கூறியது தெரியுமா? வேறு யாரும் இல்லை. சாட்ஷாத் ப்பாபி ஜிண்டால் தான். இன்று ஒபாமாவுக்கு எதிராளியாக வளர்த்து விடப்பட்ட இந்திய பனியா தான் இவர். இப்போது இவர் அமெரிக்காவின் லூசியான மாகாணத்தின் கவர்னராக உள்ளார். அவரது தந்தை 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்கிறார். இவர் 1971 ஆம் பிறக்கிறார். இந்துவாக பிறந்த இவர், பள்ளி பருவத்தில் கத்தோலிக்கராக மதம் மாறுகிறார். இதிலிருந்தே அவரின் திட்டம் புரிந்திருக்கும். இது போல் தான் அனைத்து பஞ்சாபியர்களின் நிலையும். இதிலிருந்து மன்மோகன் விதிவிலக்கல்ல. குறிப்பாக பஞ்சாப், இம்மாச்சல பிரதேசம், ஹரியான போன்ற மாநிலங்களில் ஆழ்ந்து பதிந்துள்ள அமெரிக்க நப்பித்தனத்தின்(நம்பிக்கை) சிதறிய வெளிப்பாடு தான் இது. இது அந்த மாநிலங்களில் வசிப்பவர்களின் மொத்த வெளிப்பாடு. இந்த கட்டுரைக்கு இவ்வாறான தலைப்பு எத்தகைய பொருத்தம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்திய முதலாளித்துவ சிந்தனை இப்படித்தான் வளர்ந்தது. தொடக்க காலத்தில் இந்த சிந்தனைப் போக்கிற்கு அதரவாக இருந்த ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஆனால் மன்மோகன் வந்த பின்(நரசிம்மா ஆட்சியின் போதே) அதை காங்கிரஸின் தாரக மந்திரமாக மற்றிய பெருமை அவருக்கு உண்டு. ஏனென்றால் அவரும் பஞ்சாபியர் ஆயிற்றே. அத்தகைய மாநிலங்களில் இருந்த ஆசை இந்தியா முழுவதும் பரவி நோயாக பீடித்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் உலகமயமாதல் சிந்தனையும் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது அந்த கொள்கையின் மூல வித்தே “அமெரிக்கர்களுக்கே” எனும் கோஷத்தை உரக்க எழுப்புகிறது. இத்தகைய நிலையில் உலகமயமாதல் காலவதியாகிவிட்டது என்பது தானே அர்த்தம். உலக முழுவது ஏற்பட்டிருக்கும் இந்த பொருளாதார பெரும் சரிவானது இது வரை உலகம் கண்டிராத ஒன்று கூறி வரும் நிலையில் இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக அமையும். இந்தியா தப்பித்தது வங்கி துறையில் மட்டுமே. அதுவும் அது கடைப்பிடித்து வந்த சோஷலிச கொள்கையினாலும். வங்கிகள் மற்றும் ஆயுட் காப்பிட்டு துறையின் தேசியமயமானதால் மட்டுமே. இந்த தப்பித்தலுக்கும் இந்த அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

(தொழில் உலகம் ஜூலை இதழில் வெளியானது)

உருப்பிறழ்வுகள்


சாலை இரைச்சலில்
எல்லையற்ற பெருவெளி

காற்றை நொடித்து
உலாவித் திரிந்தான்
ஆதி மனிதன்.

அதன் பெருவெளி சங்கேதங்களின்
ஊடாகப் பயணித்தான்
ஒரு குட்டி பிரயாணி
.
பிரக்ஞைகள் தோறும்
நகையாடின ஸ்தூலங்கள்
.
நகர்வுகள் கேள்விக்குளாகின.

அசைவற்றுப்போயின
உருப்பிறழ்வுகள்.
அதிலிருந்து பிறழ்ந்த கடல்
கரையேறித் தொடர,
கரையோரத்தில் நாய்களின் ஓலம்
கௌடில்யர்களும் அதனோடு
சேர்ந்துகொண்டனர்.

காட்டை சதுரங்கமாக்கி விளையாடினாள்
பூவிலிருந்து பிறழ்ந்த சிறுமி ஒருத்தி.
மழைகேசத்திலிருந்து பிரிந்த

ஒரு மயிர்த்துளி

அவள் மீது குடையாய் படர

காட்டின் எஞ்சிய
மருக்கள் சலசலத்தன.

Thursday, 16 July, 2009

தொலைந்துபோன பச்சைவண்ண சட்டை


தொலைந்துபோன
பச்சைவண்ண சட்டைநிலாச் சிதேகம் போல்
நித்திரையிலும் அகலாத
எனது கரும் பச்சை
வண்ண சட்டை.

மறக்க முயன்றும்
முடியாமல்
இன்று வரை.
அழுக்கைத் தொலைக்க
சலவைக்குப் போன
சட்டையும்
சேர்ந்து
தொலைந்து போனது.

நினைவுச் சீப்பு

மனதெங்கிலும்
சீவி கீறிற்று.
நீரூற்று கிணத்திலோ அல்லது
சலமற்ற குளத்திலோ தான்

அதை அவன்
தொலைத்திருக்க
வேண்டும்.
பாலியத்தின் முகச்சாயலுடன்
தொலைந்த அந்த
பச்சை
வண்ணச் சட்டையின்
துளிர்மேனியெங்கும்
சக்கர
வடிவம் மின்னும்.
அதுவும் என் சாயலுடன்.
என் நச்சரிப்பை பொருக்காத
அம்மாவோ வண்ணான்
இறந்து விட்டதாய் கூறினாள்.
என் நினைவுகள் மட்டும்
மடிந்து போய் விட வில்லை.

ஒவ்வொரு சவ ஊர்வலத்தின்
போதும்
அந்த சட்டை
நியாபகத்திற்கு வரும்.

என் இரண்டு வயது
கருப்பு
வெள்ளை
நிழல் படத்தில்

அந்த சட்டையை,
அதன்
நிறத்திலேயே கண்டேன்.
அந்த அடர் பச்சை வண்ண
சட்டையை
மட்டும் நான்
கண்டதில்லை
என்றபோதிலும்

கருப்பையில் அணிந்த சட்டை
என்று
ஒன்றுள்ளது.

Friday, 10 July, 2009

விழித்த கணங்களில்


விழித்த கணங்களில்


பாறை இடுக்களில்
கசிந்ததொரு மனம்

கண்கள் திறக்க
மேல் எழுந்தன
இமைகள்
.
நீர் பெருக
நிறைந்தது கடல்

பாறை அகல
விழித்தது கூழாங்கல்

விழிகள் கசிய
உச்சாணி எழுந்தது.

மீட்டிட்ட கடல் நடுவே
நிலவொன்று
முளைக்க
காத்திருந்தது சாகர நிழல்.


கடற்கரை வெளியெங்கும் பதிக்க,

கால்கள் இரவு முழுவதும் அலைந்தன.

இருள் பதித்துப் போன
சுவடுகளை
பகல் முழுவதும்
தேடிய பின்னர்

நிழல் கேட்டது
யாருடையது? என.

அவன் கூறினான்,
“என்
நேசத்துக்குரியவளுக்கு உரியது,
நேற்றிரவு விட்டுச் சென்றாள்” என்றான்,

உறங்கிற்ற இரவில்
விழித்தது
எனது சுக்கிலம் என்றான்.
கண்கள் திறக்க
பாறை கேட்டது

“யாருடையது” என்று

“என்னுடையது,” என்றான்

பாறை நகைத்திட்டது.

வெப்பத்தில் பாறையில்

ஈரம் காய்ந்திற்று.

Saturday, 4 July, 2009

உலக பொருளாதார வீழ்ச்சி


உலக பொருளாதார வீழ்ச்சி (1)
-க . செண்பகநாதன் -
இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(Laissez faire) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது.

- தொடரும் -

நிழலோடிய சுவடு


பதித்த வழிகளில் உன்னுடைய
கால்கள் அல்ல.

உருமாற்றமும் ஒருவித
தப்பித்தல்
தான்.
உன்னில் இருந்து என்னையும்

என்னில் இருந்து உன்னையும்

நிழலோடிய சுவடு அது.

Friday, 3 July, 2009

நகர பூங்கா


நகர வீதியில்
வரையறுக்கப்பட்ட பூங்கா.

எண்ணிக்கைக்கு அடங்கிய
செடிகள்.

உலர்ந்த பூக்கள்.

அந்தி வந்தது.

கதவு திறக்கப்பட்டன.

கூட்டம் கூடியது.

சிலர் நடைபயிற்சி செய்தனர்.

சிலர் கூடி குலாவினர்.

விரசங்கள் சில விரவினர்.

ஒரு சிலர் சிறுநீர் பாய்ச்சினர்.

எட்டு மணியாகி விட்டதென

விரட்டினான் காவலாளி.

அவரவர் தொடைத்து
கொண்டு
புறப்பட்டனர்.

பூட்டப்பட்டது கதவு.

காலம் வரையறைக்கு உட்பட்டது.

Thursday, 2 July, 2009

காதல் கடிதம்


காதல் கடிதம்


காலத்தை அளவிடுத்தன நாட்குறிப்புகள்
அதனோடு என் வயதையும்
கணக்கெடுக்க நான்

தவறி விட்டேன்.

ஒரு நாள் தேவாலயத்தில்
இறைவனிடம்
வேண்டி
நான் நின்ற போது

ஒரு கணம் உன்னை
காண நேர்ந்தது.

எனக்காக நீ உதிர்த்தாற் போல்

அக்கணமே நான் உணர்ந்தேன்.

உனக்காகவே நான் பிறந்தாற் போல்-

என்னுள் ஒரு நினைப்பு.


காற்றி
ன் திசையெங்கும்
விண்ணுலக
தேவதைப்
போல் தாவிப்பறந்தேன்.

அக்கனம் முதல் என் உள்ளத்தில்

நட்சத்திரம் முளைத்தது போல்

மய்யல் கொண்டேன்.
காலச்சக்கரம் சுழன்று
என் முன்னே
வந்து நின்றது போல்
ஒரு நினைப்பு.


கடல் கலைக்கும் அலைப்போல்

என் மனமெங்கும் அலை வீச
காற்றில் அசைந்தன

கானகமே.

வெண்ணிறம் படர்ந்த
பனி வெய்த வீடு

காலைப்பொழுதின் தீர்க்கத்தை
உணர்ந்தேன் நான்,

அத்தகைய நாள் ஒன்றில்

மறை திறந்த பரிதியைப்போல்

உன் வீட்டாரும்
எனை
கேட்டு வந்தனர்.

அன்றைக்கே உனை காண
நான் துடித்தேன்.

வண்ண வண்ண கனவுகள் கூடி

என் கண்களில் நிறைந்தன.

நிலத்தின் நீர்க்குமிழிகளோ

என் நெஞ்சத்தில் ஊற்றெடுக்க,

உன் முகம் நான்
அறிந்திருக்க வில்லை
என்றாலும்
ஒரு கணமேதும் நான்
யோசிக்க வில்லை
உடன் சம்மதித்தேன்.

உள்ளங்கள் கரைந்தோட
ஒருமித்தோம்.
கடற்கரையெங்கும்
நம் காலடிகள்
அலைகளோடு
கலந்தோடினோம்.

கண் விழித்த போது

கனவென்று உணர்ந்தேன்.

அக்கனமே உயிர் துடித்தது

கண்கள் கலங்கின.

உன் நினைவுகளோடு
கரைந்தன
ஈரைந்து வருடங்கள்
.

என் வீட்டு நாட்காட்டியுடன்

நானும் கரைந்தேன்,
கலைந்தேன்.

தோட்டத்தில் பூத்திடும் மலர்கள்

மாலைகள் ஆவது எத்தகைய
இயல்போ
அதுப்போல
நீயும் நானும் கலந்திடும்
நாளும் குறித்திட ஆயிற்று.
பூக்களும் மலர்ந்தன

வேளை வந்நது

இடையில் நாகமென்ற
நட்சு
என்னை பற்றிய
உமிழ
நீயோ
மலர் அவழ்த்த காம்புப் போல்
என்னை
விடுத்தாய்.
புயலில் ஆட்கொண்ட படகுப் போல்

நான் திக்கற்று போனேன்.

கருமேக கலைய
அழுதிடும்
விம்மிடும்.
அதனோடு நானும் அழுது
கரைத்துகொண்டேன்.

நீ என்னை மறுத்திடாய்

முகம் பார்க்க வெறுத்திட்டாய்

என் உள்ளம் உனக்கானது

என்பதை மட்டும் ஏன்

நீ மறந்திட்டாய்?

ஒருமுறையேனும் என்
முகத்தை
பார்த்திட
உனக்கேன்
தோன்ற வில்லை.
உனக்கான விழி
உன்
முகத்திடன் உள்ளது

என்பதை நீ ஏன்

அறிந்திருக்க வில்லை.

உனக்கான இதயம்

உனக்காக வேறொரு இடத்தில்

ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உணராமல் இருந்தாய்?

உனக்கான சுவாசம்

உனக்காக மட்டும்

சுவாசித்து கொண்டிருக்கிறது

என்பதை ஏன் மறந்திட்டாய்?


என் அன்பே!
எனை மறுத்திடும் நீ

ஒரு முறையேனும்

என் முகத்தின் நேரே வந்து

சொல்லி மறுத்து விடு.
உன் திரு வாயினோடு
உன் முகம் கண்டு

நான் ஏற்று கொள்கிறேன்.
(நான் எழுதிகொண்டிருக்கும் நாவலின் முக்கிய பெண் பாத்திரம் எழுதும் காதல் கடிதம். இதை வாசிப்பவர்கள் அவசியம் தங்களது எதிர்வினையை தெரிவிக்கவும்)

Wednesday, 1 July, 2009

முதலாளித்துவம்


நட்சத்திரங்களை விலைக்கு வாங்க
எத்தனித்தான் வணிகன் ஒருவன்.

அவனுக்கு முன் வாங்கி விட்டதாய்

மற்றொருவன் கூறினான்.

“அதற்கென்ன நீ வாங்கியது

பகல் பொழுது நட்சத்திரங்களை,”
என்றான் இரண்டாவதாக வந்தவன்.
“அப்படியென்றால் பகலில் வீசும்

ஒளிக்கு விலை பேசப் போகிறேன்,”

என்றான் முன்றாவதாக வந்த வணிகன்,

அதற்கென்ன இரவை முதலீடாக்கி

விபச்சாரம் செய்ய போகிறேன்
என்றான்
நான்காவது வியாபாரி.
“வாழ்க முதலீடு,

வளர்க செல்வம்

உலக முதலாளிகளே

ஒன்று கூடுங்கள்”

Tuesday, 30 June, 2009

முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா


முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா


தீயின் வனப்படுப்பை உடல் ஏற்றியிருக்க
கானகம் மறுத்த இலைகளே சருகுகள்

இலை முதிர்ந்த வனம் கோட்டின்
விதிகளால் பழுப்பேறுகின்றன.
முதிர் காக்கையின் கண்களில் ஊடிச்
செல்லும் ஒரு வனத்தின் காகிதம் கூடவே.

புழக்கத்தில் இல்லாத முகம் அதில் வரும்.

மேய்ச்சலில் தளர்ந்த அந்தி வர்ணமோ

புகழிடச் சிகையென பூக்கள் உதிர்க்கும்.

அதுபோல் தான் அன்று இறகுத் தாத்தா

வந்ததும்.


வந்ததும் முற்றத்து வீட்டு ஆளோடியில்

அடைந்து கொள்வார்.

நாழி ஓடுகள் வெய்யப்பட்ட விதானம்,

வீட்டில் எஞ்சிய வெற்றுவெளி

ஆகாயமாய் திரளும் யுவப்பருவம்.

வீதிகளில் அவர் உலாவித் திரிய,

தெரு முகட்டில் வந்து நின்று பவ்வியமாக

நோக்கும் அண்ணம்மாள்.

உடல் முழுவதும் பூக்கள் முளைக்க

வனாந்திர நங்கையின் உதிரம்

நனைத்தெடுத்த பை.


ஒரு புள்ளியிலிருந்து விரியும் பூவைப் போல்

துகல் மகரந்த செயற்கையில்

பரந்து விரிந்த நிலக்கூட்டின்

மனிதச் சிராய்கள்.

மறைந்து திரியும் வெண் சுவடுகளை

அழுக்காய் பதிக்கும் முகில்களை

கழுவியெடுக்கும் மென் தூறல் உருவாய்

அவள் இருந்தாள்.


தாத்தாவின் தலை முடி அடர்ந்து,

சித்திரை மாதத்தில் பூக்கும்

இளவம்பஞ்சுப் போலானது.

தலைக்கு மேல் மேகத்தை அவர்

சுமக்க ஆரம்பித்ததும் தான் உணர்ந்தார்

தனது முதுமையை.

முதுமையில் தீர்க்கம் வெண்ணிறத்தால்

மெய்மை வெளிப்படவே செய்தது.

ஆனாலும் தனது முதுமையை ஏற்க

அவருக்கோ மனம் கொள்ளவில்லை.


அவரது சிரசத்தில் மயிர்கள்

வெண்ணிறம் எய்தியிருந்தாலும்

அடர்த்திக்கொண்டிருந்தது
.
தாத்தாவின் பதிவிரதைக்கோ

கண்களை உருட்டி மிரட்டும்

அவரது விழிகளுக்கு அஞ்சி ஒடுங்குவாள்.

அறையின் ஓரத்தில் நைந்துப் போன

மிருதங்கம் அவளைப் போலவே கிடந்தது.


உழுத்துபோன முற்றத்து விட்டத்தின் மீது

இறகுத் தாத்தா போய் அமர்ந்தார்.

காட்டின் இறகான அந்த விட்டம்

மெல்ல அசையத் தொடங்கியது.
இறகுத் தாத்தாவைக் காட்டிலும்

கனத்த இறகாய் அந்த
விட்டம் இருந்தது.

அந்த விட்டத்தில் இருந்த குயிலைக்

காட்டிலும் அந்த விட்டம்

அதிகமாக சிறகடித்தது.


விட்டத்தின் மேலிருந்த நாழி

ஓடுகளின் பிறழ்வு.

விதானம் கலைந்து
வானத்தின் கண்ணாடிகளாகின.

விட்டத்தின் ஓரமாய் இருந்த

பலகையில் மண் பானை அடுக்கு,

முன்னொரு காலத்தில் அவர்

பயணம் மேற் கொண்டிருந்த

தூரப்பிரதேசத்தில் இறகுகள்

முளைத்த மனிதர்களின் இறகுகளை

சேகரித்து அதில் வைத்திருந்தார்.


தூர தேசத்திலிருந்து பறந்து வந்த

அந்த இறகுகள் தாள்களாக

அதனுள் வேடமிட்டிருந்தன.

விடியல் புலர்ந்த வேளை

தாத்தாவின் பதிவிரதை

எழுந்து பார்த்த போது

தாத்தாவைக் காணவில்லை.


நீண்ட நேரம் ஆகியும் தாத்தா

வீடு திரும்பவில்லை.
நாட்கள் கடந்தன.

தடமற்ற வழிகளின் ஊடாக சுருதியற்ற

தனது கண்களால்
தேடத் தொடங்கினாள்.

பாதங்கள் வழி நடந்தவளை

மீத தூரமும் அழைத்தது.


நீலம் பரவிக் கிடந்த வான்வெளியில்

சிற் சில மேகத்துளிகள்
உருண்டோடிக்
கொண்டிருந்தன.
திசைகளற்ற பயணவெளிக்குள்

மேகத்தினூடாக தொடர்ந்தது

அவளது பயணம்,
இறகழியும்
மேகம் போல்
கரைந்து
கொண்டிருந்தது.
இரக்கமற்ற இரவு அவளை

துயிலடைய விடவில்லை.
விழிகளை களைத்து போட்டன

திரவப்பூச்சிகள்.

மரணத்தின் கொடுவாயில்

கண்களில் படர,
இலவம் பஞ்சு
துகள்
இறகுகளாக முற்றத்து

தாழ்வார உத்திரத்தில்

பதிந்திருந்தது.
தாத்தாவை மட்டும்

காணவில்லை.