மீண்டும் மீண்டும் சாம்பல்.
மண் குழப்பி விளையாடும்
சின்னஞ்சிறு குழந்தையின்கைகளில் ஊடுருவிக்
கிடக்கும் மண்ணின்
ருசிகளற்ற வதனத்தில்
நெடி மறைந்து
நகர்கிறது வாழ்க்கை.
ஆழமற்ற கிணற்றில்
கண்களற்ற அரவம்
உணர் விழிகளினால்
துளைத் தேடும்.
புல் தரைகளில் வட்டமிடும்
புனல் பூச்சி.இன்னும் மண்ணில் உழலும்
நனைந்த கூட்டின்
ஜனிக்கும் குஞ்சுகளின்
இறகில் தப்பிய வெளியில்
பிரபஞ்சம்.
குழந்தைகளின்
பிடி மணலில்
மீண்டும் மீண்டும்
சாம்பல். .
No comments:
Post a Comment