Sunday, 21 June 2009
சிறப்பு பொருளாதா மண்டலங்கள் எந்த வகையில் பொருளாதாரத்தை மேம்பாடையச் செய்யும்?
சிறப்பு பொருளாதா மண்டலங்கள் எந்த வகையில் பொருளாதாரத்தை மேம்பாடையச் செய்யும்?
நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உறுதுணையாக இருக்கும் என்ற இந்திய ஆட்சியாளர்களின் வாதமாக இருந்து வருகிறது. இதில் கூட உண்மையில்லை. உலகமயமாதலின் புழுகு மூட்டைகளில் பெரும் பித்தலாட்டம் இது தான். மக்களிடமிருந்து நிலங்களை பிடிங்கி பெரும் முதலாளிகளிடம் தாரை வார்ப்பது தான் இந்த மண்டலம். சீனா வெறு.ம் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருக்கும் வேளையில், இந்தியாவோ 154 க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது. அதில் கிட்டதட்ட 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 1000 ஹெக்டேர்( அதாவது கிட்டதட்ட மூவாயிரம் ஏக்கருக்குள்) பரப்பளவில் அமைந்திருக்கிறது. மற்ற 11 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே 200 லிருந்து 1000 ஹெக்டேருக்குள் அமைந்திருக்கின்றது. அதையடுத்து 4 சிறப்பு மண்டலங்கள் மட்டுமே 250 ஹெக்டேர்களிலும், மற்ற 71 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 25 ஹெக்டேர்களுக்குள்ளாகவும், ஏனைய 35 சிறப்பு மண்டலங்கள் 25-100 ஹெக்டேர்களுக்குள்ளாகவும் அமைக்கபட்டுள்ளது. எஞ்சிய 24 மண்டலங்கள் 10 க்கும் அதற்கு குறைவாக அளவிலான ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ளன. ஃபரிதாபாத்தில் உள்ள Selecto System தகவல் தொழிற் நுட்ப நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலம் தான் உலகிலேயே மிகச் சிறியது. அது 3.34 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறிய மண்டலங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கபடும் சலுகைகளினால் அரசுக்கு 1,74,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய அரசு கூறிவருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தின் படி 25 விழுக்காடு நிலத்தை தொழிற்சாலைக்கும் 75 விழுக்காடு நிலம் ரியல் எஸ்டேட்க்கும் பயன் படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் ஏற்படுத்தபட்டிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து: நாங்குநேரி, பெரம்பலூர், கிருஷ்ணகிர், எண்ணூர், ராக்கிண்டோ, ஸ்ரீபெரம்பதூர், உரக்கடம், கங்கைகொண்டான், ராணிபேட்டை, செய்யார், பெருந்துறை, இருங்காட்டுக் கோட்டை ஆகியவைகள். இவைகள் அனைத்தும் விரைவில் மூடு விழா காணும். முக்கியமாக அனைத்து பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அனைத்தும்(யூனிடெக், டில்எப் உட்பட) மூதலீட்டார்களின் பங்குகளை ஆதாரமாக கொண்டு(சத்யம் போல்) ஏராளமான கடன்களை வாங்கி குவித்திருக்கின்றன. வீடுகள் மற்றும் நிலங்கள் ஏதும் பொனியாகத நிலையில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளன. அவைகளுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் திவலாக உள்ளன. இந்நிலையில் அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கு பெரும் இக்கிட்டு காத்திருக்கிறது.
அன்னிய மூலதனத்தைக் கொண்டு விவசாய நிலங்களை பெரிதும் அபகரித்து, உணவு உற்பத்திய பாழ்படுத்திய இந்த ரியல் எஸ்டேட் கம்பேனிகள் அனைத்து வங்கிகளுக்கும் பட்டை நாமத்தை போடப் போகும் காலம் வெகுத் தூரத்தில் இல்லை. பணத்தைக் கொண்டு பொருள் உற்பத்தி செய்து, அதைக் கொண்டு மீண்டும் பணம் ஈட்ட வேண்டும் என்று காரல் மார்க்ஸ் தனது தத்துவத்தில் குறிப்பிட்டிருந்தார். இங்கு உற்பத்தியில்லாத பொருளாதாரம் எத்தைகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மக்கள் விரைவில் உண்வார்கள். இதை குறிப்பிடுவதற்கு காரணம் 90 ல் புதிய பொருளாதார கொள்கை அமுல்படுத்தியப் போது வெகுமக்கள் அதனை போற்றி கொண்டாடினர். எதோ தனியார்களிடம் மாய மந்திரம் இருப்பது போலவும், இனி தேன் மாரி பொழியப் போவதுப் போலவும் மகிழ்ந்தனர். பொதுத் துறைகள் சரியாக செயல்பட வில்லையென்றால் நிர்வாக கோளாறு, ஆட்சியாளர் வேண்டுமென்றே, தனியார்களின் வசதிக்காக அவைகளை பாழ்படுத்தினார்கள் ஒழியே அதனால் தீங்கில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான பதிவு. ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் பார்க்கவும் கிராமங்களை முழுவதுமாக ஒழித்து கட்டவும் மட்டுமே பயன்படும்.
தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கிறதா என்று கூட ஆராயாமல் அவசரம் அவசரமாக அனுமதி அளித்துள்ளது அரசு.
இயற்கை வளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் வேளையில் இந்த பொருளாதார மண்டலங்களால் நிலத்தடிநீர், சுற்றுபுறசூழல், காற்று, மண்வளம், அனைத்தும் பூண்டோடு அழியும் ஆபத்தும் உள்ளது.
நல்லதோர் பதிவிற்கு நன்றிகள் பல...
வாழ்த்துகள்.
Post a Comment