Friday, 19 June, 2009

சினிமா மற்றும் நாவல் : கதையாடலில் ஏற்படும் பிரச்சனைகள்சினிமா மற்றும் நாவல் : கதையாடலில் ஏற்படும் பிரச்சனைகள் -இட்டாலோ கால்வினோ-
தமிழில்: க..செண்பகநாதன்

நாவலைப் போன்ற எழுத்து வடிவம் மற்றும் திரை படம் போன்ற காட்சி வடிவத்தின் நகர்வுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகளை நாம் கண்டறிய வேண்டும். வார்த்தைகளிலோ அல்லது திரை சலனத்தின் வடவத்திலோ உள்ள ஓட்டம் மற்றும் கதையாடலில் குறிப்பிட்ட காட்சித் தொடர்பை தனிமைப்படத்தி நாம் ஆராய வேண்டும். அதாவது, இலக்கியம் மற்றும் நாவல் வடிவமெடுக்கும் முன் மக்களிடம் நிலவி வந்த புராணம், நீதிக் கதைகள், காவிய பாடல்கள், ஞாநிகள் மற்றும் வீர காவிய நாயகர்கள் பற்றிய காவிய கதைகள், பாலியல் ஹாஸிய கதைகள் போன்றவைகளின் வாய்மொழி மரபுகளுக்கு உரிய கதை சொல்லல் முறைகளிலிருந்து வந்தவைகள். அதாவது கதை சொல்லல் மரபுகளிலிருந்து ஒரு பகுதியையும் (ஜேம்ஸ் பான்டின் அனைத்துப் படங்களும் தேவதைக் கதைகள் போல் எடுக்கபட்டதாகும்),
பத்தொன்பதாம் நூற்றாண்டின் வெகுஜன இலக்கியத்திலிருந்து (அதாவது சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான அற்புத கதைகள், பைசாச கதைகள், காதல் கதைகள், கற்பனை மற்றும் சமூக நாவல்கள்) ஒரு பகுதியையும் கொண்டு எழுத்தின் போக்கில் அமையப் பெற்ற வெற்றி பாத்திரங்ளின் அடிப்படையில் திரைப் படங்களாக அமையப் பெற்றன.
இத்தகைய பாரம்பரியத்தை பின் பற்றி திரைப்படங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் புறம் சார்ந்து விளையும் சஸ்பன்ஸ் (suspense) காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் கூடிய சராசரி சினிமாகளுக்கு போதுமான உயிரூட்டல்களை அளிக்க இயலாது. குதிரைகள் காட்டு மிருகங்கள், கழைக் கூத்தாடிகள், கோமாளிகள், பல்சுவை கேளிக்கைக் காட்சிகள் ஆகியவைக் கொண்ட சர்க்கஸ் மற்றும் விளையாட்டு போட்டிகளை விட குறைந்த பொழுதுப் போக்கு அம்சங்களைக் கொண்ட திரைப் படங்களினால் உருவாக்கப்பட்ட கடப்பாடுகளை மனதில் மனதில் கொண்டு நாம் பகுப்பாய்வு வேண்டும¢. தொன்மங்களையும் கவித்துவத்தையும் கொண்ட திரைப் படம், கலாச்சாரத்தின் பல்வேறு கூறுகள் ஒருங்கே கொண்டதாக இருக்க வேண்டும். இத்தகைய திரைப் படங்கள் கூட புதுமை விளம்பியாக இல்லாது மீள் உருவாக்கபாகத் தான் அமையும்.
திரைப்படங்களில் சமூகவியல் மற்றும் மனித இன பண்பாட்டியல் என அழைக்கப்படும் கூறுகளின் சாராம்சங்களினால் எழும் பிரச்சனைகளை நாம் நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அத்தகைய கூறுகள் நாவல் என்ற வடிவம் உருபெருவதற்கு முன்பே வழக்கத்தில் உள்ளதாகும். அதனை இலக்கியத்திற்கே முன்னோடி என்றோ, அல்லது பெரும் இலக்கியமென்ற சொல்லாடல் சூட்டி அழைக்க சிறிதளவுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும்.
கதையை சுருங்க சொல்வதற்கு பயன்படும் மற்றொரு உத்தியாக காமிரா பயன்படுகிறது. உதாரணத்திற்கு அண்மைக் காட்சி(close-up)யை விவரிக்க காமிராவுக்கு இணையாக வார்த்தைகளால் முடியாது. காமிராவைக் காட்டிலும் ஒருவரது மனத்தோற்றத்தையோ அல்லது இறுக்கத்தையோ விரிவானதொரு ரூபத்தில் வெளிப்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ள பட்சத்தில், இலக்கியத்தால் அதனை தனித்த அக இயல்புடன் வெளிப்படுத்த முற்றிலுமாக இயலாது.
திரைப்படத்தில் கதையாடல் உத்தியை பொருத்தவரையில், காமிராவுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறைவே என்பது நிதர்சனம். அதே வேளையில், சினிமாவுடன் ஒப்பிடுகையில் வாய்மொழி அல்லது எழுத்து வகை கதையாடலுக்குமிடையே பெருத்த வேறுபாடு உண்டு. கதை சொல்லல் அல்லது எழுத்து வகை கதையாடலில் மொழிக்கும் காட்சிக்கும் உள்ள இடைவெளி வித்தியாசம் இன்றி ஒரே தொனியில் இருக்கும். தூரத்தை வலியுறுத்த புதிர் அடர்ந்த மொழியை கையாள வேண்டியுள்ளது. குறிப்பாக, காட்டில் வெகுத்

தொலைவுக்குள் சித்திரக்குள்ளன் விளக்கொளியை கண்ட போதும், ரோக்கியுன்டின் (Roquentin)* தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது, காண நேர்ந்த வேறுபாடு மற்றும் உருவ சிதைவு போன்றவைகளை நெருக்கமாக விளங்க மொழியின் சித்தரிப்பை இப்புதிர் தன்மைக்கு உதாரணமாக கொள்ளலாம். உருவத்தின் அளவு குறித்த பருப் பொருளுக்குரிய அக உணர்வை திரைப்படங்களினால் அவ்வளவாக வெளிப்படுத்த இயலாத போதிலும், சொற்றொடரின் செயல்பாடுகளையோ அல்லது உருவத்தின் ஊடாக பயணித்துச் செல்லும் ஆகிருதை ஊடுபாகுக்களின் முக்கியமான செயல்பாடுகளை அதனால் திறம்பட காட்சி படுத்த முடியும். (வித்தியாசமான முக அமைப்பை விவரிக்க எழுத்து பிரதி வித விதமான அளவையை தான் குறிப்பிட முடியும். அதே வேளையில் பேச்சு மொழி அதனை, தொனி உயர்த்தி வெளிப்படுத்த முடியும்) ஆனால் திரைப்படம் அதை அண்மைக் காட்சி (close-up) மூலம் பார்வையாளர்களை பரவசம் மூட்ட முடியும்: உருவத்தை அதிகரித்து பார்வையாளர்களின் உணர்வை கூட்ட முடியும். இதுவே அகலத் திரையிடுதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
தொன்மையான ஓவிய மரபிலிருந்து தோன்றியது தான் அண்மைக் காட்சி (close-up) அதாவது உருவப்படம் வரைதல் கலையிலிருந்து உருவானது. பெரிய அளவிலான உருவ வரை பட(Portrait) அகல பரப்புக் காட்சிகளின் சொற்றொடர் சார்ந்த கலவையை அவ்வரைக்கலை மறுதலித்திருப்பதாக நான் கருதவில்லை. ஓவியர் மைக்கிலெஞ்சிலோவினால் தீட்டப்பட்ட இயேசுவின் தலையுடன் (Chirst Pancrator) கூடிய ஓவியத்தின் வண்ணக் கலவையை ஒரு வேளை இதனோடு ஒப்பிடலாம். அதில் இறைத்தூதர்கள் மற்றும் சைபெல்களின் (Sibyls)* * உருவ வரை படங்கள், பைபிலில் குறிப்பிடபட்டதற்கு ஏற்ப காட்சிகளாக மாற்றி அமைத்திருந்தார். அந்த வரைப்படங்கள் அனைத்தும் தலைப்பகுதியை மட்டுமே கொண்ட ஓவியங்களாக இல்லாது, முழு உருவங்கள் கொண்ட சித்திரங்களாக அமைக்கப்பட்டிருந்தன. அதே போல் அங்கு இடம் பெற்றிருந்த சிறப்புமிக்க ஏனைய ஓவியங்களோடு எவ்வகையிலும் முரணற்ற வகையில் தீட்டப்பட்டிருந்தன. அதற்கும் மேலாக குறிப்பிட வேண்டுமானால், அந்த ஒவியங்கள் கதையாடலுடன் எவ்வகையிலும் தொடர்பு கொண்டிருக்க வில்லை. நாவலில் கூட உருவ வரைப்படங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றன, அதற்காக பால்சாக்கிற்கு பெரிதும் நன்றி நவில வேண்டியுள்ளது. அவ்வகையில் பால்சாக், நாவல் குறித்து வழங்கிய புற இயல்பு நுண்மை கூறுகள்[லாவாடர்(lavater*) கோட்பாடுகளின் உந்துதலினால் வலுவானவைகள். அதன் அடிப்படையில் நவீன நாவல்கள், அதன் பாத்திரங்களை , அதன் பாத்திரங்களை நிழல் போலவே பாவிக்கும். ஆனால் அவற்றிலிருந்து முற்றும் வேறுபட்டு சினிமா, மனித முகங்களை முழு வீச்சுடன் உலாவிடுவன.
ஒளிப்பதிவை முற்றிலுமாக சார்ந்திருக்கும் சினிமா என்ற ஊடகம், இலக்கிய மரபுகளோடு எவ்வகையில் ஒத்துப்போகும் என்பதைப் பற்றி நாம் இப்போது பேச வேண்டியுள்ளது. இந்நிலையிலிருந்து ஒற்று நோக்குகையில் சினிமா மற்றும் நாவல் இரண்டும் ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்வதற்கு ஏதும் இல்லை. அதேபோல் ஒன்று, மற்றொன்றுக்கு பயிற்றுவிப்பதற்கும் இடமில்லை.
இந்நிலையில் உண்மை என்னவென்றால் சினிமாதான் எப்போதும் இலக்கியத்தைச் சார்ந்து இருந்திருக்கிறது. ஏனெனில் இலக்கியத்திற்கு அத்தகைய சக்தி உள்ளது. எழுத்துப் பிரதிகளின் மீது சினிமா எப்போதும் போராமையினால் நைவுக்கு உள்ளாகிறது; ஏனெனில் அது எழுதுவதற்கு "எப்போதும் விருப்பம் கொள்கிறது." இதே போல்தான் பல்வேறு துறைகளில் உயரிய ஸ்தானத்தில் இருக்கும் எண்ணற்றவர்களின் போக்கும் உள்ளது. எழுதப்படாத காகித அடுக்குகளுடன் தங்களுக்குள்ள ஒரே லட்சியமென்ற போர்வையில், நாவல் எழுதும் வேட்கையுடன் உழன்று தவிக்கின்றனர். வழக்கமான நாவலுடன் சினிமாவின் காதல், அதன் பல்வேறு கண்டுபிடிப்புகள் உடனடியாக பொது மேடையில் இடம் பிடித்ததன் அடிப்படையில் அமைந்தவையாக உள்ளன. அவை குறித்து கூறுவதென்றால், தன்னிலை ஒருமைக்கு (First Person singular)திரைக்குப் பின்னால் குரல் கொடுப்பது, இறந்த கால நிகழ்வை கூற முன் உத்தி (flash back)யை பயன்படுத்துவது, காலத்தின் கடத்தலை விளங்கிக்கொள்ள மங்கலான நிறத்தைப் பயன்படுத்துவது போன்றவற்¬றை இந்நாளாகட்டும், அந்நாளாகட்டும் இலக்கியப் பிரதி எப்போதும் சினிமாவுக்கு உகந்ததற்ற பிரதியாகவே இருந்துள்ளது.

சமீப கால ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அரும்பு சிந்தனை என்னவென்றால் வழக்கமான நாவலை இலக்கிய மாதிரிகளின் மீது கவனம் கொண்ட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்றளவும் எழுத்துப் பிரதி சினிமாவுக்கு சவலாக அமைந்திருப்பதால் புதிய முயற்சிகளுக்கு தன்னை ஆயத்தப்டுத்தும் வேட்கையில் சினிமா தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இச்செயல் கடந்த காலத்தில் நடைபெறவில்லை. இலக்கியம் சுகந்திரமாக தனது ஆக்கத்தை வெகுவாக முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. கதை சொல்லல் முறைக்கான வழிமுறைகளை இன்றைய சினிமா வளமான பாதைகளை வகுத்துள்ளது. அதனால் ரிமினிசன்ஸ் (Reminiscence films) படங்கள், டைரி (dairy flims) படங்கள், சுய பகுப்பாய்வு (Self-analysis)படங்கள், Nouveau-Romaan Flims , கவிதைப்பாடல் (Lyric poem) படங்கள் போன்றவற்றை திரை உலகம் உருவாக்க முயல வேண்டும். இவை அனைத்தும் இலக்கியத்தை விட தரம் குறந்தவைகள் என்பதாக இருந்தாலும் சினிமா என்ற கலை வடிவத்திற்குப் புதுமையானதாகும். இந்த நோக்கத்தைக்கொண்டு சினிமாவை அணுகும்போது, இலக்கியத்தின் கிளையாக சினிமா திகழ்ந்து வருகிறது. ஆனால் நிலைமையை மாற்றலாம். அதற்கான நெகிழ்வு தன்மை தன்மையும் கொண்டதுதான். இதுகூட குறிப்பிட்ட அளவுக்கு தான் உண்மை.

நாவல்களின் சில வகைகள் மிகச் சாதாரணமானவை. ஏனெனில் அவற்றின் கதையாடல் தன்மை மற்றும் அதன் கரு அத்தகையது. அத்தகையவை சராசரி திரைப்படங்களிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்டவைகள் அல்ல. இவை வெகுஜன ரசனை கொண்ட பொது மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்படுவன. ஷிவீக்ஷீமீ ஸீஷீவீக்ஷீமீ வகைகளை நான் குறிப்பிட்டுப் பேசவில்லை. அது சினிமா மற்றும் நாவலுக்கும் இடையே பரிமாற்றத்திற்கு உரியது என்பது மட்டும் நேர்மையானது. ஆனால் குறைந்த அளவிலான இலக்கிய மதிப்பீடுகளைக் கொண்ட சராசரி நாவல்களையே பலர் விரும்புகின்றனர். அதில் சில மேம்பட்டவைகளாக, சுவராசியமான பருப்பொருள் மற்றும் நன்கு வகைப்படுத்தப்பட்ட அமைப்புகளையும் சிலர் விரும்புகின்றனர்.

மற்றொரு நிலையில் நோக்குகையில் பரிசோதனை முறையிலான இலக்கியம் சாத்தியப்படும் பட்சத்தில் கதையாடல் உத்தியின்மூலம் அதுவே சினிமாவில் மேற்கொள்ளும்போது கைவரக்கூடுவதில்லை. (கரு, அலங்காரம், சூழல், கதாபாத்திரம் போன்றவைகொண்டு மேற்கொள்ளப்படும்); ஆனால் இத்தகைய ஆற்றல்கூட வழக்கமான நாவல் தன்மையிலிலிருந்து முற்றுமாக மறுதலித்துச் செல்லக்கூடியது என நான் எண்ணவில்லை. novae roman யின் வகை மாதிரியின் செயல்முறை குறித்து, நிகழ் காலத்திலிருந்து கடந்த கால வரையிலும், கற்பனையிலிருந்து உண்மைக்கும், காலம் மற்றும் வெளியின் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கும் போன்றவற்றின் புலப்படாத நகர்வை நாம் அணுக முடியும். நாவல் எழுதி முடித்த பின், தகுதி வாய்ந்த இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் எடுக்க ஏற்ற அளவினதாக இருப்பதை நாம் காண வேண்டும்.

நாவல் - சினிமாக்களின் அனைத்து வடிவங்களும் கட்டுரை - சினிமாவை நோக்கியே அமைந்துவிடுவது இப்போதைக்கு எனக்கு சுவராசியமாகவே தோன்றுகிறது. Masculine - Feminine வகை படங்களே இவ்வகை கேள்விக்கு
வித்திட்டிருக்கிறது.

எனது இலக்கிய படைப்புகளோடு தொடர்பில்லாத சினிமாக்களை சாமானிய பார்வையாளனைப் போலவே கண்டு மகிழ்ந்திருக்கிறேன். எனது படைப்புகளோடு எவையேனும் சம்பந்தப்பட்டிருப்பின் அவை அனிமேட் கார்டூன் வகைப்படங்களாகத்தான் இருக்க முடியும். நிழற்படக் கலையைவிட நெருக்கமாக எப்போதும் என்னை நெருக்கமாக ஆர்வம் கொள்ளச் செய்வது வரைதல் கலை ஆகும்.

வெற்றுக் காகிதத்தில் நகரும் வரைசித்திரம், அதுவும் தகுந்த பின்புலன்களைக் கொண்டதிற்கும், வெற்று காகிதத்தில்நகரும் வார்த்தை வரிகளின் கதை சொல்லுதலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனிமேட் கார்டூன்களால் படைப்பாளிக்குக் கற்றுத்தர ஏராளமான விஷயங்கள் உள்ளன. அனைத்தையும்விட பாத்திரங்கள் மற்றும் பொருளை சில வரை கீற்று (ஷிtக்ஷீஷீளீமீ)கள் மூலம் விவரிக்க அவற்றிற்கு ஆளுமை உண்டு. அது ஒரு உருவகக் கலை, அதே சமயத்தில் காரிய ஆகுபெயருக்குரிய கலையுமாகம். அது ஒரு உருமாற்ற கலை; அதுவும் மனித உருமாற்றக் கலை ஆகும்.

காட்சி மற்றும் உயிர்ச்சித்திரம்(Graphic) ஊடாக என்னை மிகவும் ஆட்கொண்ட நகுமியல்புக் கீற்று (Comic Strip) ஆகும். அதனூடாக ஒருவர் திரைப்படங்களில், உரையாடல் மற்றும் படைப்புத்திறனை வெகுவாக வேறுபடுத்திப் பார்க்க முடியும். சாகசக் கதைகளில் உள்ள நகைச்சுவை கீற்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் மற்றும் சினிமாவின் கொடையாக, வரைதல் மற்றும் எழுத்து அல்லது வாய்மொழி மற்றும் ஒலி அனுகரணம் மூலம் அமையப் பெற்று உயிர் சித்திரம் (கிராபிக் முறை) ஒன்றிணைந்து அமைந்து நமக்கு கிடைக்கப்பெற்ற கதை சொல்லல் முறையினால் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கக் கூடியதாக உள்ளது. துரதிஷ்டவசமாக நகைச்சுவைக் கீற்று, இன்றளவும் சமூகவியலாளர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அது கலை என்ற வகை சார்ந்த பயிற்றுவிப்புக்கு இன்னும் மீட்சி கிடைக்கப்பெறவில்லை.

நன்றி: அடவி 2009

2 comments:

Anonymous said...

ரொம்பப் பெரிசாப் போச்சோ?

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html