Thursday, 18 June 2009

கிம் கி-டுக்- (நேர்காணல்)


கிம் கி-டுக்-குடன் (நேர்காணல்) தமிழில்: க. செண்பகநாதன்(உபாலி)


தென் கொரிய நாட்டின் புகழ்மிக்க திரைப்பட இயக்குனரான கிம் கி டுக் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20 ஆம் நாள் கியாங் சங் மாகாணத்தில் உள்ள பாங் வாங் என்ற இடத்தில் பிறந்தார். பாரிஸில் 1990 முதல் 1993 வரை கலைப் படிப்ப்பினை அவர் பயின்றார். அங்கிருந்து தென் கொரியா திரும்பிய அவர் திரைக்கதையாசிரியராக பணி மேற்கொண்டார். தென் கொரிய திரைப்பட சங்கம் 1995 ஆம் நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு குறைந்த முதலீட்டில் அவர் எடுத்த Crocodile(1996) என்ற திரைப்படம் முதல் பிரிசினை தட்டிச் சென்றது. கொரிய திரைப்பட விமர்சகர்களிடம் இந்த படம் பெருத்த உணர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு நடந்த இரு வேறு திரைப்பட விழாக்கள்களிலும் சிறந்த இயக்குனருக்கான பரிசை அவர் பெற்றார். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் samaritan girl என்ற படத்திற்கும், வெனிஸ் திரைப்பட விழாவில் 3-Iron என்ற படத்திற்காகவும் அவருக்கு பரிசுகள் கிடைத்தது.
கிம் கி -டுக் வுடனான நேர்காணல் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். Spring, Summer, Autumn, Winter...and Spring Again என்ற அவரது படம் சிங்கப்பூரி திரைபட விழாவின் திரையிடப்பட்டது. அத்திரைப்படத்தின் முதல் காட்சி (premiered) காலை நற்பொழுதின் போது திரையிடப்பட்டது. அக்காலைப் பொழுதில் 6 பத்திரிக்கையாளர் சூழ, கிங் ஜி-டுக் அளித்த பேட்டி தான் இது. இப்பேட்டி 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். ஒவ்வொருவரும் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: உங்களது புதிய படங்கள், முந்தைய படங்கள் காட்டிலும் மிகவும் வித்தியாபட்டிருக்கின்றனவே, அப்போதெல்லாம் உங்களது படங்களில் வன்முறை மற்றும் கொடுங்கொன்மை நிறைந்திருக்கும். இப்போது அவைகள் இன்றி பெரிய மாற்றம் தெரிகிறது?
கிம் கி-டுக்: எனது முந்தைய படங்கள் அனைத்தும் தனிப்பட்ட மனிதர்களை பற்றியும், அத்தகைய சூழல் பற்றியதுமாக அமைந்திருந்தது. அவைகள் அண்மைக் காட்சி(close-up)யை போன்றவைகள். இத்திரைப்படம் Spring, Summer, Autumn, Winter...and Spring Again அகன்ற கோணத்தில், பிரபஞ்சத்தின் வனப்பை அழகுற காட்சியாக்கப்பட்டது. இதனை காணும் போது நாம் அற்பான சிறு ஜந்துக்கள் என புலப்படுகிறது.
கேள்வி: உங்களது அனைத்து திரைப்படங்களிலும் வலி மற்றும் வனப்பை மிகத் துல்லியமாக எடுத்து காட்சிப் படுத்தியிருக்கிரீர்கள். இப்படத்தில் கூட அவ்வாறே செய்திருக்கீர்கள். ஆனால் மக்களின் எதிர்வினைகளோ வேறுமாதிரியாக இருந்திருக்கிறது. உங்களது முந்தைய படங்களை கண்ட மக்கள் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனார் இந்த படத்தில் அவ்வாறு ரசிகர்கள் வெளிப்படுத்தவில்லை. இந்த மாதிரி சாதகமான எதிர் வினை உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது அல்லவா?
கிம் கி-டுக்: ஆம், நான் ஒத்துக் கொள்ளுகிறேன். மக்கள் மிக சாதகமான எதிர்வினையை அளித்திருக்கிறார்கள். முந்தைய படங்களில் மனித இனத்தின் தீஞ்செயல்களை நேரிடையாகவும், வெளிப்படையான சித்திரமாகவும் காட்சிப்படுத்தியிருந்தேன். அதன் மூலம் நேரிடையான முகத்திற்கு முகம் என்று வெளிப்பட்டிருந்தது. ஆனால் இதில் அவ்வாறாக இல்லை. இதல் மனித இனத்தின் தீஞ்செயல்களை காண முடியாது. ஏனெனில், இப்படம் ஒரே இடத்தில் காட்சியாக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒர் இடத்தை விடுத்து வேறு எங்கும் படமாக்கப்படவில்லை. ஆனாலும் இப்படத்திலும் தீஞ்செயல் இடம் பெற்றிருக்கிறது.


கேள்வி(மீண்டும்): ஆனாலும் இப்படியாளதொரு சாதகமாக எதிர்வினையினால் நீங்கள் திருப்தியடைந்தீர்கள் அல்லவா?
கிம் கி-டுக் : (புன்னகைக்கு இடையே) அடுந்த படத்தில் அனேகமாக மாற்றங்கள்இருக்கும்.
கேள்வி : இந்த திரைப்படம் மிகவும் ஆன்மீக வயப்பட்டதாக இருக்கிறது. நீங்கள் புத்த மாத்தை சார்ந்தவரா?
கிம் கி-டுக் : நான் கிருஸ்துவ மாத்ததை சார்ந்தவன். நான் ஒரு கிருஸ்துவனாக வளர்க்கப்பட்டாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தேவாலையம் செல்லாத கிருஸ்துவன். கிருஸ்துவ மதத்தின் கல்வி முறை என்னுள் பெரும் பாதிப்பை உண்டு செய்தது. எனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் பைபிள் வாசகங்கள் கொண்டு ஜபித்திருக்கிறேன். இந்த படத்தில் புத்த மதத்தை பயன் படுத்த காரணம் என்னவென்றால், அம்மதம் ஆசிய கலாச்சாரத்துடன் மிகவும் ஒத்துப் போவதாக உள்ளது. ஆசியாவை பொருத்த வரையில் கிருஸ்துவ மதத்தை விட புத்த மதம் மிக பழமையானது. நமது கலாச்சாரத்தில் புத்த மதம் உள்ளார்ந்து கலந்துள்ளது. இத்திரைப்படத்தை புத்த மத நோக்கில் பார்க்கக் கூடாது. அதன் அடிப்படையிலேயே நான் இதனை தேர்வு செய்தேன். அதே வேலையில் ஆசிய ரசிகர்களுக்கு நெருக்கமான தொடர்பு கொண்டது என்ற நோக்கத்திலும், அதே வேளையில் அவர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்காவே அவ்வாறாக தேர்வு செய்தேன். ஆசியாவில் புத்தம் ஒரு மதமாக எண்ணப்படுவதில்லை. அதே வேலையில் அது வாழ்வியல் என்ற அடிப்படையிலேயே பின்பற்றப்படுகிறது. நமது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது அல்ல பவுத்தம், அதை நாம் வழிபாட்டு முறையாக கடைப்பிடிக்குறோம். இம்மாதிரியாக பழக்கத்தை உண்மையாகவே எதிர்க்கிறேன். இக்காலத்தில் மதம், அதிகாரத்திற்கான கருவியாக பயன்பட்டு வருகிறது. குறிப்பாக ஜார்ஜ் புஷ்யை கூறலாம். அது உண்மையான மதம் அல்ல அதிகாரத்திற்கான வாகனம். உற்சாகத்தையும், பாதுகாப்பையும் தருவது தான் உண்மையாக மதம்.
கேள்வி: உங்களது படங்களுக்கு கொரியாவில் வரவேற்பு எவ்வாறு உள்ளது?
கிம் ஜி-டுக் : எனது படங்களை கொரியர்கள் விரும்பி பார்ப்பதில்லை. கொரியாவிற்கு வெளியே தான் பெரிய அளவில் மதிப்பு உள்ளது. இத்தகைய நிலை என்னை வருத்ததில் ஆழ்த்துகிறது. அதற்காக நான் பெரும் முயற்சி எதும் எடுக்க முடியாது. தற்கால பார்வையாளர்கள் நகைச்சுவையோ ஆல்லது சோகத்தையோ கொண்டிருக்கும் சாதாரண படங்களையே விரும்புகிறார்கள். எனது படங்களை மிதமான அரூப(semi-Abstract) நிலை கொண்டவைகள். இம்மாதியான படங்கள் எடுப்பதற்கு என்னுள் ஏற்பட்ட தாக்கமே காரணம், சில காலம் ஐரோப்பியாவில் ஓவியனாக இருந்து வந்தேன். ஓவியத்துடன் ஏற்பட்ட தொடர்பினால் என்னுள் அரூப படத்திற்கான தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். கொரியாவிற்கு வெளியே எனது படங்களை காணும் பார்வையாளர்கள், எனது படங்களை புரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் கொரியா பார்வையார்களுக்கு ஒரு வேளை புரியா விட்டாலும் கூட, புரிந்து கொள்ளும் முயற்சியில் கூட ஈடுவடுவதில்லை.
கேள்வி: வருடத்திற்கு ஒரு படம் என்ற வீதத்தில் நீங்கள் சிறப்பான படங்களை எடுத்து வருகிறீர்கள். இப்படியானதொரு உழைப்பை அபரிமிதமாக மேற்கொள்ள உங்களால் எப்படி முடிகிறது?
கிம் கி-டுக் : கொரியா படங்கள் தயாரிக்க குறைந்த பட்சம் 2 லிருந்து 3 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8-12 கோடி ரூபாய்) செலவாகிறது. பெரும்பான்மையான எனது படங்களுக்கு 500,000 (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) டாலர்களுக்குள்ளாகவே செலவு செய்யப்படுகிறது. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். பிறகு மற்றொரு காரணம், எனது படங்களுக்கான திரைக்கதையை நானே எழுதிவிடுவது, அதன் முதல் முன்வரிவுனை(draft) தயாரிப்பாளரிடம் சமர்ப்பிப்பேன். முடிவில் அதனோடு பெரிதும் வேறுப்பட்ட
படமாக எடுத்து முடிப்பேன். அதனால் எனது முதல் முன்வரிவுக்கும், எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிடுகையில் பெரும் வேடிக்கையாக இருக்கும். இறுதியாக எடுக்கப்பட்ட திரைப்படம் அதிலிருந்து பெரிதும் வேறுப்பட்டிருக்கும்.

கேள்வி: இன்னும் அதை அவர்கள் கண்டுப்பிடிக்க வில்லையா?
கிம் கி-டுக்: அதைப் பற்றி அவர்கள் இதுவரை கண்டுக் கொள்ளவில்லை. அது எனது தந்திரம் என அவர்களை புரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் என்னால் பெர்லினில் மட்டுமே விருது வாங்க முடிந்தது. அதனால் எனது படத்திற்காக முதலீடு செய்ய ஏராளமானவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா! 1 மில்லியன் டாலர்(அதாவது இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாய்).
கேள்வி: எப்போது நீங்கள் திரைக்கதை எழுதுவீர்கள். எவ்வாறு தொடங்குவீர்கள்?
கிம் கி-டுக்: முதலில் கதைக்கான இடத்தை தேர்வு செய்வேன். பிறகு அதில் கதா பாத்திரங்கைளை பொருத்துவேன். அதன் பிறகே கதையை உருவாக்குவேன். இப்படி தான் பெரும்பான்மையாக அமையும். சில சமயம் வேறு மாதிரி மாற்றங்கள் நிகழும். இந்த படத்தை பொருத்தவரையில் திரைக்கதை அமைக்கப்பட வில்லை என்பது தான் உண்மை, ஒவ்வொரு காட்சியும் அரூபம் கொண்டே அமைக்கப்பட்டது. மிகவம் சுவராசியமாக நடை பெற்றது. இவ்வாறாக முயல வேண்டாம் என இளம் இயக்குனர்களுக்கு அறிவுரை கூற விரும்புகிறேன்.
கேள்வி: எதற்காக நீங்கள் அதில் புத்த துறவி வேடமிட்டீர்கள்?
கிம் கி-டுக்: அந்த வேடத்தில் நடிக்க யாரும் முன் வர வில்லை. அந்த கதா பாத்திரத்திற்கான காட்சி நேரம் 20 நிமிடங்களே என்ற போதிலும் தலை முடியை மழித்து எடுக்க எவரும் முன் வர வில்லை. குறிப்பிட்ட ஒரு காட்சி குளிர் காலத்தில் நடை பெறுவது. குளிர் காலத்தில் நடைபெறும் அந்த காட்சியில் நடிக்கும் பாத்திரம் ஒன்றும் முக்கியமதானது அல்ல. அதில் குளிர் காலம் என்பது தான் முக்கியமானது. அதில் எவர் வேண்டுமானாலும் நடிக்கலாம். மலை மீது பாறை ஒன்றை எடுத்து செல்வது போன்ற காட்சி, படத்தில் அந்த காட்சி இடம் பெறுவதாக முதலில் எண்ணம் இல்லை. அந்த பாறையை நான் தான் சுமந்து செல்கிறேன். அக்காட்சியின் மூலம் வாழ்க்கை எவ்வாறு கடினம் என்பதை தெரிவிக்க முடிவு செய்தேன். பிறகு அதன் படி அக்காட்சியை எடுத்து படத்தில் இணைத்தேன்.
கேள்வி: அந்த திரைக்கதையில் உரையாடல் மிக அருகலாகவே அமைந்திருந்தது. படத்தை காண மொழியாக்க உப வரிகள்(sub-title) அவசியமில்லை அல்லவா. காட்சி மொழி மூலமாகவே அந்ந படத்திற்குள் தொடர்ந்து பயணிக்க முடியும். அப்படி தானே?
கிம் கி-டுக்: இது தொடர்பாக நான் நீண்ட காலமாக ஆழ்ந்து யோசித்தும், வசனம் தொடர்பான பகுதியில் நான் தொடர்ந்து போராடியும் இருக்கிறேன். எனெனில் அதிகமான வசனங்கள் இடம் பெற்றால், கொரிய மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு ஆக்கம் செய்யும் போது சுவை குன்றி விடும். அது மட்டுமின்றி , குறுகிய வசனத்திற்கு தகுந்தாற் போல் திரைப்படமெடுக்க பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதே போல் குறுகிய வசனத்தைக் கொண்டே தொட்ந்து படங்களை எடுக்க நான் எண்ணியுள்ளேன். எனெனில் நான் செல்ல விரும்புவதை பிற மொழியில் எவ்வாறு அறிந்துக் கொள்ள முடியும் என்ற கவலை எனக்கு இருக்கிறது. வார்த்தைகளை விட காட்சி சலனத்தின் மூலம் திரைப்படத்தை மெய்யாகவே உணரலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கேள்வி: உங்களது திரை ஊடத்தினுள் ஏதொன்றன் பாதிப்பு உள்ளதா? உங்களை பாதித்த திரைப்பட இயக்குனர் யார்?

கிம் கி-டுக்: இம்மா மூரா ஷோகி(immamura shohei), இமிர் குஸ்டாரிக்கா(Emir Kustirica), மைக்கில் ஹகினிகி( Michael Haneke) ஆகியோரை குறிப்பிடலாம். எனினும் எவரது பாதிப்பும் என்னுள் ஏற்பட்டதில்லை.
கேள்வி: உங்களது புதிய படமான சமாரியா (samaria) பற்றி?
கிம் கி-டுக்: அந்த படம் பதினெட்டு வயது தருவாயில் உள்ள பருவ மங்கையர்கள் வயதில் அதிகமுள்ள ஆண்களிடம் பாலியல் உறவு கொள்வது பற்றியது. எனினும் அதில் ஆபாசக் காட்சிகள் ஏதும் இல்லை. தங்களை விட வயதில் குறைவர்களோடு உடல் உறவு கொள்ளும் போது, வயது வந்தவர்களின் கருத்துக் கோணத்தில் பார்க்கும் போது குற்றமாக கருதப்படும் அதே வேளையில் நாணயத்தின் மறுப்பக்கத்தில், பருவ மங்கையர்களின் கருத்துக் கோணத்தில் அது வெறும் தொடர்பு பரிமாற்ற சாதனமாக கருதப்படுகிறது. நான் இரு பக்கங்களையும் எடுத்து காட்டியிருக்கிறேன்.
கேள்வி: உங்களது படங்களில் உள்ள கருப் பொருள்கள் மற்றும் உருவங்கள் மீண்டும் மீண்டும் வருகிறது. அவ்வாறாக இருப்பது உங்களது அளப்பெரிய ஆகிருதைகளுக்கான பூர்ண வெளிப்பாடாக கருதுகிறீர்களா?
கிம் கி-டுக் (மேஜையில் உள்ள பொருட்களை வரிசைப்படுத்திய படி பேசினார்): எதாவது ஒரு திரைப்படத்திற்கான வேளையில் மும்முரமாக ஈடுபடும் போது, குறிப்பிட்ட அந்த திரைப்படத்தின் மீதே கவனம் கொண்டு, யோசித்து வருவேன். அவ்வாறாக செயல்பட்டு படத்தை முடித்த பிறகு, அதை அத்தோடு மறந்தும் விடுவேன். பிறகு நான் திரும்ப அதனை காணும் போது, ஒன்று மற்றொரு படத்தோடு ஏதோ சில அம்சங்களோடு தொடர்பு கொண்டிருப்பதை உணர்வேன். இப்போது உதாணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள், இங்கே கிண்ணம், பூக்கள், இனிப்பு வகைகள் இருக்கின்றன. பிறகு இவைகளை நான் மீண்டும் பார்க்கும் போது மேஜையின் மீது இருக்கின்றன.
கேள்வி: உங்களது படங்களில் தொடந்து பெண்களை வெறுக்கும் வகையால் சித்தரிப்பதாக உங்கள் மீது எழும் விமர்சனத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
கிம் கி-டுக்: இதனால் தான் பலர் என்னை வெறுக்கிறார்கள். ஆனால் இது வாழ்க்கையின் ஒர் அங்கத்தை தான் நான் சித்தரித்திருக்கிறேன். இதன் மீது மக்கள் கோபம் கொள்ள தேவையில்லை. அது சரியும் அல்ல என்பதாகவே நினைக்கிறேன். பெண்கள் அழகானவர்கள். ஆண்களின் இருத்தலுக்கு அவர்களே காரணம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர்கள் சூரிய சந்திரனை போன்றவர்கள். பெண் ஆடையாளம் என்பது வாழ் நாள் முழுவதும் ஆண்கள் தெம்போடும், தைரியத்துடனும் பயணிக்க உதவும். அவர்கள் தொந்தரவு செய்தாலும், வளி உண்டு செய்தாலும் கூட( இவ்விடத்தில் ஆண்கள் என்றோ, பெண்கள் என்றோ விளங்க கூறவில்லை), ஆனால் பெண்களிடமிருந்து ஆண்கள் உக்கத்தையும், சக்தியையும், உதவியையும் பெறுவதாகவே இருக்க வேண்டும்.




******************** மொழியாக்கம் : க. செண்பகநாதன் ********************

No comments: