Wednesday, 17 June 2009




எல்லையற்ற தாணிய வயல்களில் தாணியங்கள் பொறுக்கியவாறு ரூத்தின் சரித்திரத்தின் தொடர்ச்சியாகவும், பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கும் புத்த நீட்சியாகவும் புத்தக அடுக்குகளின் எல்லையற்ற சிறகுகளை விரித்து பறந்துக் கொண்டிருக்கின்றன. மொழியின் அமைப்பு ஏற்றுக் கொண்ட பின் அர்த்தம் மரணித்து விடுகிறது. நேர் கோட்டற்ற எழுத்தின் ஊடாக பயணிக்கும் பிரதி தேவதைகளின் வெளிக்குள் நவம் கொள்கிறது. சுரோணித வனத்தில், சிதைந்த தாராசுரம் கல்வெட்டுகளில் அமிழ்ந்துக்கிடக்கும் கல்தச்சன் கடை ஆயுதத்திலிருந்து செதுக்குளி சப்தம் இன்னும் அகண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காற்றுவெளி அதுவே இன்னும் இன்னிசையாகவும் கமழ்ந்துக் கொண்டிருக்கிறது. சமணர்களையும் பௌத்தர்களையும் கொன்று குவித்த அதே கௌடில்யர்களின் கோர நகங்களின் அகோர பசி இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. சீவக சிந்தாமணியில் நெற் கதிர்களை தங்களது பிறையுயிர் கண்ணிமைகள் கொண்டு அறுக்கும் பெண்டீர்களின் அறுவடை இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பிரமிள்ளின் எல்லையற்ற சிறகுகள் எழுப்படாத பக்கங்களில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் கூற வந்தவைகளுக்கு மொழியின் போதாமை இருக்கும்பட்சத்தில் வேறு வழிகளை காண வேண்டியுள்ளது. அத்தகையது உருவகமாகவோ, சங்கேதமாகவோ அல்லது குறியீடாகவோ இருக்கலாம். இசை மற்றும் சிற்பம் போன்றது தான் அது என்கிறார் போர்ஹே. லீனியரின் தோற்ற உருக்கள் சிதையுற்று நேர் கோட்டற்று விரியும் போது வெளியும் எல்லையற்றதாகிறது.
ஆதி மனிதன் முதலில் பேசத் தூண்ட, உணர்ச்சியே பிரதானமாக இருந்தது. அப்போது அவன் தனது வெளிப்பாடுகளை உருவங்களில் வழியே வெளிக்காட்டினான். இதுவே மொழியின் ஜனனம். வடிவ மொழி முதலில் தோன்ற, அதன் பின்னரே அர்த்தம் பரிணமித்தது. அத்தகைய சூழல் அந்தந்த பொருட்களின் உண்மை சொருபகங்கள் கொண்டே உணரப்பட்டதாகும். முதலில் ஜனனம் பெற்று, பேசப்பட்ட கவிதை நீண்ட காலம் வரை வாத ஆதாரமின்றியே புலக்கத்தில் இருந்தது.
உரத்த பேசுவதோ அல்லது புலம்புதோ அல்லது சுவிஷேச புத்தகத்தினை போல் உறுகி, உறுகி பிரார்த்தித்திப்பதும். உறுகி காதல் செய்வதும் கவிதையல்ல. இப்படியாக ஒரு சாராரும் மற்றும் சிலர் தத்துவ கூச்சலும், நியூஸ் பேப்பர் வாசிப்பு தன்மைக் கொண்ட எழுத்துகளுமாக பக்கங்களை நிறப்பிக் கொண்டிருக்கின்றனர்.
“புரிதல்” என்ற ஓற்றைத் தன்மையை சுற்றியே கவிதைகள் எழுதப்படும் பட்சத்தில், அத்தகையது பாசீசத்திற்காக வழி கோலல். புரிதல் என்பது மிக பயங்கரமான வாதம். நுண்மைக்கு எதிரானது. அத்தகையது பாசிசம். நவினத்துவ சிந்தனைப் போக்கு மறுதலித்தும், காலவதியாகி உள்ள சூழலில், அதனை தொடர்ந்து வழிமொழிந்தவாறு இயங்குவது உகந்ததல்ல.
“எது மௌனமாக இருக்கிறதோ அது பேச வைக்கப்படுகிறது. அப்படி பேசவைப்பதே மொழி. ஆக மொழியின் உள்ளுமை (ஙிமீவீஸீரீ), ஆளுமை பேச வைக்கப்படுகிறது. அப்படிப் பேசுகிற பொருளே கவிதை,” என்கிறார் நாகாஜூனன். மனதனின் வளர்ச்சிக்கேற்பவும், தேவைக்கேற்பவும் மொழி பெரிதும் மாறுப்படுகிறது, அதனை வளைத்தெடுக்கவும், உடைக்கவும் அமைப்பியல் மற்றும் உத்தர-அமைப்பியல் கோட்பாடுகள் வழி காண்கின்றன. அதற்கான அவசியமும் உள்ளது. பூக்கோவின் உளபகுப்பாய்வுக் குறித்து ழாக் டெரிடாவும் ஒத்துப் போகிறார். பித்த மொழி குறித்தும், அதையடுத்து வெளிப்படும் குழந்தையை யத்த (நீலீவீறீபீ றீவீளீமீ வீஸீஸீஷீநீமீஸீநீமீ) மனநிலையே இலக்கியத்திற்கான இடம் ஏன்கிறார் டெரிடா.
உலகத்தை பற்றிய கதையாடல் என்பது எல்லையற்றது என கூறும் பார்த். நேர் கோடற்ற எழுத்து என்பது பன்முகம் கொண்டதாய், இருக்கிறபடியால் அதற்கு முழுமையான அர்த்தம் என்று ஒன்றுமே கிடையாது எனவே இலக்கியவாதி என்ற அளவில் ஒருவன் உடைத்துக் கொள்ள கடமைப்பட்டவனாகிறான். எழுத்து, நெய்துவிட்ட துணியைப் போன்ற ஊடுபாவு-அமைப்பைக் கொண்டதாகும். எனவே எழுத்தை அதன்போக்கில் அழைஅழையாகப் பின் தொடர்ந்து செல்ல முடியும். துணியைப் பிரித்துப் பார்க்க முடியும். அனால் அந்த இழைக்கு அடியில் ஏன்று ஒன்றும் கிடையாது. அங்கு இருப்பது வெற்றிடம் தான்.

No comments: