Monday, 22 June 2009

கவிதை


கவிதை

காற்றடைத்த பலூன் ஒன்றுடன்
சிறுமியைக் கண்டேன்.
கைகளில் காற்றை சுமக்கும்
வித்தையை அழகாய் உணர்ந்தவள் அவள்.
காற்றுடன் நடந்தாள்.
நகரத்தில் எங்கும்
தென்றல் வீசிற்று

1 comment:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கவிதை. என் வலையத்துக்கு ஒருமுறை வாருங்கள். உங்களை நான் 32 கேள்வி பதில் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.