
நித்திரையில் திறந்த கதவினூடாக
உள் நுழையும் ஞாபகங்கள்.
பியானோவின் கருப்பு வெள்ளை
சுருதி கட்டைகளை
மேலெழுந்தவாறு மீட்டின
உணர்விரல்கள்.
விரல்கள் கருப்பு வண்ண கட்டைகளை
மீட்டும் போது
மரக்கிளைகளிலிருந்து பறவைகள்
பறப்பதும்
வெள்ளை கட்டையை மீட்டும் போது
அவைகள் வந்து அமர்வதுமாக
இருந்தன.
1 comment:
அழகான கற்பனை கவிஞரே! ரசித்தேன்.
Post a Comment