
விழித்த கணங்களில்
பாறை இடுக்களில்
கசிந்ததொரு மனம்
கண்கள் திறக்க
மேல் எழுந்தன
இமைகள்.
நீர் பெருக
நிறைந்தது கடல்
பாறை அகல
விழித்தது கூழாங்கல்
விழிகள் கசிய
உச்சாணி எழுந்தது.
மீட்டிட்ட கடல் நடுவே
நிலவொன்று முளைக்க
காத்திருந்தது சாகர நிழல்.
கடற்கரை வெளியெங்கும் பதிக்க,
கால்கள் இரவு முழுவதும் அலைந்தன.
இருள் பதித்துப் போன
சுவடுகளை பகல் முழுவதும்
தேடிய பின்னர்
நிழல் கேட்டது
யாருடையது? என.
அவன் கூறினான்,
“என் நேசத்துக்குரியவளுக்கு உரியது,
நேற்றிரவு விட்டுச் சென்றாள்” என்றான்,
உறங்கிற்ற இரவில்
விழித்தது எனது சுக்கிலம் என்றான்.
கண்கள் திறக்க
பாறை கேட்டது
“யாருடையது” என்று
“என்னுடையது,” என்றான்
பாறை நகைத்திட்டது.
வெப்பத்தில் பாறையில்
ஈரம் காய்ந்திற்று.
2 comments:
மெல்லிய இசை மீட்டியபடி
மணல் நெறிய பயணிக்கிறது
கவிதை...வாழ்த்துக்கள் செண்பகநாதன்!
//கடற்கரை வெளியெங்கும் பதிக்க,
கால்கள் இரவு முழுவதும் அலைந்தன.
இருள் பதித்துப் போன
சுவடுகளை பகல் முழுவதும்
தேடிய பின்னர்
நிழல் கேட்டது//
நான் ரசித்த வரிகள் இவை. அழகான கவிதை.
Post a Comment