Wednesday 1 July, 2009

முதலாளித்துவம்


நட்சத்திரங்களை விலைக்கு வாங்க
எத்தனித்தான் வணிகன் ஒருவன்.

அவனுக்கு முன் வாங்கி விட்டதாய்

மற்றொருவன் கூறினான்.

“அதற்கென்ன நீ வாங்கியது

பகல் பொழுது நட்சத்திரங்களை,”
என்றான் இரண்டாவதாக வந்தவன்.
“அப்படியென்றால் பகலில் வீசும்

ஒளிக்கு விலை பேசப் போகிறேன்,”

என்றான் முன்றாவதாக வந்த வணிகன்,

அதற்கென்ன இரவை முதலீடாக்கி

விபச்சாரம் செய்ய போகிறேன்
என்றான்
நான்காவது வியாபாரி.
“வாழ்க முதலீடு,

வளர்க செல்வம்

உலக முதலாளிகளே

ஒன்று கூடுங்கள்”

1 comment:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இந்தக் கேடு கேட்ட மனிதன் பூமியில் உள்ள அத்தனையையும் வியாபாரமாக்கி விட்டு இப்போ நட்சத்திரங்களையும் வியாபாரப் பொருளாக்கி விட்டான் என்கிறீர்களா?
கற்பனை அற்புதம்.