Saturday, 18 July 2009
உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்
உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்
-க. செண்பகநாதன்-
இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(லிணீவீssமீக்ஷ் யீணீவீக்ஷீமீ) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது. தனது ஆகப்பெரும் பெருளாதார ஆதிக்கத்தை செலுத்தம் அதிகாரத்தை இழந்திருக்கும் அமெரிக்கா, வளரும் நாடுகளை சுரண்டும் சதி வேளையில் இறங்கியுள்ளது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலக பெரும் சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் நாடுகளை பின் தள்ளி முன்னுக்கு வந்நது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலக பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது. அமெரிக்காவின் சிம்ம சொப்பனத்திற்கு கீயூபாவின் பிடல் காஸ்ட்ரோ திகழ்ந்து வருகிறார். இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வைக் கொண்டது. ஏன் என்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையானது பெருமுதலாளித்து அமெரிக்கா சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போருக்குக் பின் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை கீழேத் தள்ளி உலக பீடத்தை பிடித்த சுரண்டல் கொள்கை. அத்தகைய நிலை தான் இந்தியா இப்போது கடைப்பிடித்து வருகிறது. அந்த வித்தையைத் தான் அண்டை நாடுகளிடமும் இந்தியா காட்டி வருகிறது. அதற்கு உதாரணம் தான் தெற்காசியாவில் அதிக்கம் செலுத்த முயல்வது, இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த அரை வேக்காடு கருத்தாக்கம், மூடத்தனமானது. அமெரிக்காவை பொருத்தவரை அனைவரும் வந்தேறிகள் தான். ஒற்றை பண்பட்டையுடையது. இந்தியாவோ பல தேசிய இனங்களால் தைக்கப்பட்ட ஒரு ஒட்டு ஆடை. அடை ஜாக்கிரதையாக அணியப்பட வேண்டும். பலருக்கும் சொந்தமான வண்ண ஆடையில் கோர்க்கப்பட்ட கூட்டு நைதல். நூல் அறுப்பட்டால் கழன்று வடும். அதே போல் அமெரிக்காவில் புஷ் அதிபராக இருந்த வரையில் இந்திய ஆட்சியார்கள் ஒரு ஏவல் நாய் போல் தான் செயல்பட்டு வந்தார்கள். இந்த நிலை முந்தைய ஏவல் நாய்களான பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அந்த நாய் சண்டை தான் மும்பை தாக்குதல் சம்பவம். இந்தியாவின் நுண்ணிய கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்களை சற்றும் அறியாமலோ அல்லது மறுத்தோ ஆட்சிப் புரிந்துக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் ஒரு ஏட்டு சுரக்காய். பொருளாதாரத்தை ஒரு பாடப்பிரிவாக பயின்று தேரி, உலக வங்கி மற்றும் அமெரிக்கா தரகராக பிழைப்பு நடத்தியவர். அதன் இந்திய தரகு முதலாளிகளின் கருணைப் பார்வையால் காங்கிரஸில் இணைந்து தனது முந்தைய பணியை அரசியல் முகத்துடன் மேற் கொள்ளத் தொடங்கினார். இந்தியாவின் ஒட்டுமொத்த சீர் குலைவுக்கு முந்தைய நரசிம்மராவின் அரசே காரணம். பாபர் மசூதி மற்றும் உலமயமாதல். பிறகு இந்திய அளவில் ஊழல் ஏற்று கொள்ளப்பட்ட, எழுதப்படாத சட்டமானது, இது பற்றி இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை. இனி அமெரிக்கா உலகை வளைத்துப் போட்ட கதையை பார்ப்போம்: இரண்டாம் உலக போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்த போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளுடம் நிலைக்காட்டிக் கொண்டது. அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலைய செய்த்தும் அமெரிக்காவிற்கு லாபமாக வந்தடைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மைனாலும், நாடு பிடிக்கும் ஆசைகளாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்து பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கும் . பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தைய அட்சிப்புரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுப்பிடிப்புகளையும், வலிமைகளையும் நாடுளை பிடிப்பதிலேயே செலவிட்டது. இதற்கிடையே உலமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அணுகூலத்தை தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளைய செய்தது. இரண்டாம் உலக போரிக்கு பிந்ததைய நிலையில் இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேளை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாபமடைந்தன(இவைகள் பற்றிய நுண்ணிய விவரங்கள் அடுத்தடுத்து தொடர் கட்டுரைகளில் காண்போம்). இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட அமெரிக்க மோக சிந்தனை பற்றி நாம் நகர்வோம்: “எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்தியாவில் நான் வளர்ந்துக் கொண்டிருந்த தருணம் அது. எனது தந்தையின் கையைப் படித்து கொண்டு பலசரக்கு கடைக்கு செல்கிறோம். அப்போது அவ்விழியாக கோயில் பிரகாரத்தை கடக்கையில், பபாபி அமெரிக்கர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும், என்றார் என் தந்தை. அந்த நம்பிக்கை இப்போதும் எனக்கு இருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அமெரிக்கா நிச்சயம் மீண்டு வரும்” இந்த கதையை யார் கூறியது தெரியுமா? வேறு யாரும் இல்லை. சாட்ஷாத் ப்பாபி ஜிண்டால் தான். இன்று ஒபாமாவுக்கு எதிராளியாக வளர்த்து விடப்பட்ட இந்திய பனியா தான் இவர். இப்போது இவர் அமெரிக்காவின் லூசியான மாகாணத்தின் கவர்னராக உள்ளார். அவரது தந்தை 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்கிறார். இவர் 1971 ஆம் பிறக்கிறார். இந்துவாக பிறந்த இவர், பள்ளி பருவத்தில் கத்தோலிக்கராக மதம் மாறுகிறார். இதிலிருந்தே அவரின் திட்டம் புரிந்திருக்கும். இது போல் தான் அனைத்து பஞ்சாபியர்களின் நிலையும். இதிலிருந்து மன்மோகன் விதிவிலக்கல்ல. குறிப்பாக பஞ்சாப், இம்மாச்சல பிரதேசம், ஹரியான போன்ற மாநிலங்களில் ஆழ்ந்து பதிந்துள்ள அமெரிக்க நப்பித்தனத்தின்(நம்பிக்கை) சிதறிய வெளிப்பாடு தான் இது. இது அந்த மாநிலங்களில் வசிப்பவர்களின் மொத்த வெளிப்பாடு. இந்த கட்டுரைக்கு இவ்வாறான தலைப்பு எத்தகைய பொருத்தம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்திய முதலாளித்துவ சிந்தனை இப்படித்தான் வளர்ந்தது. தொடக்க காலத்தில் இந்த சிந்தனைப் போக்கிற்கு அதரவாக இருந்த ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஆனால் மன்மோகன் வந்த பின்(நரசிம்மா ஆட்சியின் போதே) அதை காங்கிரஸின் தாரக மந்திரமாக மற்றிய பெருமை அவருக்கு உண்டு. ஏனென்றால் அவரும் பஞ்சாபியர் ஆயிற்றே. அத்தகைய மாநிலங்களில் இருந்த ஆசை இந்தியா முழுவதும் பரவி நோயாக பீடித்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் உலகமயமாதல் சிந்தனையும் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது அந்த கொள்கையின் மூல வித்தே “அமெரிக்கர்களுக்கே” எனும் கோஷத்தை உரக்க எழுப்புகிறது. இத்தகைய நிலையில் உலகமயமாதல் காலவதியாகிவிட்டது என்பது தானே அர்த்தம். உலக முழுவது ஏற்பட்டிருக்கும் இந்த பொருளாதார பெரும் சரிவானது இது வரை உலகம் கண்டிராத ஒன்று கூறி வரும் நிலையில் இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக அமையும். இந்தியா தப்பித்தது வங்கி துறையில் மட்டுமே. அதுவும் அது கடைப்பிடித்து வந்த சோஷலிச கொள்கையினாலும். வங்கிகள் மற்றும் ஆயுட் காப்பிட்டு துறையின் தேசியமயமானதால் மட்டுமே. இந்த தப்பித்தலுக்கும் இந்த அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
(தொழில் உலகம் ஜூலை இதழில் வெளியானது)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment