Friday, 3 July 2009

நகர பூங்கா


நகர வீதியில்
வரையறுக்கப்பட்ட பூங்கா.

எண்ணிக்கைக்கு அடங்கிய
செடிகள்.

உலர்ந்த பூக்கள்.

அந்தி வந்தது.

கதவு திறக்கப்பட்டன.

கூட்டம் கூடியது.

சிலர் நடைபயிற்சி செய்தனர்.

சிலர் கூடி குலாவினர்.

விரசங்கள் சில விரவினர்.

ஒரு சிலர் சிறுநீர் பாய்ச்சினர்.

எட்டு மணியாகி விட்டதென

விரட்டினான் காவலாளி.

அவரவர் தொடைத்து
கொண்டு
புறப்பட்டனர்.

பூட்டப்பட்டது கதவு.

காலம் வரையறைக்கு உட்பட்டது.

1 comment:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உண்மைதான் வரையறைக்குள் இருக்கும்போது இயற்கையை அனுபவிப்பது கடினம் தான். இன்றைய இயந்திர உலகத்தில் பூங்காக்குப் போவது கூட வரையறைக்குள் என்றாகி விட்டது.