Friday 21 August, 2009

ஷியாம் பெனகல்


ஷியாம் பெனகல்-1


ஷியாம் பெனகல் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹதராபாத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமுல்கேரி என்ற ஊரில் பிறந்தார். சாதாரண நடுத்தர சரஸ்வாத் பிராணமன குடும்பத்தை சேர்ந்தவர். ஷியாம் பெனகலின் குடும்பத்தின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தென் கனரா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை ஸ்ரீதர் பெனகல் சினிமா துறையில் நிழல்ப்பட கலைஞராக பணியாற்றிவர். ஸ்ரீதர் பெனகல் தொழில் முறை நிழற்பட கலைஞர் என்றபோதிலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்தார்கள். ஷியாம் பெனகலின் தந்தை ஒரு சுகந்திர போராட்ட வீரர். காந்திஜியால் 1921 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றியவர் ஸ்ரீதர் பெனகல், அப்போது ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக அவர் மீது கைது உத்தரவு பிரபிக்கப்பட்டது. அதையடுத்து டில்லியிலிருந்து ஸ்ரீதர் பெனகல் தப்பித்து ஹதராபாத் வந்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற சில மாதங்களில் ஷியாம் பெனகல் தனது பள்ளிப்படிப்பை புனித அனிஸ் மடப்பள்ளியில்(convent school) தொடங்கினார். அதன் பிறகு தனது உயர்நிலை பள்ளிப்படிப்பை பிரோட்டஸ்ஸடாண்ட் மிஷினரியால் நடத்தப்படும் வெஸ்லி உயர்நிலை பள்ளியில் தொடர்ந்தார். அங்கு அவருக்கு மகிழ்ச்சியற்ற நிலை உருவானதால் மதசார்பற்ற தேசிய பள்ளி என்று அழைக்கப்படும் மக்பஃப் உயர்நிலை பள்ளிக் கல்லூரில் தனது படிப்பை தொடர்ந்தார். ,
ஷியாம் பெனகலின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவ்வகையில் ஷியாம் பெனகலும் பார்வாட் பிளாக் கட்சியின் உறுப்பினரானார். .அதேப் போல் அவரது மூத்த சகோதரரான சுதர்ஷன் ஒரு ஓவியர், தனது மாமாவுடன் சேர்ந்து கல்கத்தாவில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கம்யூனிச கொள்கையில் பெரும் பற்றுகொண்டவரான அவர், ஏராளமான கம்யூனிச நூல்களை தனது தம்பியர்களுக்கு அனுப்பிவித்தார். அவைகளில் எய்ன்ஸ்டின் மற்றும் புடோவிகினின் புத்தகங்களும் அடங்கும். இவைகளினால் ஷியாம் பெனகலுக்கு பெருமளவில் உந்துதல் ஏற்பட்டது. வால் என்ற ஊரில் பிறந்தார். ஷியாம் பெனகலை பொருத்தவரையில் தனது மாமாவான பி. பி. பெனகலிடமிருந்தே பல்வேறு விஷயங்கள் கற்றுணர்ந்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா, அறிவியல் பேன்றவைகள். ஷியாம் பெனகல் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயிலும், கல்லூரி வாழ்க்கை முழுவதிலும் சினிமாவே வியாபித்திருநதது. அவர் முதலாவதாக பார்த்த ரஷியப்படம் Childhood of Maxim Gorky . இவ்வாறாக ஷியாம் பெனகல் தீவிர சினிமா மீது தனது ஆர்வத்தை வளர்த்துகொண்டார். சுதேச்சையான தனது குடும்ப சூழலில் காந்திய கொள்கையுடனும் மாக்ஸிய சித்தாந்தத்துடனும் தன்னை வளர்த்துகொண்டார் என்றாலும் அவரது இளைய பிரயாயத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நேதாஜியின் செயல்பாடுகள் மீது ஷியாம் பெனகலுக்கு மிகுந்த பற்றி இருந்த காரணத்தால் தான் அவரைப் பற்றி படம் எடுக்கவும் உந்துதலாக அமைந்தது. இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நேரு பேசிய “சினிமாவின் ஆகிருதை” என்ற உரையை ஆற்றினார். அதில் ஷியாம் பெனகலும் பார்வையாளராக கலந்துகொண்டு உரையை கேட்டார். அதையடுத்து காட்சி ஊடகத்தின் மீது ஷியாம் பெனகலுக்கு பெரிய ஆளவில் ஈர்ப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்தி திரைப்பட நடிகர் குரு தத் ஷியாம் பெனகலுக்கு நெருங்கிய உறவினர் ஆவார். கோடை விடுமுறையை ஷியாம் பெனகலின் குடும்பத்துடன் ஹதராபாத்தில் குரு தத் கழிப்பது வழக்கமாக கொண்டிருந்தார். இத்தகைய விஷயங்கள் ஷியாம் பெனகலுக்கு தனது 12 ஆம் வயதிலேயே படம் எடுக்க உந்துதலாக அமைந்தன. தனது முதல் படமாக சுட்டியன் மோஜ் மாஸா(Fun in the holidays) வை பதிரெண்டாவது வயதில் ஷியாம் பெனகல் எடுத்தார். தனது தந்தையின் 16mm காமிராவைக் கொண்டு அந்த படத்தை எடுத்து முடித்தார். அதற்கு அவரது மூத்த சகோதரர் உதவியாக இருந்தார். “சுற்றுலா மேற்கொள்ளும் குடும்பத்தினர் தங்களது குடுபத்தில் உள்ள ஒரு குழந்தையை ரயிலில் தொலைத்து விடுகிறார்கள். அதனை தேடுவதாக அமைந்தது தான் அந்த படம். இந்த காட்சிகளை பிறகு தான் எடுத்த குழந்தைகளுக்கான படமான சரண்தாஸ் சோர் என்ற படத்தில் ஷியாம் பெனகல் பயன்படுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்தே ஷியாம் பெனகல் குறிப்பட்ட இயக்குநர்களின் படங்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினார். வியாழக்கிழமைகளில் மதிய காட்சி சினிமா பார்ப்பதற்காகவே பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சில தருணங்களில் திரையரங்கில் அவர் மட்டும் இருக்கும் சூழல் எற்படவே அரங்க உரிமையாளர்கள் படம் போட மறுத்து விடுவதுண்டு. குறைந்தது ஐந்து நபர்களாவது இருக்க வேண்டும். அப்போது தான் மின்சார கட்டனத்திற்காவது கட்டுப்படியாகும் என்று கூறிவிடுவார்கள். அப்போதெல்லாம் ஷியாம் பெனகல் பள்ளிக்கு சென்று நான்கைந்து மாணவர்களை அழைத்து வருவார். அப்படி அவர் பார்த்தது தான் vittorio de sica வின் “Bicycle thieves”, இப்படியாக தான் அவரது ஆர்வம் தொடர்ந்தது. தனது பள்ளி படிப்பை மக்பஃப் உயர்நிலை பள்ளிக் கல்லூரியில் முடித்த பிறகு ஒஸ்மானியா பல்கலை கழகத்தின் கீழுள்ள நிஜாம் கல்லூரில் தனது கல்லூரிப்படிப்பை பொருளாதார பிரிவு மாணவராகத் தொடங்கினார். நிஜாம் கல்லூரி ஷியாம் பெனகலுக்கு பலவேறு ஊற்று கண்களை திறந்து விட்டது. குறிப்பாக வைதீஸ்வரன், தீவிர மாக்ஸியவாதியான அவர் ஷியாம் பெனகல் இடதுசாரி சிந்தனைகள் மீது ஆழ்ந்து நோக்க காரணியாக இருந்தார். இந்திய ஆட்சிப்பணியான மிகிஷி க்கு தேர்வாகியும் அதனை விடுத்து வைதீஸ்வரன் தெழுங்கான போராட்டத்தில் ஈடுப்பட்டார். பிறகு பேராசியர் கிருஷ்ண மேனன், பேராசியர் செட்டி ஜெகன், பேராசியர் மயர்ஸ் போன்றவர்களின் பயிற்றுவிப்பு பெனகலுக்கு மிகுந்த பயனளித்தன. ஒஸ்மானியா பல்கலை கழக நூலகம் அவருக்கு அமெரிக்க, பிரஞ்ச் ஜெர்மன், ரஷிய இலக்கியங்களை பயிற்றுவித்தது. ஸ்டின்பெக், ஹம்மிங்வே, ரில்கி, தாமஸ் மண் போன்றவர்களின் படைப்புகள் ஷியாம் பெனகல் மிகவும் கவர்ந்தன. கல்லூரியில் பல்வேறு நாடகங்களை இயக்கிய அவர் டி. எஸ். எலியட்டின் “Murder In The Cathedral” என்ற நாடகத்தை இயக்கியும் நடிக்கவும் செய்தார். அக்காலகட்டத்தில் தான் ஆங்கூர் என்ற சிறுதலையினை எழுதினார். அந்த சிறுகதை தான் திரைப்படமாக உருபெற 14 ஆண்டுகள் ஆனாது. தனது நெருங்கிய உறவினரான குரு Mr &Mrs 55, CID, Pyaasa, Kaagaz ke phool போன்ற வெற்றிப்படங்களை எடுத்தது ஷியாம் பெனகலுக்கு சினிமா மீது மேலும் ஆர்வமும் திறனும் கூடியது. இருப்பினும் குரு தத் பாணி திரைப்படங்கள்எடுக்க அவருக்கு ஆர்வம் இல்லை.

( தொடரும்)

1 comment:

Anonymous said...

It is a pity, that now I can not express - I hurry up on job. But I will return - I will necessarily write that I think on this question.