Friday, 28 August, 2009

கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்


கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்

கிம் கி-டுக் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20 ஆம் நாள் தென் கொரியாவில், கியாங்சாங் என்ற மாகாணத்தில் உள்ள பாங்வா என்ற ஊரில் பிறந்தார். அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் பாங்வாவிலிருந்து சியோலுக்கு குடிப்பெயர்ந்தார்கள். தனது 17 ஆம் வயதிலேயே பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை கிங் கி-டுகிற்கு ஏற்பட்டது. அதன் பின்னர் தொழிற்சாலை ஒன்றில் வேலையில் சேர்ந்தார். பின்னர் தனது இருபதாவது வயதில் கப்பல் பணியில் சேர்ந்தார். அங்கு ஐந்து வருடங்கள் வேலைப் பார்தார். உடல்நிலையை தேற்றிக் கொள்ளும் படி அவர்கள் அறிவறுத்தியதன் பேரில் அந்த பணியை விடுத்து தேவாலையத்தில் பார்வையற்றவர்களை கவனிக்கும் பணியை மேற்கொண்டார். மத போதகராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அப்போது இருந்தது. தான் வைத்திருந்த அனைத்து பணத்தையும் எடுத்துகொண்டு பாரிஸ் செல்ல விமான டிக்கெட் வாங்கினார். அங்கு சென்றார், தான் வரைந்த ஓவியங்களை பாரிஸ் நகர வீதிகளில் அலைந்து திரிந்து விற்றார். இவ்வாறாக 1990 முதல் 1992 வரை பாரிஸில் கழித்தார். தென் கொரியா திரும்பியதும் தனது புதிய ஆர்வத்தை திரைப்படத்தின் மீது திருப்பினார். திரைக்கதை எழுவதற்கு பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனம் 1993 ஆம் ஆண்டு நடத்திய திரைக்கதைக்கான போட்டியில் கிம் கி -டுக் முதல் பரிசை வென்றார். அதையடுத்து 1994 ஆம் ஆண்டு கொரிய திரைப்பட கழகம் நடத்திய திரைக்கதைக்கான போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார். அதே நிறுவனம் 1995 ஆம் ஆண்டு நடத்திய போட்யில் முதல் பரிசை வென்றார். கிம் கி-டுக் 1996ஆம் Crocodile என்ற திரைப்படத்தை எடுத்தார். சியோலில் உள்ள ஹான் நதிகரை பகுதியில் வாழும் ஒருவனைப் பற்றிய படம். தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் பிணங்களை மீட்பதை தொழிலாக கொண்டிருக்கும் அவன், தற்கொலை முனையும் ஒரு பெண்ணை காப்பாற்றும் அவன், அவளை கற்பழித்து பயன்படுத்துவதாக கதை அமையப்பெற்ற படம் அது. அப்படத்தினை முன்னிறுத்த கொண்டு செல்லும் முனைப்பில் பத்திரிக்கையாளர்களிடம் திரையிட்டு கிம் கி-டுக் ஆதரவு கோரினார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக ஆதரவு காண்பிக்க வில்லை. இதனிடையே புசான் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட பின் வெகுவாக பேசப்பட்டது. அடுத்ததாக Wild Animals என்ற படத்தை எடுத்தார். மூன்றாவதாக 1998 ஆம் ஆண்டு அவர் எடுத்த படம் Birdcage Inn. இந்த படம் 28 வயதுடைய பெண்ணை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். Birdcage Inn என்ற தங்கும் விடுதியில் ஏற்கனவே பணியாற்றிருந்த ஒரு விபச்சாரிக்கு பதிலாக வரும் “ஜின்- அ” பற்றிய படம். அடுத்ததாக 2000 ஆம் ஆண்டு Real Fiction மற்றும் The Isle என்ற இரு படங்களை எடுத்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு Address Unknown மற்றும் Bad Guy என்ற இரு படங்களை எடுத்தார். அதையடுத்து 2002 ஆம் ஆண்டு The Coast Guard என்ற படத்தை எடுத்தார். தென் கொரிய கடலோர காவற்படை வீரன் ஒருவன் வடகொரிய உளவாளியை கொன்று விடுகிறான். மறைவில் பெண் ஒருத்தியுடன் ஆலிங்கணம் செய்துகொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடந்து விடுகிறது. இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொல்லும் அவனுக்கு எதிராக அங்கு மக்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். அந்த கொலையை கண்ட அந்த பெண் புத்தி போதலித்து போகிறாள். கிம் கி- டுக்கின் ஏனைய படங்கள் போலவே வன்முறை, பெண், பெண் உலவியல், பாலியல், பிரிந்த இரு தேசங்களினால் ஏற்படும் இழப்புகள் போன்றவைகளை கொண்டது தான் The Coast Guard படம். அடுத்ததாக அவர் எடுத்த படம் Spring, Summer, Fall, Winter... and Spring . . அவரது படங்களிலியே மிக முக்கியமானதாக கருதிப்படும் படம் இது. இதனை 2003 ஆம் ஆண்டு எடுத்தார். நான்கு பருவங்களை கொண்டு ஐந்து பகுதிகளாக இப்படம் எடுக்கப்பட்டது.
இளவேனிற் காலம்:
இளவேனிற் காலத்திலிருந்து படம் தொடங்குகிறது. மலைக்கு நடுவே ஏரி, அதன் நடுவே ஒரு புத்த கோயிலில். அதில் ஒரு புத்த துறவி வசிக்கிறார். அவரோடு ஒரு சிறுவன் உள்ளான். தியானம் செய்வதும், கடவுள் வழிப்பாடு செய்வதும் தான் துறவியின் முக்கிய வேலை. வயதான புத்த துறவியாக ஓ- ங்-சூவும், சிறுவனான சியோ ஜியோ யாங்கும் நடித்திருந்தார்கள். அந்த புத்த கோயிலிருந்து கரைக்கு செல்ல ஒரு படகு உண்டு. அதை கொண்டு தான் இருவரும் காட்டுக்கு சென்று மூலிகையை பறித்து வருவார்கள். ஒரு நாள் அந்து சிறுவன், காட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் ஒரு தவளை பிடித்து, கல்லை அதன் முதுகில் கட்டி விடுகிறான். அதே போல் பாம்பை பிடித்தும் கல்லை கட்டி விடுகிறான். மீனை பிடித்து அவ்வாறே தூலினால் கட்டுகிறான். இதை கண்ட புத்த துறவி, உறங்கி கொண்டிருக்கும் அச்சிறுவனின் முதுகில் ஒரு கல்லை கட்டி விடுகிறார். காலையில் எழுந்த அச்சிறுவன் துறவியிடம் அழுகிறான். அந்த இரு உயிரினங்களையும் விடுவித்தால் தான் அவிழ்த்து விடுவதாக துறவி கூறுகிறார். அவன் போய் முதலில் தவளை முதுகில் கட்டியிருக்கும் கல்லை அவழ்த்து விடுகிறான். பாம்பு இறந்து விடுகிறது. அதே போல் மீனும் பாறை இடுக்கில் இறந்து கிடக்கிறது. அச்சிறுவன் தேம்பி தேம்பி அழுகிறான்.
கோடைக்காலம்:
அடுத்ததாக கோடைக்காலம், அப்போது அச்சிறுவன் வளர்ந்து அடுத்த பருவமான இளைஞனாகிறான். குளத்தின் கரை முகப்பில் இருக்கும் வண்ணம் தீட்டிய கதவு திறக்கிறது. அந்த இளைஞன் படகை செலுத்திகொண்டு கரைக்கு வருகிறான். காட்டின் வழி நடக்கிறான். இரு பாம்புகள் புணைர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இது அவளது காதல் கொள்ளும் பருவம் கொண்டிருப்பதை குறியீடாக உள்ளது. காட்டுப்பாதை வழியாக நவ நாகரிக உடையணிந்த தாயும் மகளும் வருகிறார்கள். உடல் நலமின்றி இருக்கும் தன் மகளை புத்த கோயிலுக்கு அழைத்து வந்திருப்பதாக கூறுகிறாள் தாய். அவர்களை படகில் ஏற்றி புத்த கோயிலுக்கு அழைத்து வருகிறான். வயதான புத்த துறவியிடம் தனது மகளை குணமாக்கும் படி கூறி தாய் சென்று விடுகிறாள். அவளுக்கு மூளிகை மருத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனிடையே அந்த பெண் மீது மோகம் கொள்கிறான். ஒரு நாள் உறங்கி கொண்டிருக்கும் அவளது மார்பில் கை வைக்கிறான். விழித்து கொள்ளும் அவள், அவனது கண்ணத்தில் அரைகிறாள். பிறகு அவளோடு ஆலிங்கணம் செய்கிறான். அவளுடனான பாலுறவு தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ஒரு நாள், படகில் இருவரும் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறே படகில் ஒன்றாக உறங்கி கொண்டிருப்பதை முதிய துறவி பார்த்து விடுகிறார். “உனக்கு குணமாகி விட்டதா? என்று கேட்கிறார் முதிய துறவி. “ஆம்”, என்கிறாள். “அப்படியென்றால் உனக்கு இனி இங்கிருக்க அவசியமில்லை. உனது இடத்திற்கு நீ சென்று விடலாம்”, என்கிறார். “இல்லை, அவள் செல்ல வேண்டாம்,” என்று கதறுகிறான் அந்த இளைய துறவி. “காமம் பற்று கொள்ள ஆசைப்படும். அதுவே கொலை செய்ய தூண்டுதலாக இருக்கும்”, என முதிய துறவி கூறுகிறார். அவள் அங்கிருந்து புறப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். அந்த இளைய துறவி ஆத்திரம் கொள்கிறான். அந்த பெண்ணை தேடி புறப்படுகிறான். அங்கிருக்கும் புத்த சிலையை எடுத்து கொண்டு நள்ளிரவில் புத்த கோயிலை விட்டு போய் விடுகிறான். இலையுதிர் காலம்:
பல வருடங்கள் கழிந்தது. இதனிடையே தனக்காக ரொட்டித் துண்டு வாங்கி வருகிறார் அந்த புத்த துறவி. ரொட்டி சுற்றப்பட்ட காகிதத்தில் முப்பது வயதுள்ள இளைஞன் ஒருவன் தனதி மனைவியை கொன்று விட்டு அந்த முதிய புத்த துறவி கேட்கிறார். சோகம் தழும்பும் முகத்துடன் அவன்
தப்பியோடி விட்டதாக படத்துடன் செய்து போடப்பட்டிருப்பதை காண்கிறார். அந்த இளைஞன் மீண்டும் அந்த புத்த கோயிலுக்கு திரும்பி வருகிறான். ஏரியின் வாயிற் கதவை திறந்து கொண்டு நிற்கிறான். படகுடன் வரும் முதிய துறவி, “பெரிதாக வளர்ந்து விட்டாயே,” என புன்முறுகலுடன் படகில் எறுகிறான். இருவரும் ஏரி நடுவே இருக்கும் புத்த கோயிலுக்கு வருகிறார்கள். “உனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதல்லவா. சுவராசியங்களை கூறு.” என்றார். “என்னை மட்டுமே காதலிப்பதாக கூறிய அவள், காதலுக்கே பாவம் செய்து விட்டாள். வேறொருவனோடு போய் விட்டாள்.” என்கிறான். “ இதற்கு முன் இவ்வுலகில் வாழும் மனிதர்களை நீ அறிந்திருக்க வில்லை. சில சமயங்களில் நமக்கு பிடித்த பொருட்களை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். உனக்கு எது பிடித்திருக்கிறதோ, அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் அல்லவா”, என்று அந்த முதிய புத்த துறவி ஆறுதல் கூறுகிறார். அவன் சமாதானம் அடையவில்லை. இதனிடையே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் அவனை அடித்து தொங்க விடுகிறார். ஒரு நாள் போலிஸ் அவனை கைது செய்கிறது. காலம் கடக்கிறது. தந்தனியாக இருக்கும் முதிய துறவி, படகில் விறகுகளை அடுக்கிக் கொண்டு, கீழே மெழுகுவர்த்தியை கொளுத்தியவாறு தன்னைத் தானே மூச்சை அடக்கிக் கொள்கிறார்.
பனிக்காலம்

அடுத்ததாக பனிக்காலம், சிறைப்பட்டுப் போன அந்த இளைய துறவி இளைய பருவத்தின் முதுநிலையில் வருகிறாள். அந்த வேடத்தில் இயக்குநர் கிம் கி-டுக் நடித்திருக்கிறார். ஏரி பனியால் உறைந்து கிடக்கிறது. திரும்பும் அந்த சிறையிலிருந்து திரும்பும் அவன், தன்னைத் தானே மடித்து கொண்டு எரிந்து போன முதிய துறவியின் சாம்பலிருந்து எஞ்சியதை ஒரு சிவப்பு துணியில் சுற்றுகிறான். பிறகு அங்கு கிடைக்கும் பழைய தீயான புத்தகத்திலிருந்து தியானங்களை பயில்கிறான். இதனிடையே ஒரு பெண் முகத்தை துணியால் சுத்திக்கொண்டு கை குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு வருகிறாள். அங்கு வழிப்பட்டு விட்டு குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நள்ளிரவு பொழுதில் ஓட எத்தனிக்கையில், தண்ணீருக்காக இளையத் துறவி தோண்டிய குழியில் விழுந்து மடிந்து விடுகிறாள். காலையில் இளைய துறவி எழுந்து பார்க்கையில் கை குழந்தையை புத்த கோயிலில் காண்கிறான். பிறகு உறைந்து கிடக்கும் குளத்தில் நடந்து வரும் அவன், தான் தோண்டிய குழியில் அவள் விழுந்து இறந்து கிடப்பதை காண்கிறான். தனது இரு முதுகில் கயிற்றைக் கொண்டு உருண்டை வடிவ கல்லை கட்டி இழுத்து கொண்டு மலை உச்சிக்கு செல்கிறான். தான் கொண்டு வந்த புத்தர் சிலையை அங்கு வைத்து தியானம் செய்கிறான்.

மீண்டும் இளவேனிற் காலம்

இறுதியாக இளவேனிற் காலம் மீண்டும் வருகிறது. கைவிடப்பட்ட குழந்தையுடன் அந்த இளைய துறவி புத்த கோயிலில் வசித்து கொண்டிருக்கிறான். அவன் வளர்ந்து சிறுவனாகிறான். இப்போது அவனுக்கு அச்சிறுவன் சீடனாக இருந்து வருகிறான். ஆமையை சித்தரவதைச் செய்வதும், அந்த இளைய துறவியை சிறுவயதில் செய்ததைப் போல் பாம்பு, மீன், தவளை போன்றவைக¬ளின் உடலில் கற்களை நூலினை கட்டியும் சித்தரவதை செய்து வந்தான்.
இப்படத்தைப் பொருத்தவரையில் இன்பம், கோபம், சோகம், சந்தோஷம் நான்கு பருவ நிலைகளைப் போல் ஒரு சங்கிலித் தொடர்புகளாக பின்னி வருவதை திரைப்படமாக எடுத்துள்ளார்.

No comments: