நித்திரையில் திறந்த கதவினூடாக உள் நுழையும் ஞாபகங்கள். பியானோவின் கருப்பு வெள்ளை சுருதி கட்டைகளை மேலெழுந்தவாறுமீட்டின உணர்விரல்கள். விரல்கள் கருப்பு வண்ண கட்டைகளை மீட்டும் போது மரக்கிளைகளிலிருந்துபறவைகள் பறப்பதும் வெள்ளை கட்டையை மீட்டும் போது அவைகள் வந்து அமர்வதுமாக இருந்தன.
உலகமயமாதல் குறித்து விஷயத்தில் பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. உலகமயமாதல் என்றால் நாடுகளுக்கிடையே எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளித்து முதலீடு செய்யப்படும் முறைமை ஆகும். உலகமயமாதல் உடைப்படும் காலகட்டத்தை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு இது புதிதாக வந்த ஒன்று என்றாலும் இதன் ஆதி அந்தம் பல்வேறு முறைகளில் வேவ்வேறு நாடுகளில் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது. கடந்த 1944 ஆம் ஆண்டு இதன் போக்கு இருந்ததாக கண்டறியப்பட்டாலும் 1981 ஆம் ஆண்டில் தான் பொருளாதார நிபுணர்கள் உலகமயமாதல் என்ற சொல்லாடலை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக இதன் செயல்பாடு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது பொதுமை படுத்த முடியாது. இந்தியாவில் 1990களின் தொடக்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன் விளைவால் எஃகு, மருந்து பொருள், பெட்ரோலியம், ரசாயனம், ஜவுளி, சிமெண்ட், சில்லறை வணிகம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடு குவியத் தொடங்கியது. இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு. சுமார் 110 கோடி மக்களின் சந்தையை கருத்தில் கொண்டே முதலீடுகள் குவிந்தன. குறுகிய காலத்திற்குள்ளாகவே பெரும் முதலீடுகள் வந்து குவிந்தன. அத்தகையது நீடித்த வளர்ச்சியாக அமையவில்லை என்பது இப்போது நிரூபனம் ஆகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாதலால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்ளோடு போட்டிப் போட முடியாமல் பெரும் இழப்புகளை சந்தித்தன. உற்பத்தித் துறை, மருந்து, ரசாயனம், எஃகு போன்ற துறைகளில் ஏராளமானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. உலமயமாதல் இவ்வுலகத்திற்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்தியுள்ளது. வறுமை அதிகரித்தும், சமச்சீரற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு மக்களை ஆட்படுத்தியும், அநீதியை ஏற்படுத்தியும், காலகாலமாக கடைப்பிடித்து வந்த கலாச்சாரதிற்கு ஊறு விளைவித்தும், இன்னும் பல உலகலாவிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதலினால் (ஒரு நாட்டிற்குள்ளாகவே) வருமான ஏற்றத் தாழ்வுகள் பெரியளவில் நிகழ்ந்திருப்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள்(120 கோடி மக்கள்) நாள் ஒன்றுக்கு 1 டாலர்(அதாவது இந்திய ரூபாய்க்கு ரூ.50 ) மட்டுமே வருமானமாக பெற்று வருவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் சுமார் 83 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாரிப்பதாக அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எந்த கட்சியோ எந்த அமைப்பின் சார்பாகவோ எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அல்ல. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை. இப்போது உலக அளவில் கிடைக்கக் கூடிய ஆண்டு சராசரி வருமானத்தை பங்கிட்டுக் கொள்பவர்களின் விழுக்காட்டினை காண்போம்:ஒட்டுமொத்த மக்களில் பயன்பெறுவோரின் மொத்த வருவாயில்விழுக்காட்டளவில் - நிலை - விழுக்காட்டளவு 20% முதல் நிலை பணக்காரர்கள் - 82.7% 20% இரண்டாம் நிலை பணக்காரர்கள் - 11.7% 20% மத்திய தர மக்கள் - 2.3% 20% ஏழை மக்கள் - 1.4 20% மிகவும் ஏழைகள் - 1.2%இந்த கணக்கு வெறும் எண்களால் கொண்டது மட்டும் அல்ல. கோடான கோடி மக்களின் சதைத் துளி. அந்த சதைத் துளியைத் தான் பங்குப் போட்டுள்ளது இன்றைய உலகமயமாதல். உலக வங்கி மற்றும் அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கைகள் இதை துள்ளியமாக கொடுத்திருக்கின்றன. இந்த கணக்கை பார்க்கும் போது மற்றொன்றும் தெளிவாக புலப்படுகிறது. அது உலகில் உள்ள 120 கோடி பரம ஏழைகளில் 84 கோடி இந்தியர்கள். அதாவது உலக அளவில் 70 விழுக்காட்டுக்கு மேல், இந்தியா அளவில் 80 விழுக்காடு மக்கள் கால் வயிற்று சாப்பாட்டுக்கே வக்கற்றவர்களாக உள்ளனர். இன்னொன்றும் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க கொள்ள வேண்டும் உலக அளவில் பணம் படைத்தவர்களாக இந்திய பனியாக்கள் திகழ்கின்றனர். இதிலிருந்தே உலக அளவில் இந்தியாவில் தான் சுரண்டலுக்கு எஜமாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள 10 முதல் நிலை செல்வந்தர்களில் 4 பேர் இந்தியர்கள். இந்தியாவின் முதல் பத்து செல்வந்தர்கள்.இந்திய பணக்கார்ர்கள் - இனம் - சொத்து மதிப்புலட்சுமி மிட்டல் - ராஜஸ்தான் மார்வாரி(பனியா) - 160000 கோடிமுக்கேஷ் அம்பானி - குஜராத்திய பனியா - 100000 கோடிஅனில் அம்பானி - குஜராத்திய பனியா - 90000 கோடிஅசிம் பிரேம்ஜி - முஸ்லீம் - 85000 கோடிகுஷல் பால் சிங் - உத்தர பிரதேச ஜாட் - 50000 கோடிசுனில் பாரத் மிட்டல் - தந்தை மார்வாரி, தாய் ஷத்திரிய - 47500 கோடிகுமாரமங்கலம் பிர்லா - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடிருயா சகோதரர்கள் - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடிரமேஷ் சந்திரா - ஜெயின்(பனியா) - 32000 கோடிபல்லோன்ஜி மிஸ்டிரி - பார்சி - 28000 கோடிஆதி கோத்ரேஜ் - பார்சி 20000 கோடி இவ்வாறாக 100 வது இடம் வரை வரிசைப்படுத்தினாலும் 90 சதவீத செல்வந்தர்கள் பனியா வகுப்பினராக தான் உள்ளனர். அதற்கென்று ஒரு புத்தகம் தான் வெளியிட வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை. திருடர்களுக்கெல்லாம் புத்தகம் போட முடியாது. இவர்கள் ஜாக்கிரதை என்று போஸ்டர் தான் அடித்து ஒட்ட முடியும். சமூகத்தில் இரு துருவங்களாக, எட்ட முடியாத தூரத்தில் இரு பிரிவினரின் பட்டிலையும் பார்த்திருப்பீர்கள். இது தான் உலகமயமாதலின் சாதனை. மனிதனை பணத்திற்காக பேதலிக்க அலைவிட்டுள்ளது உலகமயமாதல். இந்த உலகமயமாதலின் கட்டுப்படற்ற வர்த்தகம் தேவையில்லாத யூக வணிகத்தின் மீது பந்தையம் வைத்து விளையாடுகிறது. இன்றைய நிலையில் அது பரிதாபத்திற்கு உரிய நிலைய அடைந்துள்ளது என்பது தான் உண்மை. உலகமயமாதல் காலவதியாகும் நிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டினர்க்கே வேலை என்ற முழக்கத்தை உரக்க எழுப்பியுள்ளனர். இத்தகைய நிலையில் உலகமயமாதலின் நோக்கம் அடிப்பட்டு போகிறது. அது எந்த வித புரட்சியும் இன்றி தன்னாலேயே மடிந்து விட்டது. உலகமயமாதல் கொள்கையினால் நேர்ந்த விளைவுகள் குறித்து பார்ப்போம்:1. நாட்டின் எல்லைகளை கடந்து உலகலாவிய சந்தையை ஏறபடுத்தியது. அதன் விளைவால் நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனைத்து விதமான பொருள்களும் முழுமையாக கிடைத்து வந்தன.2. பெரும் நிறுவனங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், பிராந்தியங்களுக்கும் வணிக சந்தைகளுக்கும் தங்கு தடையின்றி ஏராளமான நிதிகள் கிடைக்கப் பெற்றன.3. பொருள்களும் முதலீடுகளும் பரிமாற்றத்தின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் உலகலாவிய பொது சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது.4. பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல் துறையிலும் உலகமயமாதல் வியாபித்து, உலகலாவிய அரசாங்கமாக ஒற்றைத் தனைமை ஏற்படுத்தியது( இது தான் மிக முக்கியமானதும் மிக ஆபத்தானதும் கூட, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிகார மீறலை கண்டிருப்பீர்கள். அமெரிக்காவில் மட்டும் புஷ்ஷோ அல்லது பொருளாதார வீழ்ச்சியோ ஏற்பட்டிருக்காவிட்டால் படு பாதகமாக விளைவை உலகம் சந்திருக்க கூடும்.5. உலகில் உள்ள கடகோடிக்கும் தகவல்கள் சென்றடைந்துள்ளது(இதைத் தான் தகவல் தொழிற் நுட்ப புரட்சி என்று கூறுகின்றனர். அதனால் என்ன பயன் கிராம்பபுறங்களில் வாழ்வாதாரம் சிதைந்து நகரங்களை நோக்கி மக்கள் புலம் பெயர்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கிறது. இதனால் கடைக்கோடி என்பதில் பொருளற்று போய் விடுகிறது).6. காலச்சாரத்தைப் பொருத்தவரையில் ஒரு பொது தன்மை உருவாகி, நிலம் சார்ந்த பண்பாடு மற்றும் காலச்சாரம் சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரபரிய உற்பத்தி முறை மற்றும் அதை சார்ந்த தொழில் முனைவோரின் வாழ்க்கை பெரியளவில் பாதித்திருக்கிறது.7. சூழலியலைப் பொருத்தவரையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற பொருளாதரக் கொள்கையில் மூலம் தேவையற்ற போக்குவரத்து அதிகரித்து, நுகர் கலாச்சாரம் பெருகி, நச்சு விளைவிக்கும் அமைசங்களின் உற்பத்தியால் புவி வெப்பம் பெருமளவு அதிகரிந்துள்ளது. இந்த பிரச்சனையை தனியரு நாடு சமாளித்து விட முடியாது. புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் உலகமயமாதல் அவசியப்படுகிறது.8. போக்குவரத்தை பொருத்தவரையில் ஐரோபிய கார்களின் மவுசு குறைந்து, சாலைகளில் அமெரிக்க வகை கார்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தொழிற் நுட்பம் அதிகரித்து, போக்குவரத்துக்கான நேரம் குறைந்து, பயணிக்கும் கால நேரம் வெகுவாக குறைந்துள்ளது(இவ்வாறாக கூறுபடுவது அவ்வளவு உண்மையல்ல, இதிலிருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தை அமெரிக்க முதலாளித்துவம் மிஞ்சி விட்டதை அறிந்து கொள்ளலாம்)9. சர்வதேச அளவில் கலாச்சாரப் பரிமாற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.(இது பற்றியான நீண்ட ஆய்வு கட்டுரை-”உலகமயமாதலும் வெகுஜன கலாச்சாரமும்” அடுத்த இதழில் வரவுள்ளது). * இதனால் பன்முக கலாச்சாரம் என்ற பெயரில் பெரும் வணிகத்தன்மையோடு மேற்கத்திய இறக்குமதிகள் புகுந்துள்ளது. உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் SULM DOG MILLIONAIRE படத்தை கூறலாம், இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களையும், பிற நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட விருது, உலகில் அதிகமாக வாழும் இஸ்லாமியர்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டதாகும். * இத்தகைய கலாச்சார பரிவர்த்தையில் முக்கிய பங்கு வகிப்பது மேற்கத்திய கலாச்சாரமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். * பெருமளவிலான உல்லாச சுற்றுலா பயணம் அதிகரித்துள்ளது. அதன் மூலம் உலகலாவிய விபச்சாரம் முதன்மையடைந்துள்ளது. கடற்கரை உல்லாச விடுதிகள். பாலர் பாலியல், முதலியவைகள் அதிகரித்திருக்கிறது. இதில் முக்கிய பலிகடாவாகி இருப்பது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, பிரேசில், பிலிப்பென்ஸ் மற்றும் ஏனைய வறிய மற்றும் வளரும் நாடுகள். * இத்தகைய சுற்றுலா மையங்களாக கடற்கரையே அமைந்துள்ளதால் பாரம்பரிய மீனவர்களில் கிராமங்கள் அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் எழுந்து வருகின்றன. அதற்காக முதலில் மேற்கொள்ள படுவது தான் கடலோர சாலை அமைப்பு. * இத்தகைய உல்லாச சுற்றுலா பயணிகளின் இச்சைகளுக்கு விருந்தளிக்க உறுதுணையாக இருப்பது தகவல் தொழிற் நுட்பம். குறிப்பபாக ஆர்குட், பேஸ் புக், யூ டூப், போன்ற இணையத்தளங்கள் உல்லாசம் தேடி வரும் பயணிகளுக்கு அலைச்சல் இல்லாமல் ஆட்களை பிடித்து தர ஏதுவாக இருக்கின்றன. * கடலோர பீச் ரிசோட்கள் பெருக்கத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் பயன்பாடுகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். நான் கூற அவசியமில்ல். * இப்போது அதிகரித்து வரும் பேஷன் ஷோக்களையும் அறிந்து வைத்திருப்பீர்கள். மாடல்களை தேர்ந்தெடுக்க பெரும் முதாலாளிகளே. பரிசுகள் வழங்குவதும் அவர்களே. அதுவும் ஏதாவது உல்லாசத் தீவுகளில் தான் பரிசுகளை வழங்குவார்கள். இது குறித்தும் நான் விரிவாக எழுத அவசியம் இல்லை.உதாரணத்திற்கு கூற வேண்டுமேன்றால் மும்பையில் தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல் போது வெளி வராத பல தகவல்கள் உள்ளன. பெரும் தகை கொண்ட ஊடகங்கள் மெல்லிய சிறகுகளை விரித்து வல்லிய விஷயங்களை வெளியிட்டன. பெரும் மதிப்புக்குரிய பல பெரும் முதலாளிகளின் நல்லாதரவுக் கொண்டு அவர்கள் வலியை தன்னடத்தையுடன் வெளியிட்டன. இதில் எவரையும் குறை கூறுவதற்கில்லை. அங்கு நடந்த கொலைகளில் பல மாடல் அழகிகளுடன் கூடிய தொழில் அதிபர்களிளை பற்றிய செய்திகளை வெளியிடாமல் மரியாதை காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.10. கடைசியாக தகவல் தொழிற் நுற்பம் மற்றும் உலகலாலிய சட்டமுறைமைப்பற்றி பார்ப்போம். * இணையத்தளத்துடனான இணையப்பட்ட உலக அளவிலான தகவல் தொழிற் நுற்பம். தகவல் பரிமாற்றம். அதற்கான உள் கட்டமைப்பு. குறிப்பாக செல்பேசி, கடல் வழி பைபர் இழை கேபிள், சேட்டிலைட் தொடர்பு ஆகியவைகளை கூறலாம். (இவை அனைத்துமே வணிகம் சார்ந்தது என்பது தான் முக்கியம்) * உலக பொதுமைக்கான காப்புரிமை சட்டம். அதன் கீழ் ஏழை நாடுகளை சுரண்டும் போக்கு அதிகரித்துள்ளது. இவையனைத்தும் கொண்டு பார்க்கும் போது உலகமயமாதலினால் பெரும் தீங்க நடந்தேறியுள்ளது. இப்படியிருக்க நமது மன்மோகன் சிங்கை என்ன சொல்வது நீங்களை கூறுங்கள். தரகர் தானே. இவைகளுக்கு கடைசி காலம் வரை உறுதுணையாக இருந்து விட்டு பதவித் துறந்த பசியை மாமா என்று தான் அழைக்க வேண்டும். உலகமயமாதல் என்ற போர்வையில் உலாகாவிய பெருமுதலாளிகள் அனைத்து மூளையிலும் கடை விரித்துள்ளனர். இதனால் உள்ளுர் தொழில்கள் மற்றும் வறியப் பிரிவினர் எழுப்பும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஆக பெரும் சக்தியாக தலைகர்த்த அமெரிக்கா முனைந்துள்ளது. இனி உரிமைகள் குறித்து பேச முடியாது. அதை பெரும் ஊடகங்கள் வெளிப்படுத்த முடியாது. அப்படி செய்தால் அவர்களுக்கான விளம்பரம் உட்பட மற்ற உதவிகளும் நிறுத்தப்படும். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும். தீவிரவாத முத்திரை குத்தப்படும். பெருமுதலாளிகளால் சிறு சிறு ரவுடி கும்பல்கள் வளர்த்து விடப்படுவார்கள். என் ஜி ஓக்கள் மூலம் நேரக்கரம் நீட்டுவார்கள். அற்ப இலவசங்கள் வழங்கப்படும். மக்களுக்கு அற்ப உல்லாசங்கள், மூளையை மழுங்கச் செய்யும் கலியாட்டங்கள் நடத்தப்படும். ஊடாகங்கள் மூலமாக முக்கியமான பிரச்சனைகளை மறைத்து உப்பு சப்பு இல்லாத விஷயங்கள் பெரிதாக வெளிகாட்டப்படும். இன்று தமிழகத்தில் மிக பெரிய கார்பிரேட் சிந்தனையாளராக மூத்திர கலைஞர்( எவ்வளவு முயன்றும் அச்சு பிழை திருத்த முடியாதற்கு வருந்துகிறேன்) மூத்த கலைஞர் திகழ்கிறார். அவரது கட்சி கார்பிரேட் கழகமாக மாறியுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர்களாக ஸ்டாலின், தயாநிதி, அழகிரி, கனிமொழி, தயாளு, ராசாத்தி மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். கழக கார்ப்பிரேட் உடன்பிறப்புகள் அங்காங்க பகுதி மேலாளர்களாக இருப்பார்கள். கட்சி தொண்டர்கள் கம்பெனி வளர்ச்சிக்காகவும், வருவாய்க்காவும் பாடுபடுவார்கள். சம்பளமாக தேர்தலின் போது பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் வழங்கப்படும். கம்பனி சுட்டிக்காட்டும் ஆட்களை அடித்து துவேஷம் செய்பவர்களுக்கு கூடுதல் போனஸாக பதவிகள் வழங்கப்படும். இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. உங்களுக்கு இதை கொண்டு இலங்கையை உற்று நோக்குங்கள் புலப்படும். விடுதலை போராட்டம் நசுக்கப்படுவதும். இந்திய வட்டார அடியாளாக ராஜபட்சே உருபெருவதும் நீங்கள் அறிவீர்கள். உலக முழுவதும் இது தான் நடைப்பெறுகிறது. இது தான் கார்ப்பிரேட் கலாச்சாரம். இந்தியாவில் இத்தகைய விஷயத்தில் முதன்மையாக திகழ்வது மேற்கு வங்காளம் என்பது மிகவும் உன்னதம். டாடாவுக்காக அடியாளாக மாறிய புத்த தேவ், அங்கு நடந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள்.இது தான் உலகமயமாதல், இந்த சிந்தாந்ததை தான் மன்மோகன் பயின்று மாக அறிஞரானார். பிறகு பார் பேற்றும் உலக வங்கிக்கு போனார்.
உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும் -க. செண்பகநாதன்-
இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(லிணீவீssமீக்ஷ் யீணீவீக்ஷீமீ) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது. தனது ஆகப்பெரும் பெருளாதார ஆதிக்கத்தை செலுத்தம் அதிகாரத்தை இழந்திருக்கும் அமெரிக்கா, வளரும் நாடுகளை சுரண்டும் சதி வேளையில் இறங்கியுள்ளது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலக பெரும் சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் நாடுகளை பின் தள்ளி முன்னுக்கு வந்நது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலக பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது. அமெரிக்காவின் சிம்ம சொப்பனத்திற்கு கீயூபாவின் பிடல் காஸ்ட்ரோ திகழ்ந்து வருகிறார். இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வைக் கொண்டது. ஏன் என்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையானது பெருமுதலாளித்து அமெரிக்கா சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போருக்குக் பின் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை கீழேத் தள்ளி உலக பீடத்தை பிடித்த சுரண்டல் கொள்கை. அத்தகைய நிலை தான் இந்தியா இப்போது கடைப்பிடித்து வருகிறது. அந்த வித்தையைத் தான் அண்டை நாடுகளிடமும் இந்தியா காட்டி வருகிறது. அதற்கு உதாரணம் தான் தெற்காசியாவில் அதிக்கம் செலுத்த முயல்வது, இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த அரை வேக்காடு கருத்தாக்கம், மூடத்தனமானது. அமெரிக்காவை பொருத்தவரை அனைவரும் வந்தேறிகள் தான். ஒற்றை பண்பட்டையுடையது. இந்தியாவோ பல தேசிய இனங்களால் தைக்கப்பட்ட ஒரு ஒட்டு ஆடை. அடை ஜாக்கிரதையாக அணியப்பட வேண்டும். பலருக்கும் சொந்தமான வண்ண ஆடையில் கோர்க்கப்பட்ட கூட்டு நைதல். நூல் அறுப்பட்டால் கழன்று வடும். அதே போல் அமெரிக்காவில் புஷ் அதிபராக இருந்த வரையில் இந்திய ஆட்சியார்கள் ஒரு ஏவல் நாய் போல் தான் செயல்பட்டு வந்தார்கள். இந்த நிலை முந்தைய ஏவல் நாய்களான பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அந்த நாய் சண்டை தான் மும்பை தாக்குதல் சம்பவம். இந்தியாவின் நுண்ணிய கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்களை சற்றும் அறியாமலோ அல்லது மறுத்தோ ஆட்சிப் புரிந்துக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் ஒரு ஏட்டு சுரக்காய். பொருளாதாரத்தை ஒரு பாடப்பிரிவாக பயின்று தேரி, உலக வங்கி மற்றும் அமெரிக்கா தரகராக பிழைப்பு நடத்தியவர். அதன் இந்திய தரகு முதலாளிகளின் கருணைப் பார்வையால் காங்கிரஸில் இணைந்து தனது முந்தைய பணியை அரசியல் முகத்துடன் மேற் கொள்ளத் தொடங்கினார். இந்தியாவின் ஒட்டுமொத்த சீர் குலைவுக்கு முந்தைய நரசிம்மராவின் அரசே காரணம். பாபர் மசூதி மற்றும் உலமயமாதல். பிறகு இந்திய அளவில் ஊழல் ஏற்று கொள்ளப்பட்ட, எழுதப்படாத சட்டமானது, இது பற்றி இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை. இனி அமெரிக்கா உலகை வளைத்துப் போட்ட கதையை பார்ப்போம்: இரண்டாம் உலக போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்த போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளுடம் நிலைக்காட்டிக் கொண்டது. அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலைய செய்த்தும் அமெரிக்காவிற்கு லாபமாக வந்தடைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மைனாலும், நாடு பிடிக்கும் ஆசைகளாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்து பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கும் . பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தைய அட்சிப்புரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுப்பிடிப்புகளையும், வலிமைகளையும் நாடுளை பிடிப்பதிலேயே செலவிட்டது. இதற்கிடையே உலமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அணுகூலத்தை தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளைய செய்தது.இரண்டாம் உலக போரிக்கு பிந்ததைய நிலையில் இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேளை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாபமடைந்தன(இவைகள் பற்றிய நுண்ணிய விவரங்கள் அடுத்தடுத்து தொடர் கட்டுரைகளில் காண்போம்). இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட அமெரிக்க மோக சிந்தனை பற்றி நாம் நகர்வோம்: “எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்தியாவில் நான் வளர்ந்துக் கொண்டிருந்த தருணம் அது. எனது தந்தையின் கையைப் படித்து கொண்டு பலசரக்கு கடைக்கு செல்கிறோம். அப்போது அவ்விழியாக கோயில் பிரகாரத்தை கடக்கையில், பபாபி அமெரிக்கர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும், என்றார் என் தந்தை. அந்த நம்பிக்கை இப்போதும் எனக்கு இருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அமெரிக்கா நிச்சயம் மீண்டு வரும்” இந்த கதையை யார் கூறியது தெரியுமா? வேறு யாரும் இல்லை. சாட்ஷாத் ப்பாபி ஜிண்டால் தான். இன்று ஒபாமாவுக்கு எதிராளியாக வளர்த்து விடப்பட்ட இந்திய பனியா தான் இவர். இப்போது இவர் அமெரிக்காவின் லூசியான மாகாணத்தின் கவர்னராக உள்ளார். அவரது தந்தை 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்கிறார். இவர் 1971 ஆம் பிறக்கிறார். இந்துவாக பிறந்த இவர், பள்ளி பருவத்தில் கத்தோலிக்கராக மதம் மாறுகிறார். இதிலிருந்தே அவரின் திட்டம் புரிந்திருக்கும். இது போல் தான் அனைத்து பஞ்சாபியர்களின் நிலையும். இதிலிருந்து மன்மோகன் விதிவிலக்கல்ல. குறிப்பாக பஞ்சாப், இம்மாச்சல பிரதேசம், ஹரியான போன்ற மாநிலங்களில் ஆழ்ந்து பதிந்துள்ள அமெரிக்க நப்பித்தனத்தின்(நம்பிக்கை) சிதறிய வெளிப்பாடு தான் இது. இது அந்த மாநிலங்களில் வசிப்பவர்களின் மொத்த வெளிப்பாடு. இந்த கட்டுரைக்கு இவ்வாறான தலைப்பு எத்தகைய பொருத்தம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்திய முதலாளித்துவ சிந்தனை இப்படித்தான் வளர்ந்தது. தொடக்க காலத்தில் இந்த சிந்தனைப் போக்கிற்கு அதரவாக இருந்த ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஆனால் மன்மோகன் வந்த பின்(நரசிம்மா ஆட்சியின் போதே) அதை காங்கிரஸின் தாரக மந்திரமாக மற்றிய பெருமை அவருக்கு உண்டு. ஏனென்றால் அவரும் பஞ்சாபியர் ஆயிற்றே. அத்தகைய மாநிலங்களில் இருந்த ஆசை இந்தியா முழுவதும் பரவி நோயாக பீடித்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் உலகமயமாதல் சிந்தனையும் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது அந்த கொள்கையின் மூல வித்தே “அமெரிக்கர்களுக்கே” எனும் கோஷத்தை உரக்க எழுப்புகிறது. இத்தகைய நிலையில் உலகமயமாதல் காலவதியாகிவிட்டது என்பது தானே அர்த்தம். உலக முழுவது ஏற்பட்டிருக்கும் இந்த பொருளாதார பெரும் சரிவானது இது வரை உலகம் கண்டிராத ஒன்று கூறி வரும் நிலையில் இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக அமையும். இந்தியா தப்பித்தது வங்கி துறையில் மட்டுமே. அதுவும் அது கடைப்பிடித்து வந்த சோஷலிச கொள்கையினாலும். வங்கிகள் மற்றும் ஆயுட் காப்பிட்டு துறையின் தேசியமயமானதால் மட்டுமே. இந்த தப்பித்தலுக்கும் இந்த அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. (தொழில் உலகம் ஜூலை இதழில் வெளியானது)
சாலை இரைச்சலில் எல்லையற்ற பெருவெளி காற்றை நொடித்து உலாவித் திரிந்தான் ஆதி மனிதன். அதன் பெருவெளி சங்கேதங்களின் ஊடாகப் பயணித்தான் ஒரு குட்டி பிரயாணி. பிரக்ஞைகள் தோறும் நகையாடின ஸ்தூலங்கள். நகர்வுகள் கேள்விக்குளாகின. அசைவற்றுப்போயின உருப்பிறழ்வுகள். அதிலிருந்து பிறழ்ந்த கடல் கரையேறித் தொடர, கரையோரத்தில் நாய்களின் ஓலம் கௌடில்யர்களும் அதனோடு சேர்ந்துகொண்டனர். காட்டை சதுரங்கமாக்கி விளையாடினாள் பூவிலிருந்து பிறழ்ந்த சிறுமி ஒருத்தி. மழைகேசத்திலிருந்து பிரிந்த ஒரு மயிர்த்துளி அவள் மீது குடையாய் படர காட்டின் எஞ்சிய மருக்கள் சலசலத்தன.
நிலாச் சிதேகம் போல் நித்திரையிலும் அகலாத எனது கரும் பச்சை வண்ண சட்டை. மறக்க முயன்றும் முடியாமல் இன்று வரை. அழுக்கைத் தொலைக்க சலவைக்குப் போன சட்டையும்சேர்ந்து தொலைந்து போனது. நினைவுச் சீப்பு மனதெங்கிலும் சீவி கீறிற்று. நீரூற்று கிணத்திலோ அல்லது சலமற்ற குளத்திலோ தான் அதை அவன் தொலைத்திருக்கவேண்டும். பாலியத்தின் முகச்சாயலுடன் தொலைந்த அந்த பச்சை வண்ணச் சட்டையின் துளிர்மேனியெங்கும் சக்கர வடிவம் மின்னும். அதுவும் என் சாயலுடன். என் நச்சரிப்பை பொருக்காத அம்மாவோ வண்ணான் இறந்து விட்டதாய் கூறினாள். என் நினைவுகள் மட்டும் மடிந்து போய் விட வில்லை. ஒவ்வொரு சவ ஊர்வலத்தின் போதும் அந்த சட்டை நியாபகத்திற்கு வரும்.
என் இரண்டு வயது கருப்புவெள்ளை நிழல் படத்தில் அந்த சட்டையை, அதன் நிறத்திலேயே கண்டேன். அந்த அடர் பச்சை வண்ண சட்டையை மட்டும் நான் கண்டதில்லை என்றபோதிலும் கருப்பையில் அணிந்த சட்டை என்று ஒன்றுள்ளது.
பாறை இடுக்களில் கசிந்ததொரு மனம் கண்கள் திறக்க மேல் எழுந்தன இமைகள். நீர் பெருக நிறைந்தது கடல் பாறை அகல விழித்தது கூழாங்கல் விழிகள் கசிய உச்சாணி எழுந்தது. மீட்டிட்ட கடல் நடுவே நிலவொன்றுமுளைக்க காத்திருந்தது சாகர நிழல்.
கடற்கரை வெளியெங்கும் பதிக்க, கால்கள் இரவு முழுவதும் அலைந்தன. இருள் பதித்துப் போன சுவடுகளைபகல் முழுவதும் தேடிய பின்னர் நிழல் கேட்டது யாருடையது? என. அவன் கூறினான், “என் நேசத்துக்குரியவளுக்கு உரியது, நேற்றிரவு விட்டுச் சென்றாள்” என்றான், உறங்கிற்ற இரவில் விழித்ததுஎனது சுக்கிலம் என்றான். கண்கள் திறக்க பாறை கேட்டது “யாருடையது” என்று “என்னுடையது,” என்றான் பாறை நகைத்திட்டது. வெப்பத்தில் பாறையில் ஈரம் காய்ந்திற்று.
உலக பொருளாதார வீழ்ச்சி (1) -க . செண்பகநாதன் - இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(Laissez faire) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது.
நகர வீதியில் வரையறுக்கப்பட்ட பூங்கா. எண்ணிக்கைக்கு அடங்கிய செடிகள். உலர்ந்த பூக்கள். அந்தி வந்தது. கதவு திறக்கப்பட்டன. கூட்டம் கூடியது. சிலர் நடைபயிற்சி செய்தனர். சிலர் கூடி குலாவினர். விரசங்கள் சில விரவினர். ஒரு சிலர் சிறுநீர் பாய்ச்சினர். எட்டு மணியாகி விட்டதென விரட்டினான் காவலாளி. அவரவர் தொடைத்து கொண்டு புறப்பட்டனர். பூட்டப்பட்டது கதவு. காலம் வரையறைக்கு உட்பட்டது.
காலத்தை அளவிடுத்தன நாட்குறிப்புகள் அதனோடு என் வயதையும் கணக்கெடுக்க நான் தவறி விட்டேன். ஒரு நாள் தேவாலயத்தில் இறைவனிடம் வேண்டி நான் நின்ற போது ஒரு கணம் உன்னை காண நேர்ந்தது. எனக்காக நீ உதிர்த்தாற் போல் அக்கணமே நான் உணர்ந்தேன். உனக்காகவே நான் பிறந்தாற் போல்- என்னுள் ஒரு நினைப்பு.
காற்றின் திசையெங்கும் விண்ணுலக தேவதைப் போல் தாவிப்பறந்தேன். அக்கனம் முதல் என் உள்ளத்தில் நட்சத்திரம் முளைத்தது போல் மய்யல் கொண்டேன். காலச்சக்கரம் சுழன்று என் முன்னே வந்து நின்றது போல் ஒரு நினைப்பு.
கடல் கலைக்கும் அலைப்போல் என் மனமெங்கும் அலை வீச காற்றில் அசைந்தன கானகமே. வெண்ணிறம் படர்ந்த பனி வெய்த வீடு காலைப்பொழுதின் தீர்க்கத்தை உணர்ந்தேன் நான், அத்தகைய நாள் ஒன்றில் மறை திறந்த பரிதியைப்போல் உன் வீட்டாரும் எனை கேட்டு வந்தனர். அன்றைக்கே உனை காண நான் துடித்தேன். வண்ண வண்ண கனவுகள் கூடி என் கண்களில் நிறைந்தன. நிலத்தின் நீர்க்குமிழிகளோ என் நெஞ்சத்தில் ஊற்றெடுக்க, உன் முகம் நான் அறிந்திருக்க வில்லை என்றாலும் ஒரு கணமேதும் நான் யோசிக்க வில்லை உடன் சம்மதித்தேன். உள்ளங்கள் கரைந்தோட ஒருமித்தோம். கடற்கரையெங்கும் நம் காலடிகள் அலைகளோடு கலந்தோடினோம். கண் விழித்த போது கனவென்று உணர்ந்தேன். அக்கனமே உயிர் துடித்தது கண்கள் கலங்கின. உன் நினைவுகளோடு கரைந்தன ஈரைந்து வருடங்கள்.
என் வீட்டு நாட்காட்டியுடன் நானும் கரைந்தேன், கலைந்தேன். தோட்டத்தில் பூத்திடும் மலர்கள் மாலைகள் ஆவது எத்தகைய இயல்போ அதுப்போல நீயும் நானும் கலந்திடும் நாளும் குறித்திட ஆயிற்று. பூக்களும் மலர்ந்தன வேளை வந்நது இடையில் நாகமென்ற நட்சு என்னை பற்றிய உமிழ நீயோ மலர் அவழ்த்த காம்புப் போல் என்னை விடுத்தாய். புயலில் ஆட்கொண்ட படகுப் போல் நான் திக்கற்று போனேன். கருமேக கலைய அழுதிடும் விம்மிடும். அதனோடு நானும் அழுது கரைத்துகொண்டேன். நீ என்னை மறுத்திடாய் முகம் பார்க்க வெறுத்திட்டாய் என் உள்ளம் உனக்கானது என்பதை மட்டும் ஏன் நீ மறந்திட்டாய்? ஒருமுறையேனும் என் முகத்தை பார்த்திட உனக்கேன் தோன்ற வில்லை. உனக்கான விழி உன் முகத்திடன் உள்ளது என்பதை நீ ஏன் அறிந்திருக்க வில்லை. உனக்கான இதயம் உனக்காக வேறொரு இடத்தில் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதை எப்படி உணராமல் இருந்தாய்? உனக்கான சுவாசம் உனக்காக மட்டும் சுவாசித்து கொண்டிருக்கிறது என்பதை ஏன் மறந்திட்டாய்?
என் அன்பே! எனை மறுத்திடும் நீ ஒரு முறையேனும் என் முகத்தின் நேரே வந்து சொல்லி மறுத்து விடு. உன் திரு வாயினோடு உன் முகம் கண்டு நான் ஏற்று கொள்கிறேன்.
(நான் எழுதிகொண்டிருக்கும் நாவலின் முக்கிய பெண் பாத்திரம் எழுதும் காதல் கடிதம். இதை வாசிப்பவர்கள் அவசியம் தங்களது எதிர்வினையை தெரிவிக்கவும்)
நட்சத்திரங்களை விலைக்கு வாங்க எத்தனித்தான் வணிகன் ஒருவன். அவனுக்கு முன் வாங்கி விட்டதாய் மற்றொருவன் கூறினான். “அதற்கென்ன நீ வாங்கியது பகல் பொழுது நட்சத்திரங்களை,” என்றான் இரண்டாவதாகவந்தவன். “அப்படியென்றால் பகலில் வீசும் ஒளிக்கு விலை பேசப் போகிறேன்,” என்றான் முன்றாவதாக வந்த வணிகன், அதற்கென்ன இரவை முதலீடாக்கி விபச்சாரம் செய்ய போகிறேன் என்றான்நான்காவது வியாபாரி. “வாழ்க முதலீடு, வளர்க செல்வம் உலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள்”