Wednesday 14 April, 2010

ஃபெத்திக் அக்கின்


ஃபெத்திக் அக்கின்- இருவேறு தேசங்களிலிருந்து......


“திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கேளிக்கையை
புகுத்தும் பட்சத்தில் அது நாடகத்தன்மையை அடைகிறது
ஏனெனில் பார்வையாளர்களை அது சிரிக்க வைக்கும்.
அது ஏதோவொரு வகையில் அவர்களின் ஆன்மாவை
விழிக்கச் செய்கிறது. அவ்வாறு அவர்களின் ஆன்மாவை மீட்சிக்கொள்ள செய்வதை விட அவர்களை கத்தியால்
குத்துவதே மேல்”.
-ஃபெத்திக் அக்கின்-


காலகட்டங்கள் மாறுகின்றன. புது வகை கதைசொல்லல் சினிமாவிலும் அவசியமாகிறது. துருக்கியில் விட்டுச் சென்ற தனது சிறகுகளை கேமராக் கண்களின் வாயிலாக தேடும் ஃபெத்திக் அக்கின் 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஹாம்பெர்கில் துருக்கிய இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு மகனாக பிறந்தார். ஹாம்பெர்க் கல்லூரியில் காட்சி வழி தகவல் தொடர்பியல் (Visual Comunication) பயின்று கொண்டிருக்கையில் 1995 ஆம் ஆண்டு sensin என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். அந்த குறும்படம் மிகுந்த பாராட்டைப்பெற்றதோடு அல்லாமல் ஹாம்பெர்க் சர்வதேச குறும்பட விழாவிலும் பரிசுபெற்றது. அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் கீமீமீபீ என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். ஃபெய்த் அக்கிம்’மின் முதல் முழுநீள திரைப்படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி 1998ல் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு சிறந்த இளம் இயக்குநருக்கான வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஜெர்மானிய மெக்ஸக்கோ நடிகையான மாணிக் ஓபர்முல்லர்’ரை 2004 ஆம் ஆண்டு மணந்துகொண்டார் ஃபெய்த் அக்கின்.
ஃபெத்திக் அக்கினுக்கு சினிமா கலைஞனாக மட்டுமின்றி துணிச்சலான அரசியல் நோக்கமும் கொண்டவர். அவருடைய சில செயல்பாடுகள் சர்ச்சைகளைக்கூட உருவாக்கின. ஜெர்மனியில் நாசிகள் மேற்கொண்ட யூத இன பேரழிப்பான ஹாலோகாஸ்ட்’டை சிறுமைப்படுத்தியதற்காகவும், அவர் அணிந்திருந்த டி-ஷேர்ட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் (ஙிusலீ) பெயரில் உள்ள “s” என்ற எழுத்துக்குப் பதிலாக நாசிகளின் ஸ்வத்திக் குறியை இட்டதற்காகவும் ஜெர்மன் போலீசார் அவர்மீது விசாணையை மேற்கொண்டனர். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில் “நான் இவ்வாறு ஸ்வத்திக் குறியிட்டது ஆத்திரமூட்டுவதற்காக அல்ல. புஷ்’ஷின் கொள்கை ஹிட்லரின் ஆட்சியைப்போலிருப்பதை வலியுறுத்தத்தவே. புஷ்’ஷின் ஆட்சியில் ஹாலிவுட்டு கூட பென்டகனின் கைப்பாவையாக மாறியுள்ளது. கவுன்டமாலா சிறை சித்ரவதைகளை இயல்பான சம்பவங்களைப்போல் ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன. புஷ்’ஷின் அரசாட்சி மூன்றாம் உலக போருக்கு உலகத்தை இட்டுச் செல்லக் கூடும் என்பதை வலியுறுத்தத்தான் நான் அவ்வாறு செய்தேன்,” என்று குறிப்பட்ட அக்கின், “புஷ் ஒரு பாசிஸ்ட் என்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.
தனது முஸ்லிம் என்ற அடையாளத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஃபெத்திக் அக்கின் வெளிப்படுத்த தயங்க வில்லை. கடந்த நவம்பர் 2009 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசு இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மீனோரேட்ஸ்(விவீஸீணீக்ஷீமீt)'ல் உள்ள கட்டடக் கலைக்கு தடைவிதிக்க பொது வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்கெடுப்பு அமோக ஆதரவுடன் வெற்றிப் பெற்றது. அதற்கு தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்ட ஃபெத்திக் அக்கின், “ இத்தகைய பொது வாக்கெடுப்பு மனிதாபிமானமும், சகிப்புத் தன்மையும் அற்றது. வேற்று கலாச்சார, மதம், இனம் கொண்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன். அதேவேளையில், இஸ்லாமியப் பெற்றோருக்கு மகனாக பிறந்த என்னால் மீனோரேட்ஸ்’ஸை இஸ்லாமிய மத அரசியலின் அடையாளமாக பார்க்க முடியவில்லை" என்றார். மீனோரேட்ஸ்’ஸை வழிப்பாட்டுக்குரிய கட்டடமாகவே தான் கருதுவதாகவும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் செயல் தன்னை பாதித்திருப்பாகவும் தெரிவித்த அவர் இனிமேல் சுவிட்சர்லாந்து செல்லப் போவதில்லை என்றும், தனது சமீபத்திய படமான ஜிலீமீ ஷிஷீuறீ ரிவீtநீலீமீஸீ யை அந்நாட்டில் திரையிடப்போவதில்லை என்றும் தெரிவித்ததோடு, இஸ்லாமியர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் சேமித்திருக்கும் பணம் முழுவதையும் உடனே திரும்ப பெறவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது திரைப்படங்கள் அனைத்தும் துருக்கியின் கலாச்சாரப் பின்னணியுடன் படமெடுக்கப்பட்டன. குறிப்பாக ஜெர்மனில் வாழும் இளைஞர்கள் அனுபவிக்கும் இனவாத பிரச்சனைகளைப் பற்றியவை. அவரது முதல் படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி ல் வரும் கேப்ரியல் என்ற துருக்கிய இளைஞன், பாபி என்ற செர்பிய இளைஞன், கோஸ்டா என்ற கிரேக்க இளைஞன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் குழுவாக ஹாம்பெர்க் அருகே உள்ள மாவட்டத்தில் களவு போன்ற சிற்சில குற்றங்களை செய்து வருபவர்கள். அவரது முக்கிய திரைப்படமான சொர்க்கத்தின் விளிம்பு(ஜிலீமீ ணிபீரீமீ ளியீ ஜிலீமீ பிமீணீஸ்மீஸீ) இரு நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு படமெடுக்கப்பட்டதாகும். அப்படத்தில் துருக்கிய குடியேறிகள் அதிகமாக உள்ள ஜெர்மனில் ஃப்ரிமென் நகரத்தில் கதையின் முதல் பகுதி தொடங்குகிறது. மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அலி கூட ஒரு ஜெர்மன் வாழ் துருக்கியர் தான். தனது தனிமையை தனிக்க விபச்சாரிகள் வீதிக்குள் இறங்கி நடக்கிறார். எஸ்டெர் என்ற விபச்சாரியை அடைகிறார். அவர்களது தொடர்பு தொடர்கின்றது. இதனிடைய துருக்கிய இளைஞர்குழு, அவள் ஒரு துருக்கியர் என்பதை உணர்ந்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தும் படி வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் அவள் தனது விபச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒருமுறை எஸ்தெரை தன்னோடு வந்து வசிக்கும்படி அழைக்கிறார் அலி. தான் ஒண்டியாக இருப்பதாகவும் தனக்கென்று ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர். இந்த விபச்சாரம் மூலமாக அவளுக்கு கிடைக்கும் தொகைக்கு ஈடான தொகையை தனது ஓய்வூதியத்திலிருந்து தருவதாகவும் கூறுகிறார். அதை மறுத்து விடுகிறாள் எஸ்தெர். இருப்பினும் தனது செல் எண்ணை தந்துவிட்டுச் செல்கிறார் அலி. பிறகு துருக்கிய இளைஞர்களின் மிரட்டலால் அலியை தேடி வருகிறாள் எஸ்டெர். அப்போது அலி குதிரைப் பந்தய அரங்கில் அமர்ந்து மது அருந்திகொண்டிருக்கிறார். “நீங்கள் அன்று கூறியது நிஜமானது தானா?” என்கிறாள் எஸ்டெர்.
“ஆம், உனக்கு மாதம் எவ்வளவு கிடைக்கிறது?” என்கிறார் அலி.
அவளோ, அந்த நாட்டின் ரூபாயின்படி 3000 ஆயிரம் என்கிறாள். நான் போதுமான அளவு ஓய்வூதியம் வாங்குகிறேன். அதனோடு வங்கியிலும் பணம் வைத்துள்ளேன். நிலமும், சில சொத்துகளும் வைத்துள்ளேன். பணநெருக்கடி ஏற்பட்டால், பேராசியராக இருக்கும் எனது மகனிடம் வாங்கி கொள்ளலாம். அவன் நன்றாக சம்பாதிக்கிறான். அவன் நல்லவன்உதவுவான் என்கிறார்.
ஒரு நாள் அலியும் அவரது மகன் நிஜாத்'தும் எஸ்டெரோடு இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அலி அதிகமாக மது அருந்தி விடுகிறார். அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வருகிறான் நிஜாத். அதன் பிறகு எஸ்டெரோடு உரையாடுகிறான் நிஜாத்.
“எனது தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவளிடம் கேட்கிறான்.
“அவர் என்னிடம் வருவார்” என்று எதார்த்தமாகவே எஸ்டெர் கூறுகிறாள்.
“அப்படியென்றால்...”
“உங்களிடம் ஏதும் கூறவில்லையா உங்கள் தந்தை”“இல்லை”
“நான் அனைவரையும் எளிதில் அணுகி இன்பம் தருபவள்”
“அப்படியென்றால்,”“ஆம், நான் ஒரு விபச்சாரி”
அப்போது எஸ்டெரை அலி அழைக்கிறார். அவள் செல்கிறாள். சிறிது நேரத்திற்கெல்லாம் நிஜாத் என்று எஸ்தெர் கூக்குரலிடுகிறாள். அலி படுக்கையில் மூர்ச்சை ஆகி கிடக்கிறார். அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
உடல் தேர்ந்து வீட்டிற்கு வரும் அலி, எஸ்டெரை உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறார். அவள் மறுக்கிறாள். கன்னத்தில் அறைகையில் மயங்கி விழும் எஸ்தெர், இறந்து விடுகிறாள். அலி கதறுகிறார். துருக்கியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளுக்காக விபச்சாரம் செய்து கொண்டிருந்த எஸ்டெரின் கதை முடிவடைகிறது. முன்னதாக தனது கதையை நிஜாத்திடம் கூறிய எஸ்டெர், தான் ஒரு விபச்சாரி என்று மகளுக்கு தெரியாது என்றும், அவளிடம் தான் ஒரு செருப்புக்கடையில் பணிபுரிவதாக கூறியிருப்பதாகவும் நிஜாத்திடம் கூறியிருந்தாள். அவளை படிக்கவைப்பதுதான் தனது நோக்கமென்று கூறியிருந்தாள்.
அடுத்தக் கட்டமாக படம் துருக்கியை நோக்கி நகர்கிறது. எஸ்டெரின் உயிரற்ற உடல் துருக்கிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உறவினர்களோடு சேர்ந்து நிஜாத்தும் அவளது உடலை நல்லடக்கம் செய்கிறார். எஸ்டெரின் மகளான ஆய்டென் பற்றிய விவரங்கள் அவளது உறவினர்களுக்கே தெரியாத நிலை. பல மாதங்களுக்கு முன்னரே அவள் தங்களிடமிருந்து தொடர்பை இழந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளது குடும்ப புகைப்பட ஆல்பம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதில் கூட அவளது சமீபத்திய புகைப்படம் ஏதும் இல்லை. அவளது சிறு வயது படங்கள் மட்டுமே உள்ளன. ஆல்பத்தில் உள்ள அவளது தாய் எஸ்டெரின் புகைப்படம் ஒன்றை தன்வசம் எடுத்துக்கொள்கிறான் நிஜாத்.
ஆய்டெனை தேடும் படலத்தைத் தொடர்கிறான் நிஜாத். இதனிடையே படத்தின் அடுத்த கட்டம் லாட்ஸ்’ஸின் மரணம் என்ற பகுதிக்குள் செல்கிறது. இருவேறு கதைகள். தேடுதல் என்ற அம்சம் பிரதானமாகிறது. படத்தின் போக்கு என்பது குறுக்கு வெட்டாக ஒரு நிகழ்வு ஜெர்மனியிலும் மற்றொரு நிகழ்வு துருக்கியிலுமாக மாறி மாறி தேடுதல் என்ற ஒன்றோடு சம்பவங்கள் கோர்க்கப்படுகிறது. “லாட்டி’யின் மரணம்,” பகுதியின் தொடக்கத்தில் பெரும் திரளான மக்கள் பேரணி காண்பிக்கப்படுகிறது. துருக்கியின் குர்திஷ் இனத் தலைவரான ஓக்லேன் தலைமையிலான இடது சாரி உழைக்கும் மக்கள் கட்சியின் பேரணி வருகிறது. ஆய்டென் அக்கட்சியின் உறுப்பினர். பேரணியில் நடக்கும் சலசலப்புகளில் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறி விழ அதை பற்றிகொண்டு அவள் ஓடுகிறாள். அப்போது அவளது செல்பேசியைத் தவற விட்டுகிறாள். தான் எடுத்து வந்த துப்பாக்கியை ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் புகைக்கூண்டில் போட்டு விடுகிறாள். இதனிடையே ஆய்டேன் தங்கியிருக்கும் இடத்தை போலீசார் சோதனையிட்டு அவளது அறைத்தோழிகளை கைது செய்கிறார்கள். இனி துருக்கியில் ஆய்டெனால் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை. ஆகையால் “குல் கொர்க்கமாஸ்” என்ற போலியான பெயர் கொண்ட பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் நாட்டிற்கு வருகிறாள். இடதுசாரி குர்து இன முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அவளை அழைத்துப் போகிறார்கள். நாளைக்கு தருவதாக கூறி அவர்களிடம் செலவுக்கு 100 யூரோ கேட்கிறாள். தனது செல்பேசி தொலைந்ததால் தனது தாய் எஸ்டெரின் தொடர்பை அவள் இழந்துவிடுகிறாள். ஃப்ரிமென் நகரத்தில் உள்ள செருப்புக் கடைகளிலெல்லாம் தனது தாயைப்பற்றி விசாரிக்கிறாள். ஆனால் சாதகமான பதில்களெதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. இதனிடையே வாங்கிய பணத்திற்காக தனது ஹோட்டலில் வைட்டராக பணிபுரிமாறு கூறுகிறான் அந்த இடதுசாரி நண்பன். அவள் மறுக்கவே அங்கிருந்து விரட்டப்படுகிறாள் ஆய்டென்.
தெருக்களிலும் சாலையோரங்களிலும், ஏன் ஒரு முறை நிஜாத் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் அரங்கத்திலும் கூட அவள் படுத்துறங்குகிறாள். ஒரு நாள் வீதியில் லாட்ஸ்’ஸை சந்திக்கிறாள். அவளிடம் தனக்கு உதவும்படி கோருகிறாள். இப்படியாக அவர்கள் இருவருக்கிடையே நட்பு அரும்புகிறது. இருவரின் நட்பு லெஸ்பியன் உறவாக மாறுகிறது. லாட்ஸ்’ஸின் தாய்க்கு ஆய்டெனின் வருகை ஆரம்பத்திலிருந்தே பிடிக்க வில்லை. ஒரு நாள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வாக்குவாதத்தில் முடிகிறது. ஆய்டென் வெளியேறுகிறாள். வீட்டிலிருந்து கீழிறங்கி உட்கார்ந்து அழுகிறாள். அப்போது லாட்ஸ் வருகிறாள். ஆய்டென் அருகே அமர்கிறாள். “எனது தாயை கண்டுபிடிக்க உதவுவாயா,” என்று கதறுகிறாள் அவள். இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள். தேடுதல் தொடர்கிறது. திரைப்படத்தின் இந்த கட்டத்தில் தான் இயக்குநர் தனது திரைக்கதை உத்தியை பிரதானமான ஒன்றாக அமைக்கிறார். ஜெர்மானியப் பெண்ணான லாட்டி’யின் அகால மரணப்பகுதி என்பது எஸ்டெரின் மரணத்திற்கு முன் நடக்கிறது. நிஜாத் பயிற்றுவிக்கும் அரங்கில் ஆய்டென் உறங்குவதும், தனது தோழி லாட்டியுடன் சேர்ந்து எஸ்தெரைத் தேடும் போது நிஜாத்தும் எஸ்டெரும் பேருந்தில் ஆய்டெனைக் கடந்து பயணித்து செல்வதுமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். திரைக்கதை சொல்வதில் இது தான் நான்- லீனியர் பாணி. நேர்கோடற்று திரைக்கதை நகர்கிறது.
எஸ்தெரைத் தேடுதல் படலத்தின் இடையே, இரவுவேளையில் போலீசாரால் அவர்களது கார் நிறுத்தப்படுகிறது. சோதனையில் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது ஆய்டென் தப்பித்து ஓட முயற்சித்து பிடிபடுகிறாள். அப்போது ‘அடைக்கலம் , அடைக்கலம்,’ என்று கத்துகிறாள். அவளைப் பிடித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். ஆய்டெனின் அடைக்கலம் கோரும் தாக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது: எவரொருவர் மதம், இனம், தேசியம், சமூக, அரசியல் ஆகியவை தொடர்பாக தங்களது சுதந்திரத்திற்கும், ஆன்மாவுக்கும் எதிரான சூழ்நிலையோ அல்லது ஒடுக்குமுறையோ அல்லது அவர்களின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ பாதகம் ஏற்படும்பட்சத்தில்தான் அடைக்கலம் தரப்படும்.
ஆய்டென் துருக்கிக்கு மீண்டும் அனுப்பப்படுகிறாள். துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்டெனை காப்பாற்ற லாட்டியும் துருக்கி புறப்படுகிறாள். அவளது தாய் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அதைமீறி அவள் புறப்படுகிறாள். திரைப்படத்தின் அடுத்த நகர்வு துருக்கியிலிருந்து தொடர்கிறது. அங்கு ஆய்டெனை சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய பயங்கரவாதக் குழுவுடன் ஆய்டென் தொடர்பு வைத்திருந்ததாக அவள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது............
...................
................
மந்திரச்சிமிழ் இதழ்-2-ல்

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in