Sunday 16 May, 2010

கிம் கி டுக் நேர்காணல்


இழிந்தவன் திரைப்படம் குறித்து கிம் கி டுக் அளித்த நேர்காணல்: பகுதி: 1

கேள்வி: நீங்களே ஒரு முறை கூறியிருக்கிறீர்கள் உங்களது படங்கள் “வெறுப்பு” என்ற நிலையிலிருந்து தான் தொடங்குகிறது என்று. இப்போது உங்களது புதிய படமான இழிந்தவன்-ல் எத்தகைய அணுமுறையை கையாண்டிருக்கிறீர்கள்?

கிம் கி-டுக்: “வெறுப்பு” என்ற வார்த்தையை நான் பலமுறை பயன்படுத்திருக்கிறேன் என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் அந்த வார்த்தையை உள்ளடத்தைத் தாண்டி நினைத்து விடுவீர்கள் என்று நான் எண்ண வில்லை. நான் கூறும் “வெறுப்பு” குறிப்பிட்ட ஒன்றை பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ அல்லது ஒரு தனி நபர் பற்றியோ அல்ல. நான் கூறும் “வெறுப்பு” எனது வாழ்க்கையில் கிடைத்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து பெற்றது. அதன் முலம் நான் கண்டுணர்ந்ததை திரைப்படமாக எடுக்கிறேன். சில சமயங்களில் எனக்கு புலப்படாதவைகளை ஈடுகட்டுவதற்காக படங்களை எடுக்கிறேன். ஆகையால் “வெறுப்பு” என்று கூறுவதை காட்டிலும் “புரிந்து கொள்ளாமை” என்றே பேசலாம்.

கேள்வி: இழிந்தவன் படத்தின் மூலம் தாங்கள் இந்த உலகத்தில் எத்தகையதை கண்டறிய முயன்றுள்ளீர்கள்டீர்கள்?

கிம் கி-டுக்: எனக்குள்ளே தொனித்து கொண்டிருக்கும் கேள்வி என்னவென்றால், ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒரே அந்தஸ்த்துடன் ஏற்றத் தாழ்வு ஏதும் இன்றி பிறக்கிறோம். ஆனால் வளர்ந்ததும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகி நிலைக்கு தகுந்தவாறு வகைப்படுத்தி தரம் பிரித்து பார்க்கிறோம். நாம் ஒருவரை உருவத்தையும் தோற்றத்தையும் கொண்டு ஏன் மதிப்பட வேண்டும்? நம்மிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ எதற்காக ஒருவரை பணத்தை கொண்டு ஏன் முக்கியத்துவம் தருகிறோம்? அத்தகையவர் அழகுடனோ அல்லது அவலட்சணத்தோடு இருந்தாலும் நாம் பொருட்படுவதில்லை. இத்தகைய தகுதி வரையறை நமது பிறப்புக்குப் பின் திணிக்கப்பட்டதாகும். இதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதனால் ஒருவரோடு மற்றொருவர் இணைந்து வாழ வகை வழியின்றி போகிறது. இதனால் நான் கேட்பதெல்லாம் இத்தகைய ஏற்றத் தாழ்வுடைய சமூக அடுக்குகள் உலகத்தோடு கலந்து வேறுபாடின்றி இருக்க வாய்ப்பில்லையா என்று தான்.

கேள்வி:
இந்த கேள்விக்கு பதிலை கண்டுப்பிடித்து விட்டீர்களா?

கிம் கி-டுக்: நான் கேட்பதெல்லாம் மனிதர்களை ஒருவர் மற்றொருவரை மதிக்க வேண்டும் என்பதே, தோற்றம் கொண்டோ அல்லது பணத்தினாலோ அல்லது வகுப்பு போதத்தினாலோ துவேஷம் செய்ய கூடாது. அது தான் எனது பதிலும் கூட. அத்தகையதைத் தான் பார்வையாளர்களிடம் முன்னிலைப்படுத்துகிறேன். எனது கேள்வியை அவர்களிடமே வைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற் போல் விடையை கண்டுப்பிடித்து விடுவார்கள்.

கேள்வி:
தற்போதைய படமான இழிந்தவன்(Bad Guy)- னில் முக்கிய கதாபாத்திரமான ஹாங்-ஜி ஒரு காமத் தரகன். விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கவர்ந்து செல்பவன். அவனது மொழி மௌனம். எந்த விதத்திலும் தனது உணர்வை வெளிக்காட்ட இயலாதவனாவும், தனது ஒரே மொழி வன்செயல் என்பதாகவும் உள்ளான். அவனது மௌனத்திற்கு காரணம் தான் என்ன?


மந்திரச்சிமிழ் இதழில்.......

No comments: