Tuesday 8 March, 2011

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:7


அன்பார்ந்த வாசகர்களுக்கு
கடந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் அரசியலை தவிக்கும் எண்ணம் குறித்து குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய நிலைக்கு காரணம் அரசியலின் அருவருப்பு நிலைதான். இருப்பினும் அத்தகைய அருவருக்கத்தக்க நிலை நம்மை அறியாமலேயே நமக்குள்ளும், சுற்றிலுமாக ஆட்கொண்டு விடுவதுதான். சமீபத்தில் இணையத்தில், கடந்த இதழ் தலையங்கம் குறித்து விவாதம் நடந்தேறியுள்ளது. ஒரு மூத்த அறிவு ஜீவி கடுமையாக விமர்சித்துள்ளார். அதே இணையத்தளத்தில் நான் பதில் அளிக்கவும் முனைந்தேன். ஆனால் நேரிடையாக எனக்களிக்கப்படாத விமர்சனம் குறித்து பதிலளிக்க விரும்பாமல் கைவிட்டு விட்டேன். இலக்கியம் மற்றும் கலை தொடர்பாக அனைத்து அம்சங்களும் உலக பொதுமைக்கான ஒன்று. இதில் பிராந்தியம், மொழி என்று பாகுபாடோ இட ஒதுக்கீடோ தேவையற்றது. தமிழ் உட்பட ஏனைய உலக இலக்கியங்களை தீவிரமாக வாசித்து கொண்டிருக்கிறேன். இத்தகைய நிலையில் ஏறத்தாழ பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்களை வாசித்தும் உள்ளேன். எந்நிலையிலும் இவர்கள் என்னை ஈர்க்கவோ, பிரமிப்பில் ஆழ்த்தவோ பெரிதும் இல்லாத நிலைதான். தமிழில் பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதை முற்றிலும் மறுத்தோ அல்லது நிராகரிக்கும் நோக்கமோ எமக்கில்லை. அப்படி அவ்வாறாக பிரம்மிப்பில் இருக்கும் நபர்கள் தங்கள் முனைப்பில் விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டியதுதான். அதுவின்றி செய்படுபவர்களை காயடிக்கும் வேளைகளில் ஈடுபடும் முயற்சியை சற்றும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை. இவ்வாறான மனிதர்கள்தான் பத்தாண்டு முன் வரை நிகழ்ந்த ஆரோக்கியமான பல முயற்சிகளை காயடித்தவர்கள். குறிப்பாக நாகார்ஜூன், சில்வியா என்ற முத்து குமாரசாமி, எஸ். சண்முகம், தமிழவன் போன்றவர்களை தமிழ் இலக்கிய சூழலிருந்து விரட்டியடித்தவர்கள்.
அந்த நபர் குறிப்பட்ட எழுத்தாளர்களின் நாவல்கள் குறித்து அணுகும் போதே அவர் எத்தகைய அறிதல் இலக்கியத்தில் கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. ஒருவரது நாவல் பி.எச். டி தீசிஸ். அதன் லட்சனத்தை அந்த பதிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். அது எவ்வாறு தீசிஸிலிருந்து நாவலானது என்று. மற்றவருடையதை படிக்கவே முடியாதா ஒரு மொழி அமைப்பை கொண்டது. தமிழில் விமர்சிக்க, விவாதிகப்படுவது எவ்வாறு என்று உலகிற்கே தெரியும். இதற்குள் நான் விரிவாக செல்ல விரும்ப வில்லை. இப்படியாக எழுதுவது வேண்டாம் என்று நான் சென்ற இதழில் முடிவெடுத்த வேளையில் இவ்வாறாக எழுத வைத்து காலத்தை விணடிக்க வைத்த அரும்பெருமை அவருக்கே சாரும். தமிழில் இலக்கியம் என்ற பேரில் நிகழ்ந்து வரும் அசிங்கங்களையெல்லாம் வெளிப்படுத்தி கொள்ள எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இது போன்ற அறிவு ஜீவிகள் தங்களது அறிவாற்றல்களை தங்களுக்குள்ளே வைத்து கொண்டும், அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு பங்கிட்டு கொள்ளவும் வேண்டும் என்பதை எனது நிலைப்பாடு. பிறகு ஆகச்சிறந்த தமிழ் படைப்புகளை இத்தாலிய மொழியில் வெளியிடுவார்களா? என கேட்கிறார். அத்தகைய படைப்புகளை அவரது முனைப்பில் பிற மொழியில் வெளியிடுவதை யார் தடுத்தார்கள்? இதோடு நிறுத்தி கொள்வது நல்லது.
சமீபத்தில் கூட இரு பெரும் எழுத்தாளர்களின் மிக சமீபத்திய நாவல்களை வாசிக்க நேர்ந்தது இரண்டுமே படு அபத்தம். அவை குறித்து விரிவாக விமர்சிக்க எண்ணியிருந்தேன். எனினும் விமர்சனமாக எழுதும் அளவுக்குக்கூட ஏதும் எஞ்சப்போதில்லை என்பதால் கை விட நேர்ந்தது. மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவெனெறால் குறிப்பட்ட போக்கு குறித்தும், அதுவும் எனக்கு புலப்பட்ட தளத்தில் இருந்து மட்டுமே இதழின் போக்கு, இது ஒன்றும் அனைவரையும் இழுத்து போட்டு கொண்டு அரசியல் நடத்தும் கூட்டு அரசியல் கட்சியல்ல. இதழின் உள்ளடத்தோடு அணுகும் தன்மை கொண்டவர்கள் மட்டுமே இதழை வாசிக்கட்டும். இது அனைவருக்கும் பொதுவான ஏடல்ல.

-----------ஏப்ரலில் வெளிவருகிறது --------------------------சி

No comments: