Friday, 25 November 2011
கூடங்குளம்: மரண கூடாரம்
கூடங்குளம்: மரண கூடாரம்
மேல நாடுகள் சப்பி துப்பிய விஷயமே இன்று வரப்பிரசாதமாக இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. பணிப்போர் காலக்கட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷிய அணிகள் ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்துவதற்காக அணு ஆயுதங்களை தயாரித்து குவித்தன. அதில் அவைகள் மறைமுகமாக மின்சாரத்திற்கென்று கூறி அணு ஆயுதங்களை தயாரித்தன. அத்தகைய போட்டி நிலை இப்போது இல்லை. ஆகையால் மேலை நாடுகள் படிபடியாக தங்களை அணுமின் நிலையங்களை மூடி வருகின்றன. அதனால் அவைகளிடம் உள்ள தொழில் நுட்பங்களையும், மூலப்பொருளையும் வணிகம் செய்ய சந்தை தேவை. அப்படியான சப்பிய மாங்கொட்டையை சுவைக்க சப்பிய பழக்கப்பட்ட இந்தியா அரசியல்வாதிகளிடம் தள்ளிவிடுகிறார்கள். மேலை நாடுகளில் முன்பிருந்தது போல் மக்கள் குருட்டுத்தனமாக போர் வெறியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. அவ்வாறாக செயல்படும் ஆட்சியாளர்களையும் விரும்புவதில்லை. அமைதியை நாடும் மக்கள் அணுசக்திக்கு எதிராகவே உள்ளனர். ஆகையால் ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்துகிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் புதிய எதிரிகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பாகிஸ்தானை ஒரு ராட்சகனை சித்தரித்தும், சீனாவை ஆக்கிரமிப்பாளர்கள் போல் வரைந்தும் மக்கள் முக்கிய வாழ்வில் பிரச்சனைகளை உணராதவாறு தங்களது அரசியல் நிகழ்வுகள் அரங்கேற்றி வருகிறார்கள்.
குறிப்பாக இந்தியா தனது அண்டை நாடுகளை மறைமுகமாப பலவீனப்படுத்தி வருகிறது. அவ்வாறாக பலவீனப்படுவதென் மூலம் தங்களது எஜமானர்களான கார்பெரட் சக்திகளை கொழுக்க வைக்கவும் அவசியமாகபடுவது அணுசக்தி. இத்தகையதற்கு அரசு மக்களிடம் மின் பற்றக்குறை என்ற தேவையை முன் வைத்து மின் உற்பத்தி என்ற பேரில் அணு ஆயுதங்களின் உற்பத்திக்காகவும், சர்வதேச அணு வணிகர்களின் நலனுக்காவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணுசக்தி குறித்து இந்திய அரசாங்கம் அக்கறை காட்டுவதற்கு உள்ளீடாக அமைந்திருப்பது அணு அரசியல். அணு குறித்த தகவல்களை இந்திய மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே வெளிப்படையான தன்மையை கொண்டிருப்பதில்லை. குறிப்பாக கூறவேண்டுமானால் உலகில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் குறித்து முழுமையான தகவல்களை எந்த அரசும் வெளியிடுவதில்லை. பணி போருக்கு பிந்திய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் இந்தியா தெற்காசிய வட்டாரத்தில் தனது வல்லாதிக்கத்தை பதிக்க துடித்து கொண்டிருக்கிறது. அத்தகையது நல்லது தானே, நம் நாடு உலக அரங்கில் மேலாதிக்க செலுத்த முனைவது நல்லது தானே என சாதராண வெகுஜன மனபோக்கில் கருத நேரலாம். அவ்வாறாக இல்லை என்பது தான் உண்மை.
உலகமயம் காலாவதியாகிக்கொண்டிருக்கும் நிலையில் சீனா’வும், இந்தியா’வும் முதன்மை பெறும் என்ற வாதம் முன் வைத்து வருகிறார்கள். அதற்கு எத்தகைய சாத்தியம் சற்றும் இல்லை. இவ்வாறாக கூற செல்கிறார் ஆட்சியாளர்களின் எஜமானர்கள். ஏனைய நாடுகள் போல் இந்தியா இல்லை. மற்ற நாடுகளில் பரந்தபட்ட வளர்ச்சி என்பது மக்களிடம் உள்ளது. இங்கு பத்து விழுக்காடு மக்களுக்கான ஏற்பாட்டில், இங்கிருக்கும் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்கவே முயல்கிறார்கள். வளர்ச்சிக்கு அணு உலை அவசியம் என்று பேசப்படுகிறது. அது முற்றிலும் அபத்தமானது. அந்நிய முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரவே பண்ணாட்டு வர்த்தகத்தின் முக்கிய அங்கம் தான் அணு உலை.
அரசு அதிகாரம் என்பது எப்போதும் மக்களுக்கு எதிரானது தான். அந்த அரசு எனப்படுவது அதிகாரம் செலுத்ததும் மையமாக இருக்கும் போது அது தனது அதிகார மையத்தை தக்க வைப்பதில் அக்கறை கொள்ளும். அதிகாரமற்ற மக்களுக்கும் அதற்கும் சம்பந்ததம் இல்லை, அதிகார செலுத்துவதற்கு மக்கள் அவசியம். அதற்காகவே தேசியவாதம் என்ற தேசப்பற்று, வளர்ச்சி, ராணுவ தகைமை, வழிப்பாட்டு அரசியல், ஒழுக்க அரசியல், சட்டத்திற்கு உட்படுதல், போன்ற விஷயங்கள் முன்னிறுத்தப்படும். மற்றொரு முக்கியமான விஷயம் தேச பாதுக்காப்பு என்ற முன்னிருத்துவது. அதில் ராணுவம் என்ற இயந்திரத்தை எவ்வாறு அரசு பயன்படுத்துகிறது என்பதில் அரசு அதிகாரத்தின் தந்திரம் மிகவும் சூட்சுமம் கொள்கிறது. எல்லை வரைக்கோட்டிற்கு உட்ப்பட்ட நிலப்பிரதேசத்த்தின் காவலாளிகளத் தவிர ராணுவம் என்பது மக்களை பாதுக்காப்பதற்கானது அல்ல. ஏனெனில் அந்த நிலப்பரதேசத்தில் உள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அவர்களின் எஜமானர்களான பெருமுதலாளிகள் வாழ்கிறார்கள். அவர்களுக்கானது தான் ராணுவம். அது குறித்து ஹாவர்ட் ஸின் கூறும் போது: ‘ராணுவ வீரர்கள் இறந்துபோவது தமது நாட்டிற்காக அல்ல. தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களுன் நலன்களுக்காவும் போரினால் லாபம்பெறும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தான்,’ என்கிறார்.
அணு மின்சார உலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று வாசிப்பவர்கள் உணரக்கூடும். பெரும்பாலும் உலக முழுவதும் அணு மின்சார உற்பத்தி என்ற போர்வையில் மறைமுகமாக அணு ஆயுதங்களுக்காகவே முதன்மையாக நிறுவப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அணு ஆதரவு அறிவு ஜீவிகள் எடுத்து வைக்கும் வாதம் நான் அணு ஆயுதங்களை நிறம்ப உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே. அப்துல் கலாமும் அதை தான் சொல்கிறார். இந்தியாவை சுற்றி பத்தாயிலம் அணுகுண்டுகள் இருக்கிறது. நாம் கைக்கட்டி தபஸ் செய்ய முடியுமா? என்று கேட்கிறார்.
அப்படியென்றால் ஒன்று தெளிவாகிறது, அணுசக்தி என் பேரில் அணு ஆயுதங்கள் ஒழிந்துள்ளது என்று. இதில கூட அவரது நிலைப்பாடு தவரே. உலக வல்லாதிக்க நாடுகள் அவ்வாறான அணு ஆயுத வெறிபிடித்த மனநிலை என்பது முன்பிருந்தது. ஆனால் மக்களிடம் ஏற்பட்ட விழுப்புணர்ச்சியினால் அவைகள் தங்களிடம் இருக்கும் அணு அயுங்களை அழிக்க தொடங்கி விட்டன. சென்ற மாதம் கூட அமெரிக்க தன்னிடமிருந்த அபயாகரமான அணு அயுதங்களை அழித்தது. அவ்வாறாக இந்தியா மட்டும் புதிய அணு ஆயுத உற்பத்தி சித்தாந்தத்திற்கு தன்னை தயார்ப்பபடுத்திய மர்மம் என்ன?
அத்தையதற்கு காரணம் யுரேணிய வணிகம். பண்ணாட்டு கம்பெனிகளுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியே. பிறகு கலாம்(2020) கூறும் மற்றொரு விஷயம் யுரேணியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்துவது குறித்தது. அவர் கூறும் காரணம் பாதுகாப்பானது, அதிக மின் உற்பத்தி சாத்திக்கூறுகளையுடையது. இதிலிருந்தே தெரிகிறது அவருக்கு அணு விஞ்ஞானம் குறித்து ஏதும் தெரிய வில்லை என்பது. தோரியத்தை தன்னிச்சையாக அணு உலைகளில் பயன்படுத்த முடியாது. யுரேணியம் மற்றும் யுரேணியம்-233 கொண்டே உபயோகப்பட்டுத்த முடியும். யுரேணியத்தித்தைக் காட்டிலும் ஆபத்தானதும்கூட. இது குறித்து இந்திய அணுசக்தி கழகம் 1970-ஆம் ஆண்டில் திட்டங்கள் வகுத்து அடுத்த பதினைந்து ஆண்டுகளில் தோரிய உலைகளை நிறுவுவது என்று தீர்மானித்தத்து. ஆனால் நாற்பது ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் அவ்வாறாக நிகழ்த்தப்பட வில்லை. அதற்கு பொருந்தாமையே காரணம். அதற்கான தொழில் நூட்பமும் உகந்ததாக இல்லை. இவையெல்லாம் அணு விஞ்ஞானம் சார்ந்த விஷயம். நாம் இந்த அணு உலை அரசியல் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதனையும், ஆபத்து குறித்தும் பார்ப்போம்.
முன்பு ஒரு முறை உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான், இந்தியாவில் காஷ்மீரும், தமிழ் நாடும் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன என்றார். எப்போதும் டில்லி, தமிழகத்தை சந்தேகக் கண்ணுடன் பார்த்து வருகிறது. இந்திய கலாச்சாரத்திலிருந்து வேறுப்பட்டவை என்ற விதத்தில் வடக்கத்திய அறிவு ஜீவிகள் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள். இவர்கள் இந்திய கலாச்சாரத்தோடு இணைய நினைத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது உண்மை. தமிழ் பண்பாட்டோடு ஒட்டியிருக்கும் மலையாளிகளையும், கன்னடத்தையும் சூழ்ச்சியால் முன்பே பிரித்தாண்டு விட்டார்கள். குறிப்பாக கூறவேண்டுமானால் கன்னடம் மற்றும் மலையாளம் தொன்றுத்தொட்டு ஒன்றினைந்த கலாச்சார, மொழி குடும்பத்தை கொண்டவைகள். மொழி அமைப்பும், மொழி கூறும் அடிப்படையானவை. அத்தகையதிலில் பிணக்கை செயற்கையாக ஏற்படுத்தி அவர்கள் முதல் வெற்றியை பெற்றனர். காஷ்மீரை பொறுத்தவரையில் அங்கு ஒடுக்குதல் மூலம் காஷ்மீரிகளை டில்லி மண்டியிட செய்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தங்கள் கட்டுப்பாட்டில், ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர காரணமேதும் இல்லை. ஆகையால் தமிழகத்தின் இருமுனைகளிலும் அணுமின் நிலையங்கள் அமைத்து, அதறன் பொருட்டில் ராணுவ அச்சுறுத்தலை மேற்கொள்ள இந்திய அரசு முனைகிறது. அதற்காகவே ஈழத்ததை இந்திய ஒடுக்கியது. அதே போல் இதுவரை பாகிஸ்தான் இந்தியா’விற்று அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி தனது இந்திய தேசியத்தை காத்து வந்தத்து. இப்போது சீனா’வை காட்டி பயமுறுத்துகிறது. சீனா நூற்று கணக்கான அணு உலைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறது. அதுவும் பொய், தான் திட்டமிட்டிருந்த அணு உலைகளை சீனா முழுமையாக கை விட்டிருக்கிறது. இந்நிலையில் ஏன் இந்திய ஆட்சியாளர்கள் இத்தகைய பித்தாலட்டங்களை மேற்கொள்கிறார்கள் என்பது தான் இதில் தொக்கி நிற்கும் அரசியலும், வணிகமும்.
சமீபக்காலமாக மின்தேவை அதிகரிக்க என்ன காரணம்? அதுவும் பலமடங்கு அதிகமானதற்கு காரணம்? மக்கள் பயப்படுத்தி முனைந்து விட்டார்களா? அப்படியன்றும் இல்லை. இன்றைய விலை வாசி நிலையில் உணவுப்பொருகளை வாங்கவே திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் உல்லாசமாக மின்சாரத்தில் திளைக்க வழியில்லை. அதிகப்பட்சம் அவர்களது உல்லாசம் என்பது தொலைக்காட்சி காண்பதுதான். அப்போதுகூடு மின் விளக்குகளை அனைத்து விட்டுத்தான் பார்க்கிறார்கள்.
அப்படியிருக்க மக்களுக்கான மின்சாரத்தை கபளீகரம் செய்வது யார்? கார்ப்ரேட், பண்ணாட்டு கம்பெனிகள்தான் கபளீகரம் செய்கின்றன. சரி, அப்படி அந்த கம்பெனிகளால் என்ன பயன்? ஒரு கார் தொழிற்சாலையை அமைக்க மேற்கு வங்கத்தில் எத்தகைய எதிர்ப்பு? அங்கு அந்நிறுவனத்தால் தொழிற்சாலையை அமைக்க முடிந்ததா? கேரளத்தில் ஏதாவது ஒரு தொழிற்சாலை அமைக்க முடிகிறதா? இல்லையே! அப்படி எதையும் அணுமதிக்காத கேரளத்து மக்கள் தாழ்ந்தா போயிற்றார்கள்? இந்தியாவிலேயே மனித வள மேம்ப்பட்டு சிறந்து வாழ்நிலையில் உள்ளார்கள். எச். டி. ஐ. குறிப்பேட்டில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளனர். சமச்சீரான வளர்ச்சியிலும், கல்வியிலும் நாட்டிலேயே முதன்மையான இடத்தில் உள்ளனர். தமிழகத்தில் பல பண்ணாட்டு கம்பெனிகள் நிறைந்திருக்கும் நிலையில் இலவச அரிசியை நம்பி வாழ வேண்டிய அவசியம் என்ன. எங்கும் தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத்தில் செல்வம் கொழிக்க வேண்டாமா?
ஆகையால் வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பதுதான் கேள்வி?
மேம்ப்பட்ட சாலைகள் யாருக்காக போடப்படுகின்றன? முக்கிய வழித்தடங்களில் போடப்பட்டிருக்கும் சாலைகள் பண்ணாட்டு கம்பெனிகளுக்கானது. நீங்கள் செல்லும் போது பணம் கொடுக்க வேண்டும். இதைப்போன்ற சாலைகளில் பத்தில் ஒரு பங்கு கிராமத்திற்கோ,அல்லது ஏனைய உட்பகுதிகளுக்கோ கிடைப்பதுண்டா?. பிறகு தமிழகத்தை நகரமயக்கிறது. கிராமம் என்றால் ஒரு கட்டமைப்பு இருக்கும். அதை உடைப்பது. அதன் மூலம் மக்களது உறுதிப்பாட்டை குலைப்பது. மக்களின் ஆதாரமாக உணவு உற்பத்தி மற்றும் ஏனைய உள்ளூர் தொழில்களை அழிப்பது. அதன் மூலம் அரசாங்கத்திடம் நாடி வரச்செய்வது. அவ்வாறாக தங்கள் பாரம்பரிய தொழில்களை கை விட்ட மக்களை பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கூலிகளாக மாற்றுவது. அது தான் கடற்கரை பகுதிகளில் நடக்கிறது. மீனவர்கள் அழிக்கப்படுவதை அரசு கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களை கைவிட்டுவார்கள் என்று அரசு எண்ணுகிறது.
அவ்வாறாகத் தான் கலாமும்(2020) கூறுகிறார். மக்கள் தங்களது வாழ்வாதரங்களை தியாகம் செய்தால் 200 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் என்கிறார். தமிழகத்தின் மற்ற பகுதி மீனவல்களை விட விழுப்புணர்வும், சற்று வளமையும் கொண்டுள்ள கூடங்குள மக்களை உளவியல் ரீதியாக பாழ்ப்படுத்தவே இந்த அணு உலை. இவ்வாறாகத்தான் தமிழகத்தின் ஆதாரப்பகுதிகள் அழிக்கப்பட்டன. அதற்காக ஏவப்பட்ட கடைசி அம்பான கலாம் 2020 கூறும் கூற்று என்னவென்றால், அப்பகுதியில் தொழிற்சாலை: அப்படியன்றும் அப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பின்றி அல்லல் பட வில்லையே. பிறகு நான்கு வழிச்சாலை: அது எதற்கு? அங்கென்ன போக்குவரத்து நேரிசலா? பிறகு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை. அதற்கு அவசியம் தான். ஒரு வேளை அணு உலை அமைக்கப்பட்டால் 500 மட்டுமல்ல 50000 படுக்கைகள்கூட அவசியப்படும். இப்போது புரிகிறாதா யார் இந்த கலாம் என்று?
மன்மோகன் சிங் போல இவரும் கார்பெரட் எஜண்ட் என்பது தெளிவாகிறதா?. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தை கார்பெரட் மயமாக்க என்ன அவசியம். இது தான் முக்கியமானது. ஏனெனில் தமிழகம் பிரச்சனை இல்லாத மாநிலம். அது பெருமுதலிகளுக்கு தங்களது முதலீடு பத்திரமாக இருக்குமென நம்பிக்கை. பிறகு ஆட்சியாளர்கள். தமிழகத்து ஆட்சியாளர்கள்(இருவருமே) பேராசை பிடித்த கார்பெரட் அடிவருடிகள். அடுத்தாக நில அமைப்பு, வளம், பிறகு வேலையாட்கள். அதுவும் நுட்பமான பணியாளர்கள். பிறகு பல்லாண்டு காலமாக தமிழர்கள் அடங்கி வாழ கற்றுகொண்டதன் விளைவு. பிறகு போக்குவரத்து வசதி கடல் மற்றும் சாலை. பிறகு பாதுகாப்பான பகுதி. இவை அனைத்தும் ஒருங்கே கிடைப்பதால் மக்களை பலிகடாவாக ஆக்க முனைந்திருக்கின்றனர்.
மற்ற மாநிலங்கள் தங்களது வளத்தையும், நிலத்தையும் பாதுகாத்து வருகையில் தமிழகத்தை உயிரற்ற காங்கிரட் தலைகளாக பூமியை மாற்றி விடுவதன் மூலம் இனி வரும் காலத்தில் தங்களது உணவு மற்றும் அடிப்படை வாழ்வாதரங்களுக்கு திண்டாடும் நிலை ஏற்படும். நெற்களஞ்சியமாக திகழ்ந்த செங்கள்பட்டு-காஞ்புர மாவட்டத்தின் நிலை என்ன? இன்று வெறும் காங்கிரட் காடுகள் தானே! நிலப்பரப்பு குறைந்தும். மக்கள் தொகை மிகுந்த அடர்த்தியும் கொண்ட தமிழகத்தில் இம்மாதிரியான அணு உலைகளை அமைக்க எப்படி அரசுகள் துணிந்தன என்பதை எண்ணும் போது பேரதிச்சயாக உள்ளது.
கலாம் மற்றொரு விஷயத்தை குறிப்பிடுகிறார், கப்பல் விபத்து ஏற்பட வில்லையா? விமானம் விபத்து ஏற்பட வில்லை? பேருந்து விபத்து ஏற்பட வில்லை? என்று. அணு விபத்தால் பாதிப்பு பற்றி அவர் அறிந்திருக்கிறரா? அடிப்படை அறிவு உள்ள எவரும் இப்படி பேசமாட்டார்கள். அணு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது அளவிட முடியாது. பல்லாண்டு காலத்திற்கு பாதிக்கக்கூடியவை. ஒரே நாளில் பல்லாயிரம் உயிரிழப்பு ஏற்படாது என்றாலும் அதன் விளைவுகளால் பல ஆண்டுகள் நீடித்து பலியாக்கும் சக்தி கொண்டது. உதாரணத்திற்கு செர்போபெல். அந்த அணு விபத்தில் விளைவு குறித்து பிறகு பார்ப்போம்.
இவ்வாறாக கூடங்குளம் அணு உலையை தொடங்கும் முயற்சியை இந்திய அரசு மும்முரமாகி கொண்டிருக்கும் வேளையில் தான் ஜெர்மனி தனது அனைத்து அணு உலைகளையும் 2020 ஆண்டுக்குள்ளாக முடப்போவதாக அறித்துள்ளதை அப்துல் கலாம் என்ற ராகெட் வடிவமைப்பு பொறியாளர், அவரை முன்னாள் ஜனாதிபதி என்று கூற எனக்கு மனமில்லை. அவர்களிடம் உள்ள விஷயங்களை கொண்டும், மக்களுக்கு ஆற்றும் பணிகளை கொண்டும் சிலர் ஞாபகம் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் கலாம் மீது அத்தகைய எந்த வசீகரமில்லாமல் வெறும் எண், அதாவது 2020 என்ற எண் கொண்டே அவரை நினைவில் கொள்ள செய்கிறது. ஏனெனில் ஜனங்களில் நன்மைக்காக இருப்பவர் மட்டுமே ஜனாதிபது. வல்லரசு கனவுடன் மக்களை தியாகம் செய்ய தூண்டும் ஒரு மனிதரை ‘மௌன ஹட்லர்’ ராகவே பார்க்க முடியும். ஜெர்மனி நாட்டில் கிடைக்கப்பெற்ற யுரேணியம் தீர்ந்து போனதால் அணு உலைகளை மூடுதல் அறிவிப்பை விடுத்ததாக கூறுகிறார். அது முற்றிலுமாக பொய். அந்நாட்டு மக்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்றே அம்முடிவை எடுத்ததாக ஜெர்மனிய அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாது 1980- ல் நிறுவப்பட்ட அணு உலைகளின் செயல்பாடுகளை உடனே நிறுத்த ஆணையிட்டிருக்கிறது. கலாமின் கூற்றுபடி எடுத்துகொண்டாலும் யுரேணியம் கிடைக்கபெற்ற நாடே தனது அணு உலையை நிறுத்த போவதாக அறிவிக்க, யுரேணியம் சிறிதளவுகூட கிடைக்கப்பெறாத இந்தியா. அதை பெற மற்ற நாடுகளிடம் மண்டியிடும் இந்தியா இவ்வாறாக அணு உலைகளை நிறுவ அவசியம் என்ன?.
அதே போல் சுவிட்சர்லாந்தும், ஆஸ்டிரியா, இத்தாலி போன்ற நாடுகளும் அணு உலை எதிர்ப்பு நிலையை எடுத்து மூட திட்டமிட்டிருக்கின்றன. அதே போல் அதிக அணு உலைகளை வைத்திருக்கும் பிரான்ஸ், தனது மொத்த மின்சார உற்பத்தியில் 78 விழுக்காட்டினை அந்நாடு அணுவின் உலையில் மூலம் உற்பத்தி செய்யும் அதே வேளையில் 18 விழுக்காட்டினை அண்டை நாடுகளுக்கு விநியோகமும் செய்கிறது. அந்நாடு கூட அணு உலைகளை கை விட முனைந்துள்ளது. எனெனில் அணு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது மிகப்பெரியது. அதற்கு உதாரணம் செர்னோஃபெல்.
சோவியத் ரஷியாவில் உக்ரேன் மாநிலத்தில் உள்ள செர்னோஃபெல் என்ற இடத்தில் நிறுப்பட்டிருந்த அணு உலைகளில் ஒன்று வெடித்து சிதறுகிறது. அதன் விளைவால் ஏறபட்ட கதிர் வீச்சு ஹிரோஷிமா மற்றும் நாகஸாகி’யில் வீசப்பட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர் வீச்சைக்காட்டிலும் 100 மடங்கு அதிகமானது. சுமார் 1 லட்சத்தி 55 ஆயிரம் கி. மீ. பரப்பளவுக்கு அதன் கதிர் வீச்சு இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பாதிப்பு ரஷியா, உக்ரேன் மற்றும் பெல்லாரஸ் நாடுகளில் இருபத்திதைந்து ஆண்டுகளுக்கு பிறகும்கூட இன்றளவிலும் இருப்பதாக குறிபிடும் வேளையில் சுமார் 5000 நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இழப்பிடு மாதமாதம் வழங்கபட்டு வருகிறது. உயிரிழப்பு பொருத்தவரையில் அதன் விளைவாக 2 லட்சம் மக்கள் கதிர் வீச்சால் துர்மரணமடைந்தனர். இந்த தகவலை 1996-ஆம் ஆண்டு கிரின் பீஸ் அமைப்பு வெளியிடுகிறது. மற்றொரு கணக்கெடுப்பு 9.85 லட்சம் மக்கள் 1986 முதல் 2004 வரை புற்று நோயினால் மரணமடைந்ததாக 2004-ல் வழங்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
கணக்கிலடங்காதோர் ஊணமுற்றும், விபத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகள் கருவிலேயே சிதைவுற்றிருப்பது இதை விட பன்மடங்கு என தெரிவிக்கிறது. விகார உருவத்துடன் பிறந்திருப்பதை ஆதாரபூர்வமாக தெரிவிக்கிறது. அதன் கதிர் வீச்சு ஐரோப்பா முழுவதும் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் வேளையில் விபத்தின் போது நீருற்றி அனைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஒரு எலிகாப்டர் கூட கதிர் வீச்சுக்களு தாக்குண்டு விழுந்து நொருங்கிய காட்சி ஆதாரத்துடன் உள்ளது.
இவைகளை விட முக்கியமான விஷயம் செர்னோஃபெல் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரியின் நிலை. விபத்து குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விஞ்ஞானியான வெலாரி லெகஸோவா செர்னோஃபெல் விபத்தின் இரண்டாம் அண்டு நினைவு நாளில் தற்கொலை செய்துகொள்கிறார். இரண்டு வருடம் கழித்து விபத்து நடந்த நாளான 26 ஆம் தேதிக்கு மறுநாள் ஏப்ரல்27, 1988-ல் தனது அடுக்ககத்தில் தூக்கில் தொங்கினார். உண்மையை கண்டறிந்த அவரை அப்போதை அரசு அந்நிலைக்கு அவரை தள்ளியது.
இவ்வாறான பீதியூட்டும் தகவலுக்குப்பின்னும் உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் அணுயுலைகள் குறித்து தீர்க்கம்மான முடிவினை எடுக்காதிருந்ததை கண்டு அதிர்ச்சியளிக்கிறது. அவ்வகையில் பார்க்கும் போது அணு தொழிற் நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் எத்தகைய செல்வாக்கு செலுபவைகளாக இருக்கும் என்பது வளங்குகிறது. பிறகு இந்திய ஆட்சியாளர்கள் கூறும் மற்றொரு பொய், சீனா நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளை நிறுவ திட்டமிட்டிருப்பதாக கூறும் கூற்று. அதிலும் உண்மையல்ல. இருபத்தைந்து அணு உலைகளை அவர்கள் திட்டமிட்டது உண்மைத்தான், ஆனால் இவ்வருடம் மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அந்நாட்டு அரசு அமைச்சரவையை கூட்டி புதிதாக ஒப்புதல் அளித்த அனைத்து அணு உலைகளின் ஒப்புதலை ஒட்டுமெத்தமாக ரத்து செய்தது.
இவ்வாறாக மற்ற நாடுகளை சுட்டிக்காட்டி பழிப்போடுவதை இந்திய அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு மக்களிடம் விரோத மனநிலை விதைப்பது என்பது முற்றிலும் வஞ்சகமானது. நிச்சயம் கூடங்குளம் என்பது தமிழ்நாட்டிற்கான சபக்கேடு. சாதாரமான தண்ணீர் ஆவியாக 100 டிகிரி என்ற நிலையில் அணுவின் மூலம் உண்டாகும் வெப்பம் என்பது 2700 டிகிரி இத்தகைய உயரிய வெப்பத்தால் எந்த வித புற அசம்பாவிதம் இன்றி தானாகவே செர்னோஃபல்’லில் நடந்த போலொரு விபத்து நேரக்கூடும். அத்தகைய நிலை ஏற்பட்டால் விளைவு தமிழ்நாட்டையை விழுங்க்ககூடும். சுமார் 9000 மெகா வாட் தயாரிக்கும் திறன் என்பது அதிக அணு எரிப்பொருள் உபயோகத்திற்கு உட்படுவது. கல்பாக்கம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அணுயுலைகள் வெறும் 220 மெகா வாட் உற்பத்தி செய்யும் வேளையில் இத்தகைய பெரிய உற்பத்தியில் அதற்கேற்ப விளைவு இருக்கும் என்பது தின்னம். செர்னோபெல் மற்றும் ஃபெக்கிஷிமா விபத்துகளுக்கு அலட்சியமே காரணம் என்றும், தாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம் என்று கூறும் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி, நகராட்சி குப்பைகளையே பராமரிக்க வக்கற்ற உங்களால் எப்படி மேம்பட்ட நுட்பம் வாய்ந்த அவர்களை விட பராமரிக்க முடியும்?.
இவ்வாறாக இருக்க மனிதகுலத்திற்கு எதிராக பன்னாட்டு கம்பெனிக்காவும், பெரும் நிறுவனங்களுக்காகவும் தொடங்க முனைந்து கொண்டிருக்கும் கூடங்குளம், செர்னோபெல் போல் 1 லட்சத்தி 55 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிக்கும் மரண கூடாரமாக திகழப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இப்படியான பயங்கரத்தை எந்த மாநிலமும் இடமளிக்காது. அகையால் திட்டமிட்டிருக்கும் ஏனைய அணுயுலையையும் இந்திய அரசு நிறுவாது. ஏற்கனவே கேரளாவால் விரட்ட அணுயுலை தான் இது. கேரளா’வின் தேவைக்காகவே தொடங்கப்பட்ட கூடங்களத்தில் உற்பத்தி செய்ய எத்தனிக்கும் மின்சாரத்தின் பாதியளவை அம்மாநிலத்திற்கு வழங்கவும், தியாகம் செய்யும் தமிழகத்திற்கு பாதியுமாக அரசு நிவாணமளிக்க திட்டமிடுகிறது. அதுவும் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுக்காகவே!
இப்போது மேற்கு வங்கமும் அணுமதிக்க மறுத்திருக்கிறது. அதே போல் எந்த மாநிலமும் இடமளிக்காது. தமிழகத்தை விட இருமடங்கு பரப்பளவில் அதிகமுள்ள, அதாவது 2 லட்சத்தி 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஆந்திர மாநிலத்தில் இதுவரை ஒரு அணு உலை கூட இல்லாதது ஏன்? தமிழகத்தின் பரப்பளவு வெறும் 1 லட்டத்தி 30 ஆயிரம் தான். அதே போல் ஆந்திரா’வின் கடற்கரை பரப்பு சுமார் 1000 கிலோ மீட்டர். அங்கு ஏதாவது கடற்கரை பகுதியில் நிறுவ வேண்டியது தானே!.
இந்திய அரசு எப்போதும் கேரளத்திற்கு சாதகமான நிலையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் மத்திய அரசியலில் உயர் அதிகாரிகளில் 75 விழுக்காட்டினர் கேரளத்துக்காரர்களும், மேற்கு வங்கத்துக்காரர்களும் தான். இதில் மேற்கு வங்கத்துக்காரர்களை விட மலையாளிகளே அதிகம். ஆகையால் மாநிலங்கள் உருவாக்கிய காலம் கொண்டே தமிழர்கள் தங்கள் நிலப்பகுதிகளை வெகுவாக அண்டை மாநிலங்களில் இழக்க நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் அண்டை நாட்டிடனும் இழக்க நேரிட்டது. இது வரை தமிழர்களின் நிலப்பரப்பையும், ரத்தத்தையும் குடித்தது போதாதென்று இன்னும் குடிக்கவும், விழுங்கவும் காத்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான நிலையில் தமிழகத்தில் மொத்த பரப்பளவான 1 லட்சத்தி 30 ஆயிரம் கிலோ மீட்டரும் விழுங்க, என்றென்றும் பீதிக்குள்ளாக்கும் அரக்கானாக, தமிழ்நாட்டின் உயிரோட்டத்தை அடக்க நிற்கிறது இந்த கூடங்குளம் அணு உலை.
Tuesday, 8 March 2011
மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:7
அன்பார்ந்த வாசகர்களுக்கு
கடந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் அரசியலை தவிக்கும் எண்ணம் குறித்து குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய நிலைக்கு காரணம் அரசியலின் அருவருப்பு நிலைதான். இருப்பினும் அத்தகைய அருவருக்கத்தக்க நிலை நம்மை அறியாமலேயே நமக்குள்ளும், சுற்றிலுமாக ஆட்கொண்டு விடுவதுதான். சமீபத்தில் இணையத்தில், கடந்த இதழ் தலையங்கம் குறித்து விவாதம் நடந்தேறியுள்ளது. ஒரு மூத்த அறிவு ஜீவி கடுமையாக விமர்சித்துள்ளார். அதே இணையத்தளத்தில் நான் பதில் அளிக்கவும் முனைந்தேன். ஆனால் நேரிடையாக எனக்களிக்கப்படாத விமர்சனம் குறித்து பதிலளிக்க விரும்பாமல் கைவிட்டு விட்டேன். இலக்கியம் மற்றும் கலை தொடர்பாக அனைத்து அம்சங்களும் உலக பொதுமைக்கான ஒன்று. இதில் பிராந்தியம், மொழி என்று பாகுபாடோ இட ஒதுக்கீடோ தேவையற்றது. தமிழ் உட்பட ஏனைய உலக இலக்கியங்களை தீவிரமாக வாசித்து கொண்டிருக்கிறேன். இத்தகைய நிலையில் ஏறத்தாழ பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்களை வாசித்தும் உள்ளேன். எந்நிலையிலும் இவர்கள் என்னை ஈர்க்கவோ, பிரமிப்பில் ஆழ்த்தவோ பெரிதும் இல்லாத நிலைதான். தமிழில் பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதை முற்றிலும் மறுத்தோ அல்லது நிராகரிக்கும் நோக்கமோ எமக்கில்லை. அப்படி அவ்வாறாக பிரம்மிப்பில் இருக்கும் நபர்கள் தங்கள் முனைப்பில் விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டியதுதான். அதுவின்றி செய்படுபவர்களை காயடிக்கும் வேளைகளில் ஈடுபடும் முயற்சியை சற்றும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை. இவ்வாறான மனிதர்கள்தான் பத்தாண்டு முன் வரை நிகழ்ந்த ஆரோக்கியமான பல முயற்சிகளை காயடித்தவர்கள். குறிப்பாக நாகார்ஜூன், சில்வியா என்ற முத்து குமாரசாமி, எஸ். சண்முகம், தமிழவன் போன்றவர்களை தமிழ் இலக்கிய சூழலிருந்து விரட்டியடித்தவர்கள்.
அந்த நபர் குறிப்பட்ட எழுத்தாளர்களின் நாவல்கள் குறித்து அணுகும் போதே அவர் எத்தகைய அறிதல் இலக்கியத்தில் கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. ஒருவரது நாவல் பி.எச். டி தீசிஸ். அதன் லட்சனத்தை அந்த பதிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். அது எவ்வாறு தீசிஸிலிருந்து நாவலானது என்று. மற்றவருடையதை படிக்கவே முடியாதா ஒரு மொழி அமைப்பை கொண்டது. தமிழில் விமர்சிக்க, விவாதிகப்படுவது எவ்வாறு என்று உலகிற்கே தெரியும். இதற்குள் நான் விரிவாக செல்ல விரும்ப வில்லை. இப்படியாக எழுதுவது வேண்டாம் என்று நான் சென்ற இதழில் முடிவெடுத்த வேளையில் இவ்வாறாக எழுத வைத்து காலத்தை விணடிக்க வைத்த அரும்பெருமை அவருக்கே சாரும். தமிழில் இலக்கியம் என்ற பேரில் நிகழ்ந்து வரும் அசிங்கங்களையெல்லாம் வெளிப்படுத்தி கொள்ள எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இது போன்ற அறிவு ஜீவிகள் தங்களது அறிவாற்றல்களை தங்களுக்குள்ளே வைத்து கொண்டும், அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு பங்கிட்டு கொள்ளவும் வேண்டும் என்பதை எனது நிலைப்பாடு. பிறகு ஆகச்சிறந்த தமிழ் படைப்புகளை இத்தாலிய மொழியில் வெளியிடுவார்களா? என கேட்கிறார். அத்தகைய படைப்புகளை அவரது முனைப்பில் பிற மொழியில் வெளியிடுவதை யார் தடுத்தார்கள்? இதோடு நிறுத்தி கொள்வது நல்லது.
சமீபத்தில் கூட இரு பெரும் எழுத்தாளர்களின் மிக சமீபத்திய நாவல்களை வாசிக்க நேர்ந்தது இரண்டுமே படு அபத்தம். அவை குறித்து விரிவாக விமர்சிக்க எண்ணியிருந்தேன். எனினும் விமர்சனமாக எழுதும் அளவுக்குக்கூட ஏதும் எஞ்சப்போதில்லை என்பதால் கை விட நேர்ந்தது. மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவெனெறால் குறிப்பட்ட போக்கு குறித்தும், அதுவும் எனக்கு புலப்பட்ட தளத்தில் இருந்து மட்டுமே இதழின் போக்கு, இது ஒன்றும் அனைவரையும் இழுத்து போட்டு கொண்டு அரசியல் நடத்தும் கூட்டு அரசியல் கட்சியல்ல. இதழின் உள்ளடத்தோடு அணுகும் தன்மை கொண்டவர்கள் மட்டுமே இதழை வாசிக்கட்டும். இது அனைவருக்கும் பொதுவான ஏடல்ல.
-----------ஏப்ரலில் வெளிவருகிறது --------------------------சி
Thursday, 6 January 2011
அன்பார்ந்த வாசகர்களுக்கு
மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்குள் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளேன். பாபர் மசூதி குறித்த கட்ட பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோர முகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்து கொண்டிருக்கும் வரண்ட நதியின் தீராத வேட்கையும், உயிரற்ற பிரதிகளையுடைய ஆளுமைகளும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான தாள்களை முன்க்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும் படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லையென்றால் சற்று பொறுத்திருத்து புத்தக வெளியானதும் உபயோகத்திற்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.
இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீட்டு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பண்ணாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸபெட்ரத்தை கூட இலவசமாகத் தரலாம்.
வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுப்பத்திரிக்கையில் வெளி வருவதற்கான ஆனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகு ஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்து கொண்டும், அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராகிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுப்பத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.
தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையனை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைப்பெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு. நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும்(அருவருப்பான) சாதனையான 2ஜி ஸபெகட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு ப்ரயசத்தத்திற்மாக கூட இதை கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார்.
ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதை புனைய இலக்கிய கூலிகளை தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்து விட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தாங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம் தான் தமிழ் நாடு அடிவருடிகளின் சொர்க்க பூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை சாதகமாக்கி கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.
இலக்கியம் என்பது மொழியை சிலேகித்து எழுத வேண்டிய ஒன்று, அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு. அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் பரந்தபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்கு பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கரை கொண்டு இதுவரை அவர் வீண்டித்த காலங்களுக்கு பிரயாசித்தம் தேடிகொள்ள வேண்டும்.
கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒரு வித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசித்தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமா துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுப்படலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.
மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்து வைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளி வருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில் தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
- பதிப்பாசிரியர்
Subscribe to:
Posts (Atom)