Tuesday, 13 October 2009
மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)
பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்
ஆசிரியர்
செல்வ புவியரசன்
உதவி ஆசிரியர்
கிருஷ்ணமூர்த்தி
ஆலோசகர்
சுமா ஜெயராம்
க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.
செல் : 9894931312
தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும். உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.
- பதிப்பாசிரியர்
இதழின் உள்ளடக்கம்
பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-
செல்வ புவியரசன் 4
உலகமயமாதலும் அதன் இயலாமையும்-
க.செண்பகநாதன் 9
வெண்ணிறம் கொண்ட கரும்பறவை-
ஆல்பெரட் டி முஸோட்(தமிழில்:க. செண்பகநாதன் 13
ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-
க. செண்பகநாதன் 30
பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்-
க. செண்பகநாதன் 44
பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து -
தமிழச்சி தங்க பாண்டியன் 50
திருச்சாரணத்து மலைக் கோயில் -
ப. சோழநாடன் 55
Friday, 2 October 2009
ஷியாம் பெனகல்:: நேர்காணல்
கேள்வி: நீங்கள் ஹதராபாத்தில் வளர்ந்தவர். உங்களது பாலிய பருவத்தில் ஏற்பட்ட பல்வேறு பலவிதமான பாதிப்புகளை கூறுங்கள். ஏனெனில் எதையும் கருத் தோற்றம் கொள்ள கூடிய பருவம் அது இல்லவே?
ஷியாம் பெனகல்: ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படியே குழந்தை பருவத்துடன், கருத்தில் ஏதும் ஊன்றி இருப்பதாக நான் எண்ணவில்லை. இளம் பிரயாயத்தில் எந்தவொரு கருத்தாக்கங்களிலும் ஆட்படாத்தைப் போல் தான் இப்போதும் நான் உள்ளேன். அப்படி எதாவது ஒரு கருத்தாக்கத்தில் ஆட்ப்பட்டு விட்டால், அத்தகையது மிக பயங்கரமானது. அப்படியாக கருத்தாக்கத்திற்குள் ஆட்பட்டு விட்டால் புதிதாக கற்பது என்பது இல்லாமல் போய் விடும். அத்தகையது வாழ்வதை நிறுத்திக் கொண்டது போலானது. அத்தகைய நிலை எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் எனது இளைய வயதில் பாதித்தவைகள் குறித்து அறிய விரும்பிகிறீர்கள் என்றே நினைக்கிறேன்? சிறு பிரயாயத்தில் எல்லோரையும் போல் எனக்கும் குடும்பம் இருந்தது. அதில் சாதகமும் இருந்தது, பாதகமும் இருந்தது. சாதகமானவைகளை மட்டுமே எடுத்துகொண்டேன். அதில் ஒரு விஷயம், எங்கள் குடும்பம் மிக பெரியது. பரந்ததொரு மனவிலாசத்தை அடு அளித்து அகர்ஷித்தது. எனது உறவினர்கள் பல வித்தியாசமான மனவிலாசத்தை தங்களுக்குள் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, எங்கள் இடத்திலிருந்து உடல்நலம் தேறிக்கொண்டிருந்த மாமா, நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். அத்தருணத்திலிருந்து எனது ஆர்வமும் தொடங்கியது. எனது மூத்த சகோதரர் ஓர் ஓவியர். அதனால் தான் ஓவியம் பற்றிய ஆர்வமும் அரும்பியது. திரைப்படம் மீதும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததினால் எனது ஆர்வமும் திரைப்படத்தை நோக்கியும் ஊடிச்செல்ல செய்தது. அந்த தருணத்தில் பல்வேறு சம்பவங்களை பற்றி நோக்கியதால் பல விதமான விஷயங்கள் சாதகமாக எனது சிறு பிரயாயத்திலேயே குடிப்புகுந்து ஆர்வமூட்ட செய்தது.
கேள்வி: விளம்பர நிறுவனங்களுக்கான படியெழுத்தராக(copy-writer) தொழிலை தொடங்கிய நீங்கள், பின்னர் வணிக ரீதியான திரைப்படங்களையும், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவணப்படங்களையும்-அதாவது கலை, அறிவியல், மானுடவியல் போல் பல விஷயஙள் குறித்த ஆவணப்படங்களை உங்களுக்கு நல்ல பெயரை தந்தன. தொடக்க காலத்தில் நேர்ந்த இறுக்கந் தொய்ந்த பணியே தேர்ந்த திரைப்படப் படைப்பாளியாக உங்களை வளர்த்தெடுத்ததாக நினைக்கிறீர்களா?
ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி, விளம்பர நிறுவனங்களுக்கு நான் சென்றதற்கு முதல் காரணம் ஹதராபாத்தில் வளர்ந்ததினால் உண்டானது. அந்த காலக்கட்டத்தில் திரைப்பட பயிலகங்கள் ஏதும் அங்கில்லை. திரைப்பட படைப்பாளியாகும் விருப்பத்தை அனைவரும் எள்ளி நகையாடினார்கள். எவரும் அக்கரை காட்டாத நிலை. ஆனால் எனது ஆர்வம் ஒரு திரைப்பட படைப்பாளியாக திகழ வேண்டுமென்பதிலேயே இருந்தது. நிரைப்படத் தொழிலுக்கு ஹதராபாத் எந்த விதத்திலும் வாய்ப்புக்கு உகந்ததாக இல்லை. அக்காலக்கட்டத்தில், பூனாவில் உள்ள FTII - யும் தோன்றவில்லை. அப்போது அது அங்கிருந்தாலும் எனது தந்தையால் அங்கு அனுப்பி படிக்க வைத்திருக்க வாய்ப்பும் வசதியும் இல்லை. அடுத்ததாக பம்பாய் சென்று திரைப்படங்களுக்கு எவ்வகையிலாவது நுழையும் வாய்ப்பு ஒன்றிருந்தது. எவரொருவரிடமும் இணைந்து பணியாற்றும் நிலை எனக்கு அறவே பிடிக்க வில்லை. ஏனெனில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த பெருவகையான
திரைபடங்களை ஏற்று பின்பற்ற முடியாத மனநிலை எனக்கிருந்தது. அந்த படங்கினால் உண்டாகும் பாதிப்பை மனரீதியாக உள்வாங்கிக் கொள்ள நான் விரும்ப வில்லை. அதனால் தான் விளம்பர நிறுவனங்களுக்கு படியெழுதராக சேர்ந்தேன். கிறகு வணிக ரீதியான வாய்ப்பு கிடைத்தன. அவைகளை செய்ததன் மூலம் தின்ப்படங்கள் படைப்பதை பற்றி உண்மையாக கற்றுகொண்டேன். அதிலிருந்து எனது நிலை எவ்வகையிலும் தாழ்த்திக் கொள்ள வில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
கேள்வி: இப்போது உங்களது முழு நீள திரைப்படத்திற்கு வருகிறேன். உள்களது முதல் மூன்று படங்களான அங்கூர், நிஷாந்து, மந்தன், ஆகியவைகள்(trilogy) முத்தொடர் வகையை சேர்ந்தது. இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கும் மக்கள் நிலையைக் பற்றியது. இத்தகைய நிலையை நேரிடையாக அப்படங்கள் விவரிக்கும் தன்மை வாய்ந்தவைகள். இவற்றிலிருந்து விலகி பூமிக்காவில், நவயுத்தியை பயன்படுத்தினீர்கள். இப்படியான பரிணாமம் உங்களுக்குள் எப்படி நிகழ்ந்தது என்று கூறுங்கள்?
ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி. அங்கூர், நிஷாந்த், மந்தன் ஆகிய திரைப்படங்கள் முத்தொடர் வகையை சேர்ந்தது அல்ல. ஒரு விஷயத்தை பல கோணங்கள் கொண்டு எடுக்கப்பட்டதாகும். ஏனெனில், நான் மாற்றத்தின் ஆதாரங்களையும், சமூக மாற்றத்தையும் எப்போதும் விரும்புகிறவன். திரைப்படத்தில், பொருள் உள்ளடக்கத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டிருப்பவன் என்பதோடு அதன் வடிவ நெறிளோடும் அதனையும் தாண்டி பரந்து விரிந்த தன்மையுடனும் நான் தொடங்கியதன் விளைவாகத் தான் பூமிக்காவை உருவாக்கினேன். பூமிக்காவின் திரைப்பட உருவாக்க வடிவம் அனைவரையும் மன நெகிழச் செய்தது. அதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் நான் கையாண்ட பொருள் உள்ளடக்கம். அதிலிருந்து இருபத்தி ஐந்து வருடங்களாகவே இவ்வகையே பரிணாம வளர்ச்சியை நான் அடைந்துகொண்டிருக்கிறேன்.
கேள்வி: பூமிக்காவுக்கு பிறகு நீங்கள் எடுத்த மண்டி, ஒரு மயிற்கல். அதில்(உங்கள் பாணி) காட்சியமைப்பு மற்றும் வண்ண அமைப்புகள் மீது உங்களது பணி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. விபச்சார விடுதியின் வன்ம்ம நிறக்கூடு ரசிக்கத்தக்க மனப்பாங்குடன் காட்சிவெளியில் வெகுவாக அகர்ஷித்திருந்தது நேரிடையாக கதையிலிருந்து விலகி, நவ மாறுதலுடன் பூமிக்காவைப் போலவே இதுவும் சுராசியமான உதாரணம். அந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் கூட அவ்வடிவம் தானே?
ஷியாம் பெனகல்: ஆம், உண்மை தான். நேர் கோட்டில் கதை சொல்வது வரைமுறைக்கு உட்பட்டே நிகழ்கிறது. யதார்த்தத்தின் கருத்துருவம் தான் உண்மையில் உங்களுக்கு முக்கியமென்றால், இயல்பு மற்றும் யதார்த்தம் மீது அக்கரைக் கொள்ள அவசியமில்லை. அவை இரண்டு வகையான வெவ்வேறு விஷயங்களாக உள்ளன. யதார்த்ததின் கருத்துருவத்திற்கும், யதார்த்த படங்களை படைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. யதார்த்தம் எப்போதும் பல்வேறு கோணங்களை கொண்டிருக்கிறது. அவை நேரிடையாக, அதாவது A-B, C-D......Z என்று நேர் கோட்டில் தொடர்ச்சியாக நகர அவசியமில்லை. அதனால் தான் பல்வேறு கோணங்களை கொண்டது என்று கூறுகிறேன். அவே ஒற்றை கோட்டில் அமைய வில்லை. அவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து புதிய திரை வடிவத்தை கண்டுப்பிடிப்பதே என் திரை வடிவமாகும்.
கேள்வி: புதிய கலாச்சார சூழலில் உள்ளுர் வண்ணத்தை மிக நுட்பமாக கையாளும் திரன் உங்களுக்கு கை வந்திருக்கிறது. அதனுடன் திரைப்படத்தில் கையாளப்படும் களத்திற்கு தகுந்தாற் போல் பொருத்தமாக, மக்களின் அதே இயல்புத் தன்மையுடன் உங்களால் திரைப்படம் எடுக்க முடிந்திருக்கிறதாகவே நான் கருதுகிறேன். அவ்வகையில் நீங்கள் எடுத்த இந்தி மொழி திரைப்படங்களான மந்தன், மண்டி, திரிக்கால், ஜூணுன், அரோகன், சுஸ்மான், சுராஜ்கா சாத்வான் கோடா ஆகியவைகளை நிதர்சனமாக கொள்ளலாம். இப்படங்களில் இந்தி மொழி கையாளப்பட்டிருந்தாலும் அந்தந்த பகுதிக்கேற்ப கலாச்சாரத்தை சிற்சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டிருந்தன. இலுப்பினும் மந்தனை குஜராத்தியிலும், திரிக்காலை கொக்கனியிலும், அரோகனை வங்கத்திலும், சுஸ்மானை தெலுங்கிலும் எடுத்திருக்கலாம். இவைகளை இந்தியில் நீங்கள் எடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதேனும் உண்டா?...
ஷியாம் பெனகல்: பம்பாயில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தி படங்கள் எடுப்பதற்கு மையமாக பம்பாய் திகழ்ந்து வந்தது. அப்படியென்றால் அது வணிக ரீதியான ஒரு தேசிய சந்தை என்று அர்த்தம். பம்பாயிலிந்து தெலுங்கிலோ அல்லது கன்னடத்திலோ, அல்லது தமிழிலோ அல்லது வங்காளத்திலோ படம் எடுப்பது மிக கடினம். அதனால் தான் நான் இந்தியில் படங்களை உருவாக்கினேன். திரைப்படத்தின் பின்புலச் சூழ்நிலையோடு கலக்கும் அம்சங்களை நான் முக்கியமாக கொள்வேன். அந்த பின் புலத்தைக் கூட வெறும் சூழ்நிலைக் கொண்டு மட்டுமே நான் உருவாக்குவதில்லை. கதாப்பாத்திரங்களோடு முற்றிலுமாக பொருந்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நான் கையாள்வேன். வேறு வார்த்தைகளில் கூறிவதானால், சூழ்நிலைக் கூட கதையின் ஒரு கதாப்பாத்திரம் தான். மற்றதைக் காட்டிலும் மிகுந்த விளைகளைக் கொண்டது. அதனோடு கூடவே சூழலும், அதற்கேற்ப வாழும் மக்களின் சூழ்நிலையும் எனக்கு முக்கியமாகப்படுகிறது. தெழுங்கில் திரைப்படங்கள் நான் எடுக்க வில்லை என்ற போதிலும், அதற்கு இணங்கினாற் போல் கதாப்பாத்திரங்களை நான் படைத்திருந்தேன். அத்தகையதே முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகையது நம்பகத்தன்மையால் விளைந்ததாகும். அதனால் தான் அந்த தொடர்புக்கு மிகுந்த கவணம் செலுத்துவதுண்டு. நீங்கள் அதனை “கலாச்சார முதன்மை” என்ற வார்த்தையைக் கூறிக் கொள்ளலாம். ஏனெனில் கலாச்சாரத் தன்மை மிக அவசியமானது. இல்லையென்றால் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையையும், வேறுப்பாட்டையும் அறிந்து கொள்ளாமலேயே போய் விடும். எதையும் பொது கலாச்சாரத் தன்மைக் கொண்டு நீங்கள் பார்க்க முடியாது. அவ்வாறாக ஒன்றைத் தன்மையுடன் எதையும் அணுகினால் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தி விடும்.
கேள்வி: அத்தகைய காலச்சார அம்சத்துடன் நீங்கள் எடுத்த அணுக்கிரஹகம் என்ற படம் கூட சுவராசியமானது தானே. மராத்தி எழுத்தாளர் கணோக்கரின் “குண்டுராவை” மையமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை நிகழ்வான மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு மாற்றி அமைத்திருந்தீர்கள். அந்த படம் முக்கிய கதாபாத்திரத்தின் உளவியல் சார்ந்த பொருள் நிலைக் கொண்டு விரியும் மனவெளியை இடையது. பத்திரிக்கையார்களும் விமர்சகர்களும் அதன் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். அந்த படத்தின் மூல கதைக்கான இடத்தை மாற்றி எடுக்கும் போது, அதற்கு தகுந்தாற் போல் சுழல்களை தேர்ந்தெடுத்து வெற்றியடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?
ஷியாம் பெனகல்: சரியாக செய்து வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறேன். விசாகப்பட்டிணத்தை சுற்றியுள்ள கிழக்கு கடற்கரைப்பகுதியையும், பிராமணச் சமுகத்தையும், பிராமண கிராமத்தையும் சரியாகவே படமெடுத்திருந்தேன். இடத்திற்கு தகுந்தாற் போலான கதாபாத்திரங்களை மிகச் சரியாகவே அமைந்திருந்ததாகவே நினைக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்த படம் வந்த போது, குறிப்பாக இலக்கிய உலகில் பெரும் விவாதங்கள் ஏற்படுத்தியது. அதன் பிறகு திரைப்பட ஆர்வலர்களுக்கும், திரைப்படத்தை வெகுவாக எதிர்ப்பவருகளுக்கிடையையும் பெரியளவில் விவாதங்கள் ஏற்பட்டன. இதை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் எத்தகைய பாதிப்பை அந்த படம் ஏற்படுத்தியது என்பதனை. அதனால் தான் இதனை “குடைத்து மதிப்பிடுதல்” என்ற வார்த்தையை நான் ஏற்க மாட்டேன். இதற்கு பதிலாக திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து வேறு விதமாக மக்களை சந்திக்க வைத்திருக்கிறது என்பதையும், அது கலாச்சாரத்தை கொண்டு செலுத்தும் ஊர்தி என்பதாகவும் நான் கொள்வேன்.
கேள்வி: உங்கள் படத்திற்கென்று சிறப்பாக ஒலி அமைப்புகள் கையாள்கிறீர்கள் என்பது தெரிந்த விஷயம். ஆழ்யுணர்வு நினைவிலி மன ஓட்டத்திற்கு இலகுவாக, காட்சியமைப்புக்கு பொறுத்தமான ஒலிக்கொண்ட இசையைக் கூட்டுகிறீர்கள். உதாரணத்திற்கு எடுத்துகொண்டால் நிஷாண்த்தில் உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் சோக இழையோட நரம்பிசை கருவியின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேப் போல் சப்னா அஸ்மியை கடத்திச் செல்லும் போது கூட தூரத்தில் மனிதர்களின் வினோத சப்தமும், தெரு நாய்கள் ஊளையிடும் ஓசையையும் ஊடாட்டமாக அமைத்திருந்தீர்கள். இவ்வகையான காட்சிகள் பார்வையாளர்கள் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக அகலாதவைகள். செவிகளோடு கூடி இணையும் காட்சிகளை உருவாக்கும் திறன் உங்களுக்கு கை வருவது எப்படி?
ஷியாம் பெனகல்: திரைப்படத்தைப் பொருத்த வரையில் ஒலி ஒளி அமைப்புகள் முக்கியமானதும், இன்றியமையானதுமாகும். இரண்டுக்கும் சரிசமமான பங்களிப்பு உண்டு. ஒன்று மற்றொன்றுக்கு ஊக்கமளிக்கக் கூடியது. பெரும்பான்மையான படைப்பாளிகள் இந்த நிதர்சனமான உண்மையை தவற விட்டு விடுகிறார்கள். காட்சியை விவரிப்பதற்கே ஒலி அமைப்பு என்று எண்ணி விடுகிறார்கள். இந்த எண்ணத்தை நான் ஏற்றுகொள்ள வில்லை. ஒலியும் காட்சியும் முழுமையுடையதாக இருக்க வேண்டும். இசையை உணர்வோடு கலக்கும் வகையில் கூட்ட வேண்டும். அத்தகைய ஒலி கூட பலதரப்பட்ட இசைக் குவியலாக அமைந்து விட கூடாது. காட்சிக்குரிய பரிணாமத்துடன் திகழ வேண்டும். அதற்கு ஒத்த இணைப் போல பரிணமிக்க வேண்டும். திரைப்படத்தில் அந்த ஒலி காட்சிக்கு புனைவு தந்து நகர்த்தும் திறனை கொண்டிருக்க வேண்டும். அத்தகையதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அனைத்தும் உன்னத நிலை பெறும்.
கேள்வி: நீங்கள் எடுத்த கலியுக், மகாபாரத்தின் கதாபாத்திரங்களுக்கு இணையான நவீன கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. இக்கால பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு அது முன்னோடியானதாகும். புராண, இதிகாசங்களை திரைவடிவத்திற்கு உட்படுத்தி எடுக்கப்படும் விதம் பற்றி கூற முடியுமா?
ஷியாம் பெனகல்: இதிகாசங்களை அப்படியே எடுக்க நான் முனைய வில்லை. இருப்பினும் மகாபாரத்திலிருந்து மாதிரியை எடுத்து நான் கையாண்டேன். ஏனெனில் அவைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய பிரதிகள். நான் கலியுக் தொடர் தயாரிக்கையில் மாறி வரும் இந்திய சமூகத்தில் தொழில்த்துறை இயக்கத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு எனக்கிருந்தது. குறிப்பாக குடும்பத் தொழிற்சாலை- இப்போது அதன் நிலை என்ன அல்லது அதன் எதிர்காலம் எப்படி- பண்ணை முறை தொழிலிருந்து பெரும் முதலாளித்துவ தொழில் வகைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தைத் தான் கலியுக்கில் கொண்டு வர நான் எத்தனித்தேன். இப்போது அது தான் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு கருப்பொருளாக விளங்கி வருகிறது. (புன்னகை) அவர்கள் திரைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தான் என்னால் கூற முடியும்.
கேள்வி: மாற்றம் என்ற கருத்தாக்கம் என்றவுடன் உங்கள் படம் திரிக்கால் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. அது ஒரு சிக்கலான படம். போர்ச்சுகீஸிடமிருந்து விடுதலை அடைவதற்கு முந்தய கோவாவின் தளம் அது. அந்த படத்தில் மாற்றம் எனும் விஷயம் வலிந்து செய்யப்பட்டிருந்தது. உண்மையான காலகட்டமும், திரைப்படத்தின் காலம் என்ற கருத்தாக்கமும் உங்களை மாற்றம் என்ற தத்துவார்த்தமும், திரைப்படமென்ற மரபொழுக்கத்தில் காலம் மற்றும் வெளியின் அவசியம் உங்களுக்கு உதவியிருப்பதாக எண்ணுகிறீர்களா?
ஷியாம் பெனகல்: காலம் ஒரு சுவராசியமான கருத்துருவம். ஏனெனில் உங்களது மனதிலும் காலமிருக்கிறது. அந்த காலம் யதார்த்தில் சிந்திக்க வைக்கிறது. காலம் பன்முகப்பட்டது மட்டமல்ல. மனிதனூடாக சென்று பெரிதும் அகர்ஷபடுத்தவும் செய்யும். இலக்கியம் இந்த கருத்துருவத்தில் வெகுவாக பயணித்து செல்லக் கூடியதாக இருக்கிறது என்பதனை நீங்கள் அறிந்தது தான். ஆனால் திரைப்படத்தில் காலம் என்ற கருத்துருவத்தை உருவாக்குவது கடினமானது. திரைப்படத்தின் இயல்பு அதற்கு தடையாகவும் இருக்கிறது. இக்கால திரைப்படங்கள் ஒற்றை சிந்தனைக்குள் சிக்கிக் கிடக்கின்றன. தனி நபர் சார்ந்த மனவெளியை வரைந்தெடுப்பது மிக கடினம். உங்களிடம் உள்ள உள்மன விஷயங்களை பலவகை இலகுவான தன்மைகளை வடிவமைக்கக் கூடியது. உதாரணத்திற்கு, நான் ஒரு விஷயத்தை தருகிறேன். இங்கே அமர்ந்து இருநூறு வருடங்களுக்கு முன் எண்ணிப்பாருங்கள். பிறகு விரைந்து அதன் நோக்கி நீங்கள் செயல்படுவீர்கள். அதில் ஒரு தனித்துவமான உணர்வுடன் உங்கள் மனம் பயணிக்கும். அப்போது இலக்கியத்தில் ஒரு வடிவம் பிறக்கும். ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு எளிதல்ல. எனக்கு அதில் தான் ஆர்வம் அதிகம். திரைப்படத்தில் என்னால் முடிந்த வரை அந்த பிரதேசத்தில் பிரவேசித்து கண்டறிய முயல்வேன். உநாரணத்திற்கு சுராஜ் கே சாத்வான் கோடாவில் அவ்வகை வடிவத்திற்காக உழைத்தேன். சர்தாரி பேகத்தில் அதே நோக்கத்தில் முயற்சித்து கொஞ்சம் வெற்றியும் பெற்றேன்.
கேள்வி: உங்களது படம் சுராஜ் கே சாத்வான் கோடா, தர்மவீர் பாரதியின் இந்தி நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அதன் திரைவடிவம் மிகுந்த சிக்கலும், அகவுணர்வும் கொண்டது. இதைப் போன்ற உருவரை மாதிரியை நீங்கள் இதற்கு முன் செய்ததில்லையே! இந்த படம் கூட புனைவுக்கான வழிவகை என்றே நான் எண்ணுகிறேன். மெய்யியலுக்கும் மீமெய்யியலுக்கும் இடையே மறைப்பொருளான வேறுப்பாட்டை அடூர் கோபால கிருஷ்ணனின் “அனாந்தரம்” படத்தைப் போல் நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். அதில் கூட நீங்கள் மீண்டும் ஒருமுறை காலம் என்ற கருத்தாக்கத்தையும், வெளியையும் கையாண்டு வெற்றியடைந்திருக்கிறீர்கள். ரஷிய இயக்குநர் ட்ராக்கோவ்ஸ்கி(Trokovsky)யைப் போல் காலக்கட்டதின் குறிப்பிட்ட காட்சியை உயிரோட்டத்துடன் வேறுப்படுத்திருந்தீர்கள். திரைப்படத்தின் தலையாய பாத்திரம் மூன்று வெவ்வேறு விதமான தொனியை வெளிப்படுத்தும் படி இருந்தது. எப்படி நீங்கள் இவ்வாறெல்லாம் திட்டமிட்டீர்கள்?
ஷியாம் பெனகல்: ஆம், திட்டமிட்டது தான். உண்மையில் அகக் கூறினை வலியுறுத்திக் காட்டவே விரும்பினேன். ஏனெனில் உண்மையின் இயல்பு ஏதோ ஒரு வகையில் மிகவும் ஈர்க்கக் கூடியது. என்னையும் உண்மையின் இயல்புத் தான் மிகவும் ஈர்த்தது. உண்மையில் நிதர்சனத்தை விட வேறு எதுவும் சிறந்ததாக இல்லை. ஏனெனில், அதனுடன் தொடர்பு கொண்டவனைப் பொறுத்தே உண்மையின் அகவெளி புலப்படப்படும். இது கண்கூடான நிகழ்ச்சி போன்றதல்ல. புலன்களால் உணரக்கூடிய நிகழ்வு. உண்மை என்பது ஏதோ ஒன்று என்பதினால் பார்வையாளர்களுக்கு அணுகத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. அவ்வாறு செய்வதற்கே பலவலையான ஒலிநுட்ப பண்புகளை நான் கையாண்டேன்.
கேள்வி: தூர்தர்ஷனுக்காக நீங்களெடுத்த பாரத் ஏக் கோஜ் உங்களது பணிகளிலேயே மிக்க ஆர்வத்துடன் கூடிய துணிகர முயற்சி. அதனை மிகச் சிறந்த கலைப்படைப்பாக எண்ணுகிறேன். அதனை ஒரு நவீன காவியமெனவும் கருதுகிறேன். நேருவின் செவ்வியலைக் கொண்டு இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றினை நீங்கள் காட்சியாக்கிய விதம் மிகவும் பிரமிக்கத்தக்கது. இந்த மெகாத்தொடரைப் பற்றி ஏராளமாக ஆராய்ச்சிகள் நடந்தேறின, ஒவ்வொர் உட்கதையிலும்(episode) உங்களின் மனப்போக்கினை பின்னணிக் குரல் கொண்டு வலியுறுத்திய அதே வேளையில் நேருவின் கருத்தை சூத்திரதாரி முதலிலும் தொடக்கத்திலும் வெளிப்படுத்துவார். வாழ்மொழியாகவும், மரபு வழி நாட்டுப்புற கதையாடருடனும் மற்றும் பாரம்பரிய இயல், இசை, நாட்டியங்களுடனும் பொருத்தமாக நீங்கள் தந்த விதம் உண்மையான இந்தியத் தன்மையை கொண்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு பல்வேறு கோணத்தில் புதிய அனுபவத்தை தர கூடியவை. அனைவராலும் விரும்புவதற்குரிய இத்தொடரை உருவாக்கியதில் மிகுந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் அல்லவா?
ஷியாம் பெனகல்: ஆம், அந்த அனுபவம் அற்புதமானது, இதுப் போன்ற செயல் முழு வாழ் நாளில் ஒருமுறை தான் கிட்டும். மிக கடினமானதும் கூட. பாத் ஏக் கோஜ் உருவாக்கியதில் எனக்கு தனித்துவமான அனுபவம் கிட்டியது. ஏனெனில், அது நமது வரலாற்றை புரிந்து கொள்ள உதவியது. மற்றவர்களுக்காக நான் உருவாக்கிய இத்தொடரின் மூலம் எனது அனுபவத்தினை நான் பயின்றேன். வரலாற்றை பயில்வதென்பதை காட்டிலும் வரலாற்றைப் பற்றி படமெடுப்பதில் ஒரு வித சாகச உணர்வுக் கிட்டியது.
கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி- உங்கள் பார்வையில் கலையின் நோக்கம் தான் என்ன?
,ஷியாம் பெனகல்: கலையின் நோக்கம் பற்றி கூறுவது மிக்க் கடினம். இருப்பினும் அது வாழ்க்கைக்குள் கூர்ந்து பார்க்கவும், அனுபவங்களை பெறவும், வித்யாசமான உணர்ச்சிகளை பெறுவதற்காகவும் என்று எண்ணுகிறேன். மனதை கிளர்ந்தெடுக்கக் கூடியதாகவும், அறிவுக்குரியதாகவும், புலனுணர்வு சார்ந்த விஷயமெனவும் கொள்ளலாம். எந்த வித கலைப்படைப்பின் ஆக்கமும் குறிப்பிடத்தக்க உள்ளுணர்வில் இயங்கும் ஆளுமையை கொண்டதாகும்.
தமிழில்: க. செண்பகநாதன்.
Subscribe to:
Posts (Atom)