நகர வீதிகளில்
வரையறுக்கப்பட்ட பூங்கா.
எண்ணிக்கைக்கு அடங்கிய செடிகள்.
உலர்ந்த பூக்கள்.அந்தி வந்தது.
கதவு திறக்கப்பட்டன.
கூட்டம் கூடியது.
சிலர் கூடி குலாவினர்.
விரசங்கள் சில விரவினர்.
ஒரு சிலர் சிறுநீர் பாய்ச்சினர்.
எட்டு மணியாகி விட்டதென
விரட்டினான் காவலாளி.
அவரவர் தொடைத்து
கொண்டு புறப்பட்டனர்.
பூட்டப்பட்டது கதவு.
காலம் வரையறைக்கு உட்பட்டது.