Thursday, 18 June 2009

புத்தக விமர்சனம்


புத்தக விமர்சனம்


மரணத் தடம்

தாமஸ் மன்

தமிழில் : க. செண்பகநாதன்


மரணத்தடம் / மொழிபெயர்ப்பு நாவல்/ © தாமஸ் மன் /
மொழிபெயர்ப்பு : செண்பகநாதன் / முதல் பதிப்பு : நவம்பர் 2008 /
வெளியீடு : கண்ணி பதிப்பகம், 17 B தென் வெட்டுக்காரத் தெரு,
தஞ்சாவூர், 613001 /அச்சாக்கம்: பாவை பிரிண்டர்ஸ், சென்னை/
பக்கம் : 96 / விலை : ரூ. 60

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

தாமஸ் மன் 1875 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள லூபெர்க் நகரத்தில் பிறந்தார். செனட்டராக இருந்த ஜேகனன் ஹெயின் ரிச்க்கு இரண்டாவது மகனாக தாமஸ் மன் பிறந்தார். அவரது தந்தை தானிய வியாபாரியாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி ஜூலியா டி சில்வா புரூகன்ஸ் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்றபோதிலும் அவரது மூதாதையர்கள் ஜெர்மன் வம்சாவளிக் கலப்பினர். ஜூலியாவிற்கு ஏழு வயதாக இருந்த போது அவர்களது குடும்பத்தினர் ஜெர்மனியில் குடியேறினார்கள். தாமஸ் மன்னின் தாய் ரோமன் கத்தோலிக்க இனத்தைச் சேர்ந்தவர். தந்தை லுத்தேரியன் நம்பிக்கையையும் கடைப்பிடித்து வந்தார். தாமஸ் மன்னின் தந்தை 1891 ஆம் ஆண்டு காலமான பிறகு வணிகத் தொழில் நீர்த்துப் போனதினால் அவர்கள் முன்ச் நகரத்திற்கு குடிப்பெயர்ந்தார்கள்.
லுபெர்க் ஜிம்னாஸியத்தில் அறிவியல் பிரிவில் இணைத்துக் கொண்டு பயிலத் தொடங்கிய தாமஸ் மன், தனது பெரும்பான்மையான நேரத்தை முன்ச் பல்கலைகழகத்திலேயே செலவளித்தார். அங்கு அவர் பத்திரிக்கை துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் கல்வி கற்றார். தனது பத்தொன்பதாவது வயதில் தாமஸ் மன், முன்ச்யில் ஜெர்மனிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 1894 முதல் 1895 வரை பணியாற்றினார். பாலஸ்தீன் மற்றும் இத்தாலி நாடுகளில் தனது சகோதரர் ஹென்ரிச் மன் உடன் இருந்த காலத்தைத் தவிர்த்து முன்ச்யில் 1891-யில் இருந்து 1933 வரை அவர் வசித்து வந்தார். அவரது சகோதரர் ஹென்ரிச் மன், நாவல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு தாமஸ் மன் 1933 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்தார். அப்போது ஜெர்மனியில் நாஜீக்களின் ஆட்சி நடந்துக் கொண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில் தாமஸ் மன்னுக்கு எதிரான கருத்து அங்கு உருவாக்கப்பட்டிருந்தது. அவர் 1833 ஆம் ஆண்டிலேயே வெளியேறினாலும் 1836 ஆம் ஆண்டு ஹிட்லர் அரசாங்கத்தால் முறைப்படி நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பான் பல்கலை கழகம் அவருக்கு அளித்த டாக்டர் பட்டத்தை 1937 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. பிறகு 1946 ஆம் ஆண்டு மீண்டும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாமஸ் மன் 1940 ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகனானார். அத்தருவாயில் 1941 முதல் 1953 வரை கலிபோர்னியாவில் உள்ள சான்த்தா மேனிக்கா என்ற இடத்தில் வசித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல முறை ஐரோப்பாவிற்கு அவர் பயணம் மேற் கொண்டார். பிறகு ஐரோப்பாவில் தங்கிவிட்ட அவர், சுவிட்சர்லாந்தில் ஜூருச் நகரத்தில் 1955 ஆம் ஆண்டு காலமானார்.
.தாமஸ் மன் தனது படைப்பியக்கத்தினை சிறுகதைலிருந்து தொடங்கினார். “simplicissimus”, என்ற ஜெர்மனிய வார இதழுக்காக அவர் “Little Herr Friedemann” சிறுகதையினை எழுதினார். அது 1898 ஆம் ஆண்டு பிரசுரமானது. அதுவே அவரது முதல் படைப்பாகும். பிறகு அவர் ரோம் நகரத்தில் இருக்கும் போது, "Buddenbrooks”என்ற நாவலை எழுத தொடங்கிய அவர், அதனை 1901 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதையடுத்து 1903 ஆம் ஆண்டு “Tristan,” என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டார். அதையடுத்து “Konigliche Hoheit(Royal Highness) என்ற நாவலை 1909 ஆம் ஆண்டும், Confessions of Felix Krull என்ற நாவலை 1922 ஆம் ஆண்டும் எழுதினார். இதனிடையே 1913 ஆம் ஆண்டு குறுநாவல் வடிவமான Tod in venedig(Death In Venice)யை எழுதினார்.
மரணத்தடம்(Death in venice)என்ற குறுநாவல் முதன் முதலாக 1912ம் ஆண்டு ஜெர்மன் மொழியில்(Der tod in venedig)பிரசுரமானது. அதன் பிறகு 1925ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியானது. மரணத்தடம் நாவலின் கதாநாயகன் கஸ்டவ் வோன் அஸ்ஹென்பெச் தனக்கு ஐம்பது வயது வரை பிரபலமான நாவலாசிரியராக அறியப்படுகிறார். இளம் வயதிலேயே மனைவியை இழந்து வாழும் அஸ்ஹென்பெச், தன்னை ஓர் ஒழுக்கசீலராக கட்டமைத்துக் கொள்கிறார். இந்நாவல் ஒரு கல்லறையிலிருந்து துவங்குகிறது. அங்கு அவர் செந்நிற முடியுடைய முரட்டு மனிதனைக் காண்கிறார். அஸ்ஹென்பெச்சை அவன் வன்மத்துடன் உற்று நோக்குகிறான். அவன் உற்றுப் பார்ப்பதை அவமானமாக கருதிய அவர் அங்கிருந்து கடந்து செல்கிறார். பிறகு ஒரு தருணத்தில், சுற்றுப் பயணம் மேற்கொள்ள எண்ணுகிறார். அதையடுத்து வெனிஸ் செல்ல திட்டமிடுகிறார். அதற்காக லிடோ தீவில் உள்ள ஹோட்டல் டெஸ் பைய்ன்ஸில், முன்கூட்டியே அறைக்கு பதிவுசெய்கிறார். அந்த தீவுக்கு நீராவிப் படகு மூலம் செல்கிறார். அங்கு வயதில் மூத்த ஒருவரை சந்திக்கிறார். அந்த மனிதரோடு ஆரவாரமிக்க இளைஞர் பட்டாளமும் பயணம் செய்தது. இளைஞர்களுக்கு இணையாக தன்னை காட்டிக் கொள்ள விரும்பிய அந்த வயோதிகன், தன்னை இளைஞன் போல் பாவித்து, தலைக்குச் சாயமிட்டும், பொய்ப் பற்கள் கட்டியும் பகட்டேற்றியிருந்தான். அவனை ஒரு இளைஞன் என்று முதலில் நினைத்திருந்த அஸ்ஹென்பெச், பிறகு அவனது சுய ரூபத்தை அறிந்துகொண்டார். பிறகு ஒரு தருணத்தில் அஸ்ஹென்பெச் கான்டோலோ ஒன்றில் பயணம் மேற் கொள்ள வேண்டி இருந்தது. அதனை செலுத்துபவனும் செந்நிற முடிக் கொண்டவனாக இருந்தான். “உங்களை நல்ல முறையில் கொண்டு சேர்ப்பேன்,” என அவன் அவரை தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான். அவர் ஹோட்டலை அடைந்ததும், இரவு உணவின் போது உயர் வகுப்பு போலந்து குடும்பமொன்றைக் கண்டார். அந்த குடும்பத்தின் மூது அவருக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது.
அந்த குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். மாலுமிகள் உடுத்தக் கூடிய உடுப்பை அவன் அணிந்திருந்தான். மிக அழகாகவும் அவன் இருந்தான். அவனது பெயர் டாட்ஜியோ, அவனது சகோதரிகள் கன்னியாஸ்தீரிகளின் உடையில் இருந்தனர். அங்கிருந்த வெப்ப வானிலை மற்றும் ஈரக்காற்று அவரது உடலை பாதித்து நோயுற வைத்தது. அதனால் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த அவர், ஆரோக்கியமான இடத்திற்குச் செல்ல திட்டமிட்டார். அவர் புறப்படுவதற்கு எண்ணிய அந்த காலைப் பொழுதில் டாட்ஜியோவை பார்க்கிறார். அவன் மீது இனம் புரியாத உணர்வு அவருக்குள் மேலோங்குகிறது. அதை விடுத்து ரயில் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு அவரது பயணப் பேழை தவறுதலாக வேறு இடத்திற்கு சென்று விடுகிறது. கோபம் கொள்வது போல் நடிக்கிறார். ஆனால் உள்ளூற மகிழ்கிறார். இனி நாம் இங்கிருந்து செல்ல வேண்டியிருக்காது என்று எண்ணியவாறு மகிழ்ச்சியுடன் மீண்டும் விடுதிக்குச் செல்கிறார். தனது மூட்டை முடிச்சுகள் வரும்வரை வெனிஸில் தங்கிவிடலாம் என மனதார எண்ணுகிறார். அங்கிருந்து போய் விடும் முடிவையும் மாற்றிக்கொண்டு விடுகிறார். சில நாட்களிலேயே டாட்ஜியோ மீதான அவரது ஆர்வம் மோகமாக உருப்பெருகிறது. அவனைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அவன் செல்லும் இடமெல்லாம் அஸ்ஹென்பெச் ரகசியமாக பின் தொடர்வதுமாக வெனிஸ் முழுதும் சுற்றித் திரிந்தார். ஒரு மாலைப் பொழுதில் அவரை பார்த்து டாட்ஜியோ புன்னகைக்கிறான். அந்த புன்னகை, நார்சிசஸ் மலர் தன்னை நோக்கி எதிரொளிப்பதை போல் உணர்கிறார். உடனே அரவமற்ற பூங்காவுக்குள் ஓடி “நான் உன்னை காதலிக்கிறேன்,” என மெதுவாக தன்னந் தனியே கூறிக் கொள்கிறார். ஒரு முறை, வெனிஸ் நகரத்தின் உட் பகுதியில் அவர் பயணம் மேற் கொள்கையில், சுகாதார வாழ்வுத் துறையினர் அறிவிப்பை காண்கிறார். அந்த அறிவிப்பில், செதில் மீன்களை உண்ண வேண்டாம் என்றும், வெனிஸ் நகரத்தில் இனம் புரியாத நோய்த் தொற்று பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் அருவருக்கதக்க நாற்றம் அந்நகரம் முழுவதும் வீசக் கண்டார். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து திரிந்துக் கொண்டிருந்தார்கள். டாட்ஜியோ மீது இருந்த மோகத்தால் நோய் அபாயத்தை அவர் முதலில் கண்டு கொள்ளவில்லை. அப்போது தான் செந்நிற முடி வைத்திருந்த மூன்று நபர்கள் அவரைக் கடந்து சென்றனர். இந்த முறை அவரை கடந்து சென்றவர்களோ, மூன்று தெருப் பாடகர்கள் கொண்ட குழு, அவர்களில் ஒருவன் அஸ்ஹென்பெச்சை பார்த்த விதம் மரியாதைக் குறைவானதாக இருந்தது. ஓர் இரவுப்பொழுதில் அவர் தங்கியிருந்த விடுதியில் அந்த குழுவினர் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அப்போது டாட்ஜியோ பால்கனியின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்றிருந்தான். அவன் சாய்ந்திருந்த பாணி அழகுற இருந்தது. அப்போது அவன் மீது அவர் மோகபார்வையை வீசிக் கொண்டிருந்தார். அடுத்ததாக அஸ்ஹென்பெச், தனது சுய கௌரவத்தை வெளிக்காட்டும் முகமாக செயல் பட முனைந்தார். நகரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அறிக்கையைப் பற்றி டாட்ஜியோவின் தாயிடம் தெரிவிக்க முடிவு செய்தார். இத்தகைய நோய் சூழலுக்கு புழுதிக் காற்றே காரணமென்று கூறப்பட்ட வேளையில், வெனிஸ் நகரம் முழுவதும் காலரா பீடித்திருப்பதாக பிரிட்டிஷ் சுற்றுலா ஏஜென்ட் ஒருவன் தெரிவித்தான். இத்தகைய சூழ்நிலையில், டாட்ஜியோவின் தாயிடம் இதை தெரிவித்தால் அவன் இந்த விடுதியை காலி செய்துவிட்டு சென்றுவிடுவான். தன்னை விட்டு தொலைந்துவிடுவான் என்பதை எண்ணும் போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓர் இரவுப் பொழுதில், டையமிசனின்(dionysian)* சல்லாபக் காட்சிகளை கனவாக அஸ்ஹென்பெச் கண்டார். அத்தகைய கனவு கூட டாட்ஜியோ மீது அவர் கொண்டிருந்த ஆலிங்கன மோகத்தால் ஏற்பட்டது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. அதற்குப் பின்னரும் வெளிப்படையாகஅவனைத்தொடர்ந்துநோக்கிக் கொண்டிருந்தார்.அத்தகையநிலையில்அவரது நடவடிக்கைகளை அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே கண்டு விட்டார்களோ என்ற அச்சமும் கொண்டார். அத்தகைய சுழலில், அவனை நெருக்கமாகக் காணும் கட்டத்தில் மிக ஜாக்கிரதையாகவே இருந்தார். அவனை தொட்டதோ, பேசியதோ இல்லை. அவரது உணர்ச்சிகள் பார்வைகளோடு அடங்கிக் கிடந்தது. தன்னை அழகுற காட்சிப்படுத்த தெரு முனையில் உள்ள நாவிதன் கடைக்கு தினமும் சென்று தனது முடிக்குச் சாயம்போட்டுக் கொள்வார். கான்டோலோவில் இளைஞன் போல் பாவித்த வயோதிகனை ஒத்ததாக அச்செயல் இருந்தது. வெனிஸில் வெப்பம் சுட்டெரித்த வேளையிலும் கூட டாட்ஜியோவின் பின்னால் அலைவதை அவர் விட வில்லை. வெனிஸ் நகரத்தின் மையப் பகுதியில் அவரது பார்வையிலிருந்த டாட்ஜியோ தொலைந்துபோனான். அவர் சோர்ந்துபோனார். தாகம் வறண்டிழுக்க, தாக சாந்திக்காக கனிந்து நைந்த ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கி உண்டார். சில நாட்கள் கழித்து, அஸ்ஹென்பெச் ஹோட்டலின் முகப்புக்கு செல்கிறார். அவரது உடல் நிலையில் சோர்வையும், நலமின்மையையும் உணர்ந்தார். அப்போது அங்கு அந்த போலந்துக் குடும்பத்தை கண்டார். மதிய உணவுக்குப் பின் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதையும் அறிந்துக் கொண்டார். அஸ்ஹென்பெச் அங்கியிருந்து கீழிறங்கி கடற்கரைக்கு செல்கிறார். அங்கு அவர் வழக்கமாக அமரும் மேஜை நாற்காலியில் அமர்கிறார். அங்கு டாட்ஜியோ தன்னை விட வயதில் சற்று மூத்த பையனுடன் இருக்கிறான். இரு சிறுவர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அதில் டாட்ஜியோவின் கை வலுப்பெறுகிறது. பிறகு கோபத்துடன் அவனிடமிருந்து விலகிச் செல்கிறான். அஸ்ஹென்பெச் நிற்கும் பகுதியின் ஊடாகச் செல்கிறான். அப்போது கடலை பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனைச் சற்று திரும்பிப் பார்த்தார். அஸ்ஹென்பெச்சை பொறுத்தவரையில் அவனிடமிருந்து சமிக்ஞைகள் இருந்தால் மட்டுமே பின் தொடரவும், மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் எண்ணிருந்தார். அந்த எண்ணத்தோடு நாற்காலியில் போய்ச்சாய்ந்தார். சில நிமிடங்களில் அஸ்ஹென்பெச் மூர்ச்சையாகிறார். அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரின் மரணம் பற்றிய செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.சிறப்புமிக்க கலைஞருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.தனது லட்சியம் நிறைவேறாமலேஅஸ்ஹென்பெச்அமரர் ஆனார்.
மரணத்தடம் குறுநாவல்,கிரேக்க புராணத்தின் அடிப்படையில் கட்டமைப்பட்டதாகும். அறிவு மற்றும் பகுத்தறிவுக்கான கடவுளான “அப்போலா(APOLLO),” போல் அஸ்ஹென்பெச் கதாபாத்திரத்தை தாமஸ் மன் படைத்திருந்தார். உணர்ச்சி மற்றும் பகுத்தறிவுக்கு உடன்படாது உணர்வுகளின் அடிப்படையில் செயல்படும் கடவுளான “டையானிசஸின்” சக்தியை அஸ்ஹென்பெச் மறுதலித்திருந்த பட்சத்தில், அவரை அழிப்பதற்காகவே டையானிசஸ் வெனிஸ் வரை பின் தொடர்கிறான். பல்வேறு தருணங்களில் அவரிடம் குறுக்கிடும் செந்நிற முடிக் கொண்ட நபர்கள் டையானிசஸின் சீடர்கள். கஸ்டவ் வோன்அஸ்ஹென்பெச் என்ற கதாப்பாத்திரத்தை தாமஸ் மன் ஜெர்மன் கவிஞரான “ஆகஸ்ட் வோன் பிளாட்டனின்,” உந்துதல் கொண்டு படைத்திருந்தார். அந்த கவிஞர் ஓரின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்ததாகும். அவரை உந்துதலாகக் கொண்டு தான் தாமஸ் மன், சிறுவன் மீது தீரா காதல் கொள்ளும் அஸ்ஹென்பெச் பாத்திரத்தைப் படைத்துள்ளார். அந்த பிதற்றல், பித்து மொழியாக எழுத்து வடிவம் பெற்று, சூழ்வெளி தவிப்பை எய்திக் கொண்டிருந்தது. கடற்கரை பிரதேசத்தில் அவன் திரிந்த இடமெல்லாம் அஸ்ஹென்பெச்சின் தடமும் ஆழப் பதிந்துக் கிடக்கிறது. அதித உணர்ச்சி பிரவாகத்துள் அவர் ஆட்படுகிறார். டாட்ஜியோ என்ற அந்த சிறுவன் அவருக்கு ஒரு விந்தையாவனாகவும், காதலின் பிம்பம் போலவும், ஏன் ஒரு கடவுளாகவும் காட்சித் தருகிறான். அவன் மீதுள்ள காதலிருந்து விடுபட எண்ணுகிறார். அவரால் முடியவில்லை. மரணம் சம்பவிக்கும் வரை அவரிடமிருந்து கொண்டிருந்த மோகம் விடுபட்டு போகவில்லை. தாமஸ் மன் 1911 ஆம் ஆண்டு விடுமுறையை கழிக்க வெனிஸ் சென்றிருந்த போது இந்த நாவலைப் பற்றிய கரு உருவானதாக அவரது மனைவி காட்டியா நினைவுப்படுத்தினார். இந்த நாவலானது சிறுவன் ஒருவனிடம் எழுத்தாளர் ஒருவர் கொண்டிருக்கும் உணர்ச்சி சற்றும் வக்கிரமாகாமல் தாமஸ் மன் வெளிப்படுத்திருக்கிறார். தாமஸ் மன்னின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக மரணத்தடம் நாவல் பதிவாகி உள்ளது. நாவலில் குறுக்கு வெட்டாக கிரேக்க புராண காதல் தெய்வங்கள் மற்றும் அவைகளின் சல்லாபங்கள் ஊடி வருவதும். நிறக் கூடுகள் கடலில் கலந்து, கரைந்து நேர் கோட்டற்ற களமாக நாவலில் பதிவாகி உள்ளது. பல்வேறு உலகளாவிய விருதுகளைப் பெற்ற தாமஸ் மன்னுக்கு 1929 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கபட்டது.

07.07.2008 க. செண்பகநாதன்

முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா


முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா - உபாலி

முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா / © உபாலி / கவிதைகள் / முதல் பதிப்பு : நவம்பர் 2008 / அட்டை வடிவமைப்பு : தி. முரளி / வெளியீடு : கண்ணி பதிப்பகம், 17 B, தென் வெட்டுக்காரத் தெரு, தஞ்சாவூர்-613 001 /செல்: 9894931312

சுரோணித வனத்தை முன் வைத்து

“எனது பிடில் ஓய்வின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது,”
(மொசார்ட்)


எல்லையற்ற தானிய வயல்களில் தானியங்கள் பொறுக்கியவாறு ரூத்தின் சரித்திர தொடர்ச்சியாகவும், பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கும் புத்த நீட்சியாகவும் புத்தக அடுக்குகளின் எல்லையற்ற சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கின்றன. மொழியின் அமைப்பை ஏற்றுக் கொண்ட பின் அர்த்தம் மரணித்து விடுகிறது. நேர் கோடற்ற எழுத்தின் ஊடாக பயணிக்கும் பிரதி தேவதைகளின் வெளிகளுக்குள் நவம் கொள்கிறது. சுரோணித வனத்தில், சிதைந்த தாராசுரம் கல்வெட்டுகளில் அமிழ்ந்துகிடக்கும் கல்தச்சன் கடை ஆயுதத்திலிருந்து செதுக்குளி சப்தம் இன்னும் அகண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காற்றுவெளியில் அதுவே இன்னும் இன்னிசையாகவும் கமழ்ந்துக்கொண்டிருக்கிறது. சமணர்களையும் பௌத்தர்களையும் கொன்று குவித்த அதே கௌடில்யர்களின் கோர நகங்களின் அகோர பசி இன்றும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சீவக சிந்தாமணியில் நெற் கதிர்களை தங்களது பிறையுயிர் கண்ணிமைகள் கொண்டு அறுக்கும் பெண்டிர்களின் அறுவடை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரமிளின் எல்லையற்ற சிறகுகள் எழுதப்படாத பக்கங்களில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் கூற வந்தவைகளுக்கு மொழியின் போதாமை இருக்கும்பட்சத்தில் வேறு வழிகளை காண வேண்டியுள்ளது. அத்தகையது உருவகமாகவோ, சங்கேதமாகவோ அல்லது குறியீடாகவோ இருக்கலாம். இசை மற்றும் சிற்பம் போன்றது தான் அது என்கிறார் போர்ஹே. லீனியரின் தோற்ற உருக்கள் சிதையுற்று நேர்கோடற்று விரியும்போது வெளியும் எல்லை யற்றதாகிறது.
ஆதி மனிதன் முதலில் பேசத் தூண்ட, உணர்ச்சியே பிரதான மாக இருந்தது. அப்போது அவன் தனது வெளிப்பாடுகளை உருவங்களில் வழியே வெளிக்காட்டினான். இதுவே மொழியின் ஜனனம். வடிவ மொழி முதலில் தோன்ற, அதன் பின்னரே அர்த்தம் பரிணமித்தது. அத்தகைய சூழல் அந்தந்த பொருட்களின் உண்மை சொரூபகங்கள் கொண்டே உணரப்பட்டதாகும். முதலில் ஜனனம் பெற்று, பேசப்பட்ட கவிதை நீண்ட காலம் வரை வாத ஆதாரமின்றியே புழக்கத்தில் இருந்தது.
உரத்து பேசுவதோ அல்லது புலம்புதோ அல்லது சுவிஷேச புத்தகத்தினை போல் உருகி, உருகி பிரார்த்திப்பதும். உருகி காதல் செய்வதும் கவிதையல்ல. இப்படியாக ஒரு சாராரும் மற்றும் சிலர் தத்துவ கூச்சலும், நியூஸ் பேப்பர் வாசிப்பு தன்மைகொண்ட எழுத்துகளுமாக பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
“புரிதல்” என்ற ஒற்றைத் தன்மையை சுற்றியே கவிதைகள் எழுதப்படும் பட்சத்தில், அத்தகையது பாசிசத்திற்காக வழி கோலல். புரிதல் என்பது மிக பயங்கரமான வாதம். நுண்மைக்கு எதிரானது. அத்தகையது தான் பாசிசம். நவீனத்துவ சிந்தனைப் போக்கை மறுதலித்தும், காலவதியாகியும் உள்ள சூழலில், அதனை தொடர்ந்து வழிமொழிந்தவாறு இயங்குவது உகந்ததல்ல.
“எது மௌனமாக இருக்கிறதோ அது பேச வைக்கப்படுகிறது. அப்படி பேசவைப்பதே மொழி. ஆக மொழியின் உள்ளுமை (Being), ஆளுமை பேச வைக்கப்படுகிறது. அப்படிப் பேசுகிற பொருளே கவிதை,” என்கிறார் நாகார்ஜூனன். மனிதனின் வளர்ச்சிக்கேற்பவும், தேவைக்கேற்பவும் மொழி பெரிதும் மாறுப்படுகிறது, அதனை வளைத்தெடுக்கவும், உடைக்கவும் அமைப்பியல் மற்றும் உத்தர-அமைப்பியல் கோட்பாடுகள் வழி காண்கின்றன. அதற்கான அவசியமும் உள்ளது. பூக்கோவின் உளபகுப்பாய்வுக் குறித்த கருத்துடன் ழாக் டெரிடாவும் ஒத்துப் போகிறார். பித்த மொழி குறித்தும், அதையடுத்து வெளிப்படும் குழந்தையையத்த(child like innocence) மனநிலையே இலக்கியத்திற்கான இடம் ஏன்கிறார் டெரிடா.
உலகத்தைப் பற்றிய கதையாடல் என்பது எல்லையற்றது என கூறுகிறார் பார்த். நேர் கோடற்ற எழுத்து என்பது பன்முகம் கொண்டது, அத்தகைய நிலையில் ஒற்றை பரிணாம பொருள் (meaning) என்ற போக்கு முற்றிலும் அபத்தமாகிறது. அதனால் படைப்பாளி வழக்கமான கட்டமைப்பிலிருந்து மீற வேண்டிய கடப்பாடு அவசியமாகிறது.
சுரோணித வனத்தில், பைபிள் பிரதிகள் ஊடிச் செல்லும் போது, அந்தந்த பிரதிகளின் ஊடாகவே பெரும் கதையாடல்கள் தகர்வுக்கு உள்ளாகின. கெயின், ஏபல், ரூத், ஆதாம், ஏவால் உட்பட பைபிள் பிரதிகள் தங்களது நிலைகளிலிருந்து பிறழ்கின்றன.
குழந்தையிடம் ஒரு வித மாயை தன்மை ஊடாடுவதும், அத்தகைய புராணிகத்தன்மை கவிஞர்களோடு நெருக்கமான தொடர்பை உடையது. அவர்கள் கொண்டிருக்கும் மாயை தான் படைப்புத் திறன் கொண்டது. அத்தகைய புனைவு கட்டற்ற பாய்ச்சல். அந்த கட்டற்ற தன்மையே நேர் கோட்டுடனான தொடர்பை வெட்டக்(disjunction)கூடியது. ஏனென்றால் குழந்தைகளின் புராணிகம், பெற்றோர்கள் கொண்டிருக்கும் சமயவாத கூட்டு நம்பிக்கைக்கு நேர் எதிரானது.
உருவகம்(metaphor) என்பது குறி(sign) மற்றும் குறிப்பீடு(signified)‚க் க்கும் இடையே உள்ள தொடர்பை கொண்டது. அத்தகைய இணைப்பு என்பது அந்த பொருளுக்கும், அதன் மீதான செயல்பாடு குறிந்த கருத்துக்கும் அடிப்படையிலேயே அமைந்ததாகும். உருவகத்தை புரிந்துக் கொள்ளுதல் என்பது குறியீட்டாரின் செயல்பாட்டில் உள்ள வெளிப்பாட்டுடன் உள்ள அர்த்தம் மற்றும் கருத்துருவம் கொண்டே உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
“கவிதைமொழியின் தர்க்கம், பொதுவாகப் புழங்கும் பேச்சின் தர்க்கத்திலிருந்து மாறுபடுகிறது. நவீன கவிதையில் பேச்சையே கவிஞன் கையாண்ட போதிலும் வரிசைப்பாடான அடுத்தடுத்து நிகழ்வும் பேச்சின் தர்க்கம் கைவிடப்படுகிறது. .. சாரமற்ற செய்தித் தாள்களின் உரைநடை, வியாபாரக் கடிதங்களின் மொழி, அரசாங்க அலுவலக ஆவணங்களின் சவத்தன்மையான உரைநடை போன்றவற்றிலிருந்து கவிதையின் மொழி,(அதன்) உயிர்ததும்பும் இயக்கத்தின் காரணமாக, வேறுபடுகிறது. குழந்தைப் பருவத்தில் நம்மால் ஸ்வீகரிக்கப்பட்ட, நமக்குத் தரபட்ட மொழி, சிந்தனை சக்தியற்றதாக இருக்கிறது.... எனவே சூட்சும மொழிகள் பிறகின்றன. அவற்றில் இங்கு நம் கவனத்துக்கு முக்கியமான இலக்கிய மொழியானது, தனித்து இயங்குவதோ வெற்றிடத்திருந்து பெறப்படுவதோ அல்ல. பேச்சு மொழியிலிருந்தே பெறப்படுகிறது.
புரியாத்தன்மை என்பது பிரதானமாய் கவிஞனிடத்தில் இல்லை. மாறாக வாசகர்களாகிய நம்மிடம் தான் உள்ளது. மேலோட்டமாகவும் துல்லியம் இழந்த வகையிலும் நமது
தெளிவும் தர்க்கமும் இருக்கின்றன.....” என பிரம்மராஜன் கூறுகிறார்.
“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்று மவ் வியோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண்சாணது வாகுமே”
(திருமந்திரம்:448)
Within the chain of supplements, it is difficult to separate writing from onanism (of Grammatology) எழுத்தின் தொடர்இணைவு போக்கு குறித்து டெரிடா குறிப்பிடும் போது பாலியல் உறுப்புகளுடன் கூடிய இன்ப நிலையோடு குறிப்பிடுகிறார். இதனை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், சுரோணித வனம் குறித்து எழுந்த விமர்சனமே, வாசிப்பவர்கள் இதனை கொண்டு கவிதையை அணுகுவதே நல்லது.

7. 11. 2008 உபாலி(க. செண்பகநாதன்)

Wednesday, 17 June 2009


உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை- க. செண்பகநாதன்
உலகமயமாதல் குறித்து விஷயத்தில் பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. உலகமயமாதல் என்றால் நாடுகளுக்கிடையே எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளித்து முதலீடு செய்யப்படும் முறைமை ஆகும். உலகமயமாதல் உடைப்படும் காலகட்டத்தை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு இது புதிதாக வந்த ஒன்று என்றாலும் இதன் ஆதி அந்தம் பல்வேறு முறைகளில் வேவ்வேறு நாடுகளில் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது. கடந்த 1944 ஆம் ஆண்டு இதன் போக்கு இருந்ததாக கண்டறியப்பட்டாலும் 1981 ஆம் ஆண்டில் தான் பொருளாதார நிபுணர்கள் உலகமயமாதல் என்ற சொல்லாடலை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக இதன் செயல்பாடு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது பொதுமை படுத்த முடியாது. இந்தியாவில் 1990களின் தொடக்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன் விளைவால் எஃகு, மருந்து பொருள், பெட்ரோலியம், ரசாயனம், ஜவுளி, சிமெண்ட், சில்லறை வணிகம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடு குவியத் தொடங்கியது. இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு. சுமார் 110 கோடி மக்களின் சந்தையை கருத்தில் கொண்டே முதலீடுகள் குவிந்தன. குறுகிய காலத்திற்குள்ளாகவே பெரும் முதலீடுகள் வந்து குவிந்தன. அத்தகையது நீடித்த வளர்ச்சியாக அமையவில்லை என்பது இப்போது நிரூபனம் ஆகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாதலால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்ளோடு போட்டிப் போட முடியாமல் பெரும் இழப்புகளை சந்தித்தன. உற்பத்தித் துறை, மருந்து, ரசாயனம், எஃகு போன்ற துறைகளில் ஏராளமானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது.
உலமயமாதல் இவ்வுலகத்திற்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்தியுள்ளது. வறுமை அதிகரித்தும், சமச்சீரற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு மக்களை ஆட்படுத்தியும், அநீதியை ஏற்படுத்தியும், காலகாலமாக கடைப்பிடித்து வந்த கலாச்சாரதிற்கு ஊறு விளைவித்தும், இன்னும் பல உலகலாவிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகமயமாதலினால் (ஒரு நாட்டிற்குள்ளாகவே) வருமான ஏற்றத் தாழ்வுகள் பெரியளவில் நிகழ்ந்திருப்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள்(120 கோடி மக்கள்) நாள் ஒன்றுக்கு 1 டாலர்(அதாவது இந்திய ரூபாய்க்கு ரூ.50 ) மட்டுமே வருமானமாக பெற்று வருவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் சுமார் 83 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாரிப்பதாக அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எந்த கட்சியோ எந்த அமைப்பின் சார்பாகவோ எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அல்ல. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை.
இப்போது உலக அளவில் கிடைக்கக் கூடிய ஆண்டு சராசரி வருமானத்தை பங்கிட்டுக் கொள்பவர்களின் விழுக்காட்டினை காண்போம்:

ஒட்டுமொத்த மக்களில் பயன்பெறுவோரின் மொத்த வருவாயில்
விழுக்காட்டளவில் - நிலை - விழுக்காட்டளவு

20% முதல் நிலை பணக்காரர்கள் - 82.7%
20% இரண்டாம் நிலை பணக்காரர்கள் - 11.7%
20% மத்திய தர மக்கள் - 2.3%
20% ஏழை மக்கள் - 1.4
20% மிகவும் ஏழைகள் - 1.2%
இந்த கணக்கு வெறும் எண்களால் கொண்டது மட்டும் அல்ல. கோடான கோடி மக்களின் சதைத் துளி. அந்த சதைத் துளியைத் தான் பங்குப் போட்டுள்ளது இன்றைய உலகமயமாதல். உலக வங்கி மற்றும் அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கைகள் இதை துள்ளியமாக கொடுத்திருக்கின்றன. இந்த கணக்கை பார்க்கும் போது மற்றொன்றும் தெளிவாக புலப்படுகிறது. அது உலகில் உள்ள 120 கோடி பரம ஏழைகளில் 84 கோடி இந்தியர்கள். அதாவது உலக அளவில் 70 விழுக்காட்டுக்கு மேல், இந்தியா அளவில் 80 விழுக்காடு மக்கள் கால் வயிற்று சாப்பாட்டுக்கே வக்கற்றவர்களாக உள்ளனர். இன்னொன்றும் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க கொள்ள வேண்டும் உலக அளவில் பணம் படைத்தவர்களாக இந்திய பனியாக்கள் திகழ்கின்றனர். இதிலிருந்தே உலக அளவில் இந்தியாவில் தான் சுரண்டலுக்கு எஜமாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள 10 முதல் நிலை செல்வந்தர்களில் 4 பேர் இந்தியர்கள். இந்தியாவின் முதல் பத்து செல்வந்தர்கள்.

இந்திய பணக்கார்ர்கள் - இனம் - சொத்து மதிப்பு

லட்சுமி மிட்டல் - ராஜஸ்தான் மார்வாரி(பனியா) - 160000 கோடி
முக்கேஷ் அம்பானி - குஜராத்திய பனியா - 100000 கோடி
அனில் அம்பானி - குஜராத்திய பனியா - 90000 கோடி
அசிம் பிரேம்ஜி - முஸ்லீம் - 85000 கோடி
குஷல் பால் சிங் - உத்தர பிரதேச ஜாட் - 50000 கோடி
சுனில் பாரத் மிட்டல் - தந்தை மார்வாரி, தாய் ஷத்திரிய - 47500 கோடி
குமாரமங்கலம் பிர்லா - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடி
ருயா சகோதரர்கள் - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடி
ரமேஷ் சந்திரா - ஜெயின்(பனியா) - 32000 கோடி
பல்லோன்ஜி மிஸ்டிரி - பார்சி - 28000 கோடி
ஆதி கோத்ரேஜ் - பார்சி 20000 கோடி

இவ்வாறாக 100 வது இடம் வரை வரிசைப்படுத்தினாலும் 90 சதவீத செல்வந்தர்கள் பனியா வகுப்பினராக தான் உள்ளனர். அதற்கென்று ஒரு புத்தகம் தான் வெளியிட வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை. திருடர்களுக்கெல்லாம் புத்தகம் போட முடியாது. இவர்கள் ஜாக்கிரதை என்று போஸ்டர் தான் அடித்து ஒட்ட முடியும். சமூகத்தில் இரு துருவங்களாக, எட்ட முடியாத தூரத்தில் இரு பிரிவினரின் பட்டிலையும் பார்த்திருப்பீர்கள். இது தான் உலகமயமாதலின் சாதனை. மனிதனை பணத்திற்காக பேதலிக்க அலைவிட்டுள்ளது உலகமயமாதல்.
இந்த உலகமயமாதலின் கட்டுப்படற்ற வர்த்தகம் தேவையில்லாத யூக வணிகத்தின் மீது பந்தையம் வைத்து விளையாடுகிறது. இன்றைய நிலையில் அது பரிதாபத்திற்கு உரிய நிலைய அடைந்துள்ளது என்பது தான் உண்மை. உலகமயமாதல் காலவதியாகும் நிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டினர்க்கே வேலை என்ற முழக்கத்தை உரக்க எழுப்பியுள்ளனர். இத்தகைய நிலையில் உலகமயமாதலின் நோக்கம் அடிப்பட்டு போகிறது. அது எந்த வித புரட்சியும் இன்றி தன்னாலேயே மடிந்து விட்டது.
உலகமயமாதல் கொள்கையினால் நேர்ந்த விளைவுகள் குறித்து பார்ப்போம்:

1. நாட்டின் எல்லைகளை கடந்து உலகலாவிய சந்தையை ஏறபடுத்தியது. அதன் விளைவால் நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனைத்து விதமான பொருள்களும் முழுமையாக கிடைத்து வந்தன.
2. பெரும் நிறுவனங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், பிராந்தியங்களுக்கும் வணிக சந்தைகளுக்கும் தங்கு தடையின்றி ஏராளமான நிதிகள் கிடைக்கப் பெற்றன.
3. பொருள்களும் முதலீடுகளும் பரிமாற்றத்தின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் உலகலாவிய பொது சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது.
4. பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல் துறையிலும் உலகமயமாதல் வியாபித்து, உலகலாவிய அரசாங்கமாக ஒற்றைத் தனைமை ஏற்படுத்தியது( இது தான் மிக முக்கியமானதும் மிக ஆபத்தானதும் கூட, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிகார மீறலை கண்டிருப்பீர்கள். அமெரிக்காவில் மட்டும் புஷ்ஷோ அல்லது பொருளாதார வீழ்ச்சியோ ஏற்பட்டிருக்காவிட்டால் படு பாதகமாக விளைவை உலகம் சந்திருக்க கூடும்.
5. உலகில் உள்ள கடகோடிக்கும் தகவல்கள் சென்றடைந்துள்ளது(இதைத் தான் தகவல் தொழிற் நுட்ப புரட்சி என்று கூறுகின்றனர். அதனால் என்ன பயன் கிராம்பபுறங்களில் வாழ்வாதாரம் சிதைந்து நகரங்களை நோக்கி மக்கள் புலம் பெயர்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கிறது. இதனால் கடைக்கோடி என்பதில் பொருளற்று போய் விடுகிறது).
6. காலச்சாரத்தைப் பொருத்தவரையில் ஒரு பொது தன்மை உருவாகி, நிலம் சார்ந்த பண்பாடு மற்றும் காலச்சாரம் சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரபரிய உற்பத்தி முறை மற்றும் அதை சார்ந்த தொழில் முனைவோரின் வாழ்க்கை பெரியளவில் பாதித்திருக்கிறது.
7. சூழலியலைப் பொருத்தவரையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற பொருளாதரக் கொள்கையில் மூலம் தேவையற்ற போக்குவரத்து அதிகரித்து, நுகர் கலாச்சாரம் பெருகி, நச்சு விளைவிக்கும் அமைசங்களின் உற்பத்தியால் புவி வெப்பம் பெருமளவு அதிகரிந்துள்ளது. இந்த பிரச்சனையை தனியரு நாடு சமாளித்து விட முடியாது. புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் உலகமயமாதல் அவசியப்படுகிறது.
8. போக்குவரத்தை பொருத்தவரையில் ஐரோபிய கார்களின் மவுசு குறைந்து, சாலைகளில் அமெரிக்க வகை கார்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தொழிற் நுட்பம் அதிகரித்து, போக்குவரத்துக்கான நேரம் குறைந்து, பயணிக்கும் கால நேரம் வெகுவாக குறைந்துள்ளது(இவ்வாறாக கூறுபடுவது அவ்வளவு உண்மையல்ல, இதிலிருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தை அமெரிக்க முதலாளித்துவம் மிஞ்சி விட்டதை அறிந்து கொள்ளலாம்)
9. சர்வதேச அளவில் கலாச்சாரப் பரிமாற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.(இது பற்றியான நீண்ட ஆய்வு கட்டுரை-”உலகமயமாதலும் வெகுஜன கலாச்சாரமும்” அடுத்த இதழில் வரவுள்ளது).
* இதனால் பன்முக கலாச்சாரம் என்ற பெயரில் பெரும் வணிகத்தன்மையோடு மேற்கத்திய இறக்குமதிகள் புகுந்துள்ளது. உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் SULM DOG MILLIONAIRE படத்தை கூறலாம், இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களையும், பிற நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட விருது, உலகில் அதிகமாக வாழும் இஸ்லாமியர்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டதாகும்.
* இத்தகைய கலாச்சார பரிவர்த்தையில் முக்கிய பங்கு வகிப்பது மேற்கத்திய கலாச்சாரமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
* பெருமளவிலான உல்லாச சுற்றுலா பயணம் அதிகரித்துள்ளது. அதன் மூலம் உலகலாவிய விபச்சாரம் முதன்மையடைந்துள்ளது. கடற்கரை உல்லாச விடுதிகள். பாலர் பாலியல், முதலியவைகள் அதிகரித்திருக்கிறது. இதில் முக்கிய பலிகடாவாகி இருப்பது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, பிரேசில், பிலிப்பென்ஸ் மற்றும் ஏனைய வறிய மற்றும் வளரும் நாடுகள்.
* இத்தகைய சுற்றுலா மையங்களாக கடற்கரையே அமைந்துள்ளதால் பாரம்பரிய மீனவர்களில் கிராமங்கள் அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் எழுந்து வருகின்றன. அதற்காக முதலில் மேற்கொள்ள படுவது தான் கடலோர சாலை அமைப்பு.
* இத்தகைய உல்லாச சுற்றுலா பயணிகளின் இச்சைகளுக்கு விருந்தளிக்க உறுதுணையாக இருப்பது தகவல் தொழிற் நுட்பம். குறிப்பபாக ஆர்குட், பேஸ் புக், யூ டூப், போன்ற இணையத்தளங்கள் உல்லாசம் தேடி வரும் பயணிகளுக்கு அலைச்சல் இல்லாமல் ஆட்களை பிடித்து தர ஏதுவாக இருக்கின்றன.
* கடலோர பீச் ரிசோட்கள் பெருக்கத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் பயன்பாடுகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். நான் கூற அவசியமில்ல்.
* இப்போது அதிகரித்து வரும் பேஷன் ஷோக்களையும் அறிந்து வைத்திருப்பீர்கள். மாடல்களை தேர்ந்தெடுக்க பெரும் முதாலாளிகளே. பரிசுகள் வழங்குவதும் அவர்களே. அதுவும் ஏதாவது உல்லாசத் தீவுகளில் தான் பரிசுகளை வழங்குவார்கள். இது குறித்தும் நான் விரிவாக எழுத அவசியம் இல்லை.
உதாரணத்திற்கு கூற வேண்டுமேன்றால் மும்பையில் தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல் போது வெளி வராத பல தகவல்கள் உள்ளன. பெரும் தகை கொண்ட ஊடகங்கள் மெல்லிய சிறகுகளை விரித்து வல்லிய விஷயங்களை வெளியிட்டன. பெரும் மதிப்புக்குரிய பல பெரும் முதலாளிகளின் நல்லாதரவுக் கொண்டு அவர்கள் வலியை தன்னடத்தையுடன் வெளியிட்டன. இதில் எவரையும் குறை கூறுவதற்கில்லை. அங்கு நடந்த கொலைகளில் பல மாடல் அழகிகளுடன் கூடிய தொழில் அதிபர்களிளை பற்றிய செய்திகளை வெளியிடாமல் மரியாதை காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10. கடைசியாக தகவல் தொழிற் நுற்பம் மற்றும் உலகலாலிய சட்டமுறைமைப்பற்றி பார்ப்போம்.
* இணையத்தளத்துடனான இணையப்பட்ட உலக அளவிலான தகவல் தொழிற் நுற்பம். தகவல் பரிமாற்றம். அதற்கான உள் கட்டமைப்பு. குறிப்பாக செல்பேசி, கடல் வழி பைபர் இழை கேபிள், சேட்டிலைட் தொடர்பு ஆகியவைகளை கூறலாம். (இவை அனைத்துமே வணிகம் சார்ந்தது என்பது தான் முக்கியம்)
* உலக பொதுமைக்கான காப்புரிமை சட்டம். அதன் கீழ் ஏழை நாடுகளை சுரண்டும் போக்கு அதிகரித்துள்ளது.
இவையனைத்தும் கொண்டு பார்க்கும் போது உலகமயமாதலினால் பெரும் தீங்க நடந்தேறியுள்ளது. இப்படியிருக்க நமது மன்மோகன் சிங்கை என்ன சொல்வது நீங்களை கூறுங்கள். தரகர் தானே. இவைகளுக்கு கடைசி காலம் வரை உறுதுணையாக இருந்து விட்டு பதவித் துறந்த பசியை மாமா என்று தான் அழைக்க வேண்டும்.
உலகமயமாதல் என்ற போர்வையில் உலாகாவிய பெருமுதலாளிகள் அனைத்து மூளையிலும் கடை விரித்துள்ளனர். இதனால் உள்ளுர் தொழில்கள் மற்றும் வறியப் பிரிவினர் எழுப்பும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஆக பெரும் சக்தியாக தலைகர்த்த அமெரிக்கா முனைந்துள்ளது. இனி உரிமைகள் குறித்து பேச முடியாது. அதை பெரும் ஊடகங்கள் வெளிப்படுத்த முடியாது. அப்படி செய்தால் அவர்களுக்கான விளம்பரம் உட்பட மற்ற உதவிகளும் நிறுத்தப்படும். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும். தீவிரவாத முத்திரை குத்தப்படும். பெருமுதலாளிகளால் சிறு சிறு ரவுடி கும்பல்கள் வளர்த்து விடப்படுவார்கள். என் ஜி ஓக்கள் மூலம் நேரக்கரம் நீட்டுவார்கள். அற்ப இலவசங்கள் வழங்கப்படும். மக்களுக்கு அற்ப உல்லாசங்கள், மூளையை மழுங்கச் செய்யும் கலியாட்டங்கள் நடத்தப்படும். ஊடாகங்கள் மூலமாக முக்கியமான பிரச்சனைகளை மறைத்து உப்பு சப்பு இல்லாத விஷயங்கள் பெரிதாக வெளிகாட்டப்படும். இன்று தமிழகத்தில் மிக பெரிய கார்பிரேட் சிந்தனையாளராக மூத்திர கலைஞர்( எவ்வளவு முயன்றும் அச்சு பிழை திருத்த முடியாதற்கு வருந்துகிறேன்) மூத்த கலைஞர் திகழ்கிறார். அவரது கட்சி கார்பிரேட் கழகமாக மாறியுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர்களாக ஸ்டாலின், தயாநிதி, அழகிரி, கனிமொழி, தயாளு, ராசாத்தி மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். கழக கார்ப்பிரேட் உடன்பிறப்புகள் அங்காங்க பகுதி மேலாளர்களாக இருப்பார்கள். கட்சி தொண்டர்கள் கம்பெனி வளர்ச்சிக்காகவும், வருவாய்க்காவும் பாடுபடுவார்கள். சம்பளமாக தேர்தலின் போது பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் வழங்கப்படும். கம்பனி சுட்டிக்காட்டும் ஆட்களை அடித்து துவேஷம் செய்பவர்களுக்கு கூடுதல் போனஸாக பதவிகள் வழங்கப்படும்.
இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. உங்களுக்கு இதை கொண்டு இலங்கையை உற்று நோக்குங்கள் புலப்படும். விடுதலை போராட்டம் நசுக்கப்படுவதும். இந்திய வட்டார அடியாளாக ராஜபட்சே உருபெருவதும் நீங்கள் அறிவீர்கள். உலக முழுவதும் இது தான் நடைப்பெறுகிறது. இது தான் கார்ப்பிரேட் கலாச்சாரம். இந்தியாவில் இத்தகைய விஷயத்தில் முதன்மையாக திகழ்வது மேற்கு வங்காளம் என்பது மிகவும் உன்னதம். டாடாவுக்காக அடியாளாக மாறிய புத்த தேவ், அங்கு நடந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள்.
இது தான் உலகமயமாதல், இந்த சிந்தாந்ததை தான் மன்மோகன் பயின்று மாக அறிஞரானார். பிறகு பார் பேற்றும் உலக வங்கிக்கு போனார்.



எல்லையற்ற தாணிய வயல்களில் தாணியங்கள் பொறுக்கியவாறு ரூத்தின் சரித்திரத்தின் தொடர்ச்சியாகவும், பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கும் புத்த நீட்சியாகவும் புத்தக அடுக்குகளின் எல்லையற்ற சிறகுகளை விரித்து பறந்துக் கொண்டிருக்கின்றன. மொழியின் அமைப்பு ஏற்றுக் கொண்ட பின் அர்த்தம் மரணித்து விடுகிறது. நேர் கோட்டற்ற எழுத்தின் ஊடாக பயணிக்கும் பிரதி தேவதைகளின் வெளிக்குள் நவம் கொள்கிறது. சுரோணித வனத்தில், சிதைந்த தாராசுரம் கல்வெட்டுகளில் அமிழ்ந்துக்கிடக்கும் கல்தச்சன் கடை ஆயுதத்திலிருந்து செதுக்குளி சப்தம் இன்னும் அகண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காற்றுவெளி அதுவே இன்னும் இன்னிசையாகவும் கமழ்ந்துக் கொண்டிருக்கிறது. சமணர்களையும் பௌத்தர்களையும் கொன்று குவித்த அதே கௌடில்யர்களின் கோர நகங்களின் அகோர பசி இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. சீவக சிந்தாமணியில் நெற் கதிர்களை தங்களது பிறையுயிர் கண்ணிமைகள் கொண்டு அறுக்கும் பெண்டீர்களின் அறுவடை இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பிரமிள்ளின் எல்லையற்ற சிறகுகள் எழுப்படாத பக்கங்களில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் கூற வந்தவைகளுக்கு மொழியின் போதாமை இருக்கும்பட்சத்தில் வேறு வழிகளை காண வேண்டியுள்ளது. அத்தகையது உருவகமாகவோ, சங்கேதமாகவோ அல்லது குறியீடாகவோ இருக்கலாம். இசை மற்றும் சிற்பம் போன்றது தான் அது என்கிறார் போர்ஹே. லீனியரின் தோற்ற உருக்கள் சிதையுற்று நேர் கோட்டற்று விரியும் போது வெளியும் எல்லையற்றதாகிறது.
ஆதி மனிதன் முதலில் பேசத் தூண்ட, உணர்ச்சியே பிரதானமாக இருந்தது. அப்போது அவன் தனது வெளிப்பாடுகளை உருவங்களில் வழியே வெளிக்காட்டினான். இதுவே மொழியின் ஜனனம். வடிவ மொழி முதலில் தோன்ற, அதன் பின்னரே அர்த்தம் பரிணமித்தது. அத்தகைய சூழல் அந்தந்த பொருட்களின் உண்மை சொருபகங்கள் கொண்டே உணரப்பட்டதாகும். முதலில் ஜனனம் பெற்று, பேசப்பட்ட கவிதை நீண்ட காலம் வரை வாத ஆதாரமின்றியே புலக்கத்தில் இருந்தது.
உரத்த பேசுவதோ அல்லது புலம்புதோ அல்லது சுவிஷேச புத்தகத்தினை போல் உறுகி, உறுகி பிரார்த்தித்திப்பதும். உறுகி காதல் செய்வதும் கவிதையல்ல. இப்படியாக ஒரு சாராரும் மற்றும் சிலர் தத்துவ கூச்சலும், நியூஸ் பேப்பர் வாசிப்பு தன்மைக் கொண்ட எழுத்துகளுமாக பக்கங்களை நிறப்பிக் கொண்டிருக்கின்றனர்.
“புரிதல்” என்ற ஓற்றைத் தன்மையை சுற்றியே கவிதைகள் எழுதப்படும் பட்சத்தில், அத்தகையது பாசீசத்திற்காக வழி கோலல். புரிதல் என்பது மிக பயங்கரமான வாதம். நுண்மைக்கு எதிரானது. அத்தகையது பாசிசம். நவினத்துவ சிந்தனைப் போக்கு மறுதலித்தும், காலவதியாகி உள்ள சூழலில், அதனை தொடர்ந்து வழிமொழிந்தவாறு இயங்குவது உகந்ததல்ல.
“எது மௌனமாக இருக்கிறதோ அது பேச வைக்கப்படுகிறது. அப்படி பேசவைப்பதே மொழி. ஆக மொழியின் உள்ளுமை (ஙிமீவீஸீரீ), ஆளுமை பேச வைக்கப்படுகிறது. அப்படிப் பேசுகிற பொருளே கவிதை,” என்கிறார் நாகாஜூனன். மனதனின் வளர்ச்சிக்கேற்பவும், தேவைக்கேற்பவும் மொழி பெரிதும் மாறுப்படுகிறது, அதனை வளைத்தெடுக்கவும், உடைக்கவும் அமைப்பியல் மற்றும் உத்தர-அமைப்பியல் கோட்பாடுகள் வழி காண்கின்றன. அதற்கான அவசியமும் உள்ளது. பூக்கோவின் உளபகுப்பாய்வுக் குறித்து ழாக் டெரிடாவும் ஒத்துப் போகிறார். பித்த மொழி குறித்தும், அதையடுத்து வெளிப்படும் குழந்தையை யத்த (நீலீவீறீபீ றீவீளீமீ வீஸீஸீஷீநீமீஸீநீமீ) மனநிலையே இலக்கியத்திற்கான இடம் ஏன்கிறார் டெரிடா.
உலகத்தை பற்றிய கதையாடல் என்பது எல்லையற்றது என கூறும் பார்த். நேர் கோடற்ற எழுத்து என்பது பன்முகம் கொண்டதாய், இருக்கிறபடியால் அதற்கு முழுமையான அர்த்தம் என்று ஒன்றுமே கிடையாது எனவே இலக்கியவாதி என்ற அளவில் ஒருவன் உடைத்துக் கொள்ள கடமைப்பட்டவனாகிறான். எழுத்து, நெய்துவிட்ட துணியைப் போன்ற ஊடுபாவு-அமைப்பைக் கொண்டதாகும். எனவே எழுத்தை அதன்போக்கில் அழைஅழையாகப் பின் தொடர்ந்து செல்ல முடியும். துணியைப் பிரித்துப் பார்க்க முடியும். அனால் அந்த இழைக்கு அடியில் ஏன்று ஒன்றும் கிடையாது. அங்கு இருப்பது வெற்றிடம் தான்.

Thursday, 16 April 2009

மரணத்தடம்!

தாமஸ் மன் 1875ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள லூபெர்க் நகரத்தில் பிறந்தார். செனட்டராக இருந்த ஜேகனன் ஹெயின் ரிச்க்கு இரண்டாவது மகனாக தாமஸ் மன் பிறந்தார். அவரது தந்தை தானிய வியாபாரியாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி ஜூலியா டி சில்வா புரூகன்ஸ் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்ற போதிலும் அவரது மூதாதையர்கள் ஜெர்மன் வம்சாவளிக் கலப்பினர். ஜூலியாவிற்கு ஏழு வயதாக இருந்த போது அவர்களது குடும்பத்தினர் ஜெர்மனில் குடியேறினார்கள். தாமஸ் மன் அவர்களது தாய் ரோமன் கத்தோலிக்க இனத்தையும், தந்தை லுத்தேரியன் நம்பிக்கையையும் கடைப்பிடித்து வந்தனர். அவரது தந்தை 1891 ஆம் ஆண்டு காலமானார். அதன் பிறகு அவர்களது வணிகத் தொழில் நீர்த்துப் போனதினால் முன்ச் நகரத்திற்கு குடிப்பெயர்ந்தார்கள்.

லுபெர்க் ஜிம்னாஸியத்தில் அறிவியல் பிரிவில் இணைத்துக் கொண்டு பயிலத் தொடங்கியனார். அதன் பிறகு தாமஸ் மன், தனது பெரும்பான்மை கல்வியை முன்ச் பல்கலைகழகத்திலேயே செலவளித்தார். அங்கு அவர் பத்திரிக்கை துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் கல்வி கற்றார். தனது பத்தொன்பதாவது வயதில் தாமஸ் மன், முன்ச்யில் ஜெர்மனிய ஆயுள் காப்பிட்டு நிறுவனத்தில் 1894 முதல் 1895 வரை பணியாற்றினார். பாலஸ்தீன் மற்றும் இத்தாலி நாடுகளில் தனது சகோதரர் ஹென்ரிச் மன் உடன் இருந்த காலத்தைத் தவிர்த்து முன்ச்யில் 1891-யிலிருந்து 1933 வரை அவர் வசித்து வந்தார். அவரது சகோதரர் ஹென்ரிச் மன், நாவலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு தாமஸ் மன் 1933 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்திற்கு இடம்பெயர்ந்தார். அப்போது ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சி நடந்துகொண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில் தாமஸ் மன்க்கு எதிராக அங்கு கருத்து உருவாக்கப்பட்டியிருந்தது.

அவர் 1833 ஆம் ஆண்டிலேயே வெளியேறினாலும் 1836ஆம் ஆண்டு ஹிட்லர் அரசாங்கத்தால் முறைப்படி நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பான் பல்கலைக்கழகம் அவருக்கு அளித்த டாக்டர் பட்டத்தை 1937ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. பிறகு 1946ஆம் ஆண்டு மீண்டும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாமஸ் மன் 1940ஆம் ஆண்டு அமெரிக்கக் குடிமகனானார். அப்போது 1941 முதல் 1953 வரை கலிபோர்னியாவில் உள்ள சான்த்தா மேனிக்கா என்ற இடத்தில் வசித்தார். இரண்டாம் உலக போருக்குப் பின் பல முறை ஐரோப்பாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டார். பிறகு ஐரோப்பாவில் தங்கிவிட்ட அவர், சுவிட்சர்லாந்தில் ஜூருச் நகரத்தில் 1955 ஆம் ஆண்டு காலமானார்.

தாமஸ் மன் தனது முதல் படைப்பினை சிறுகதையின் மூலம் தொடங்கினார். simplicissimus என்ற ஜெர்மனிய வார இதழுக்காக அவர் Little Herr Friedemann என்ற சிறுகதையினை எழுதினார். அது 1898 ஆம் ஆண்டு பிரசுரமானது. அதுவே அவரது முதல் படைப்பாகும். பிறகு அவர் ரோம் நகரத்தில் இருக்கும்போது, Buddenbrooks என்ற நாவலை எழுதத் தொடங்கிய அவர். அதனை 1901ஆம் ஆண்டு வெளியிட்டார். பிறகு 1903ஆம் ஆண்டு Tristan என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டார். அதையடுத்து Konigliche Hoheit (Royal Highness) என்ற நாவலை 1909ஆம் ஆண்டும், Confessions of Felix Krull என்ற நாவலை 1922 ஆம் ஆண்டும் எழுதினார். இதனிடையே 1913 ஆம் ஆண்டு அவர் எழுதிய குறுநாவல் வடிவமான Tod in venedig(Death In Venice) எழுதினார்.

மரணத்தடம் (Death in venice) என்ற குறுநாவல் முதன் முதலாக 1912 ஆண்டு ஜெர்மன் மொழியில் (Der tod in venedig) பிரசுரமானது. அதன் பிறகு 1925 ஆங்கிலத்தில் வெளியானது. மரணத்தடம் நாவலின் கதாநாயகன் கஸ்டவ் வோன் அஸ்ஹென்பெச் தனக்கு ஐம்பது வயது வரை பிரபலமான நாவலாசிரியனாக அறியப்படுகிறார். இளம் வயதிலேயே மணைவியை இழந்து வாழும் அஸ்ஹென்பெச், தன்னை ஓர் ஒழுக்க சீலராக கட்டமைத்துக் கொள்கிறார். இந்நாவல் ஒரு கல்லறையிலிருந்து தொடங்குகிறது. அங்கு அவர் செந்நிற முடியுடைய முரட்டு மனிதனைக் காண்கிறார். அஸ்ஹென்பெச்சை அவர் வன்மத்துடன் உற்று நோக்குகிறான். அவன் உற்று பார்ப்பதை அவமானமாக கருதிய அவர் அங்கிருந்து கடந்து செல்கிறார். பிறகு ஒரு தருணத்தில், சுற்றுப் பயணம் மேற்கொள்ள எண்ணுகிறார். அதையடுத்து வெனிஸ் செல்லச் திட்டமிடுகிறார். அதற்காக லிடோ தீவில் உள்ள ஹோட்டல் டெஸ் பைய்ன்ஸில், அறைக்கு முன் கூட்டியே பதிவுசெய்கிறார். அந்த தீவுக்கு நீராவிப் படகு மூலம் செல்கிறார்.

அங்கு வயதில் மூத்த ஒருவரைச் சந்திக்கிறார். அந்த மனிதரோடு ஆரவாரமிக்க இளைஞர் பட்டாளமும் பயணம் செய்தது. அந்த இளைஞர்களுக்கு இணையாகத் தன்னை காட்டிக்கொள்ள அந்த வயோதிகன், தன்னை இளைஞன் போல் பாவித்து, தலைக்கு சாயமிட்டும், பொய் பற்கள் கட்டியும் பகட்டேற்றியிருந்தான். அவர் ஒரு இளைஞன் என்று முதலில் நினைத்திருந்த அஸ்ஹென்பெச், பிறகு அவனது சுய ரூபத்தை அறிந்துகொண்டார். பிறகு ஒரு தருணத்தில் அஸ்ஹென்பெச் கான்டோலோ ஒன்றில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதனை செலுத்துபவனும் செந்நிற முடி கொண்டவனாக இருந்தான். “ உங்களை நல்ல முறையில் கொண்டு சேர்ப்பேன்,” என அவன் அவரைத் தொடர்ந்து வெறுப்பேற்றிக்கொண்டே இருந்தான். அவர் ஹோட்டலை அடைந்ததும், இரவு உணவின்போது உயர் வகுப்பு போலாந்து குடும்பத்தைக் கண்டார். அந்த குடும்பத்தின் அவருக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது.

அந்தக் குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். மாலுமிகள் உடுத்தக் கூடிய உடுப்பை அவன் அணிந்திருந்தான். மிக அழகாகவும் அவன் இருந்தான். அவனது பெயர் டாட்ஜியோ, அவனது சகோதரிகள் கன்னியாஸ்திரிகள் உடையில் இருந்தனர். அங்கிருந்த வெப்ப வானிலை மற்றும் ஈரக்காற்று அவரது உடலை பாதித்து நோயுற வைத்தது. அதனால் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த அவர், ஆரோக்கியமான இடத்திற்குச் செல்ல திட்டமிட்டார். அவர் புறப்படுவதற்கு எண்ணிய அந்தக் காலைபொழுதில் டாட்ஜியோவை பார்க்கிறார். அவன் மீது இனம் புரியாத உணர்வு அவருக்குள் மேலோங்கிறது. அதை விடுத்து ரயில் நிலையத்திற்குச் செல்கிறார். அங்கு அவரது பயணப் பேழை தவறுதலாக வேறு இடத்திற்குச் சென்றுவிடுகிறது. கோபம் கொள்வதுபோல் நடிக்கிறார். ஆனால் உள்ளூற மகிழ்கிறார். இனி நாம் இங்கிருந்து செல்ல வேண்டியிருக்காது என்று எண்ணியவாறு மகிழ்ச்சியுடன் மீண்டும் விடுதிக்குச் செல்கிறார். தனது மூட்டை முடிச்சுகள் வரும் வரை வெனிஸில் தங்கிவிடலாம் என மனதார எண்ணுகிறார். அங்கிருந்து போய் விடும் முடிவையும் மாற்றிக்கொண்டு விடுகிறார்.

சில நாட்களிலேயே டாட்ஜியோ மீதான அவரது ஆர்வம் மோகமாக உருபெருகிறது. அவனைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அவன் செல்லும் இடமெல்லாம் அஸ்ஹென்பெச் ரகசியமாக பின் தொடர்வதுமாக வெனிஸ் முழுவதும் சுற்றித் திரிந்தார். ஒரு மாலைப் பொழுதில் அவரை பார்த்து டாட்ஜியோ புன்னகைக்கிறான். அந்த புன்னகை, நார்சிசஸ் மலர் தன்னை நோக்கி எதிரொளிப்பதைப் போல் உணர்கிறார். உடனே அரவமற்ற பூங்களாவுக்குள் ஓடி “ நான் உன்னைக் காதலிக்கிறேன்” என மெதுவாக தன்னந்தனியே கூறிக் கொள்கிறார். ஒரு முறை, வெனிஸ் நகரத்தின் உட்பகுதியில் அவர் பயணம் மேற்கொள்கையில், சுகாதர வாழ்வுத் துறையினர் அறிவிப்பைக் காண்கிறார். அந்த அறிவிப்பில், செதில் மீன்கை உண்ண வேண்டாம் என்றும், வெனிஸ் நகரத்தில் இனம் புரியாத நோய் தொற்று பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் அருவருக்கதக்க நாற்றம் அந்நகரம் முழுவதும் வீசக் கண்டார். இருப்பினும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து திரிந்துக் கொண்டிருந்தார்கள்.

டாட்ஜியோ மீது இருந்த மோகத்தால் நோய் அபாயத்தை அவர் முதலில் கண்டுகொள்ளவில்லை. அப்போது தான் செந்நிற முடி வைத்திருந்த மூன்று நபர்கள் அவரைக் கடந்து சென்றனர். இந்த முறை அவரைக் கடந்து சென்றவர்களோ மூன்று தெரு பாடகர்கள் கொண்ட குழு, அவர்களில் ஒருவன் அஸ்ஹென்பெச்சைப் பார்த்த விதம் மரியாதைக் குறையானதாக இருந்தது. ஓர் இரவுப் பொழுதில் அவர் தங்கியிருந்த விடுதியில் அந்தக் குழுவினர் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அப்போது டாட்ஜியோ பால்கனியில் ஓரத்தில் சாய்ந்தாவறு நின்றிருந்தான். அவன் சாய்ந்திருந்த பாணி அழகுற இருந்தது. அப்போது அவன் மீது அவர் மோக பார்வையை வீசிக் கொண்டியிருந்தார்.

அடுத்ததாக அஸ்ஹென்பெச், தனது சுய கௌரவத்தை வெளிக்காட்டும் முகமாக செயல் பட முனைந்தார். நகரத்தில் அறிவிக்கப்பட்டியிருந்த எச்சரிக்கை அறிக்கைப் பற்றி டாட்ஜியோவின் தாயிடம் தெரிவிக்க முடிவு செய்தார். இத்தகைய நோய் சூழலுக்கு புழுதிக் காற்றே காரணமென்று கூறப்பட்ட வேளையில், வெனிஸ் நகரம் முழுவதும் காலரா பீடித்திருப்பதாக பிரிட்டிஷ் சுற்றுலா ஏஜென்ட் ஒருவன் தெரிவித்தான். இத்தகைய சூழ்நிலையில், டாட்ஜியோவின் தாயிடம் இதைத் தெரிவித்தால் அவன் இந்த விடுதி காலி செய்துவிட்டுச் சென்றுவிடுவான். தன்னை விட்டுத் தொலைந்துவிடுவான் என்பதை அவர் எண்ணும்போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓர் இரவுப் பொழுதில், டையமிசனின் சல்லாபக் காட்சிகளைக் கனவாக கண்டார். அத்தகைய கனவுகூட டாட்ஜியோ மீது அவர் கொண்டியிருந்த ஆலிங்க மோகத்தால் எற்பட்டது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. அதற்கு பின்னரும் வெளிப்படையாக அவனைத் தொடர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அத்தகைய நிலையில் அவரது நடவடிக்கைகளை அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே கண்டு விட்டார்களோ என்ற அச்சமும் கொண்டார். அத்தகைய சூழலில், அவனை நெருக்கமாக காணும் கட்டத்தில் மிக ஜாக்கிரதையாகவே இருந்தார். அவனைத் தொட்டதோ, பேசியதோ இல்லை. அவரது உணர்ச்சிகள் பார்வைகளோடு அடங்கிக் கிடந்தது. தன்னை அழகுற காட்சிப்படுத்த தெரு முனையில் உள்ள அம்பட்டன் கடைக்கு தினமும் சென்று தனது முடிக்கு சாயம் போட்டுக் கொள்வார்.

கான்டோலோவில் அவர் கண்ட இளைஞன் போல் பாவித்த வயோதிகனை ஒத்ததாக இருந்தது. வெனிஸில் வெப்பம் சுட்டெரித்த வேளையிலும் கூட டாட்ஜியோவின் பின்னால் அலைவதை அவர் விடவில்லை. வெனிஸ் நகரத்தின் மைய பகுதியில் அவரது பார்வையிலிருந்த டாட்ஜியோ தொலைந்துப் போனான். சோர்ந்துப் போனார். தாகம் அவரை வரண்டிழுக்க, தாக சாந்திக்காக கனிந்து நைந்த ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கி உண்டார். சில நாட்கள் கழித்து அஸ்ஹென்பெச் ஹோட்டலின் முகப்புக்குச் செல்கிறார். அவரது உடல் நிலையில் சோர்வும், உடல் நலமின்மையையும் உணர்ந்தார். அப்போது அங்கு அந்த போலாந்து குடும்பத்தைக் கண்டார். மதிய உணவுக்கு பின் அவர்கள் அங்கியிருந்து புறப்படுவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதையும் அறிந்துகொண்டார். அஸ்ஹென்பெச் அங்கியிருந்து கீழிறங்கி கடற்கரைக்குச் சென்றார். அங்கு அவர் வழக்கமாக அமரும் மேஜை நாற்காலில் அமர்கிறார். அங்கு டாட்ஜியோ தன்னை விட வயதில் சற்று மூத்த பையனுடன் இருந்தான். அந்த இரு சிறுவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. அதில் டாட்ஜியோவின் கை வலுப்பெறுகிறது. பிறகு கோபத்துடன் அவனிடமிருந்து விலகிச் செல்கிறான். அஸ்ஹென்பெச் நிற்கும் பகுதியின் ஊடாக செல்கிறான். அப்போது கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனை சற்று திரும்பிப் பார்த்தார். அஸ்ஹென்பெச்சை பொருத்தவரையில் அவனிடமிருந்து சமிக்ஞைகள் இருந்தால் மட்டுமே பின் தொடரவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் எண்ணத்தில் இருந்தார். அந்த எண்ணத்தோடு நாற்காலில் போய் சாய்ந்தார். சில நிமிடங்களில் அஸ்ஹென்பெச் மூர்ச்சையாகிறார். உயிரற்ற உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரது மரணம் பற்றிய செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. சிறப்புமிக்க கலைஞருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். தனது லட்சியம் நிறைவேறாமலே அஸ்ஹென்பெச் அமரர் ஆனார்.

மரணத்தடம் குறுநாவல், கிரேக்க புராணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகும். அறிவு மற்றும் பகுத்தறிவுக்கான கடவுளான “அப்போலா (APOLLO)” போல் அஸ்ஹென்பெச் கதாபாத்திரத்தை தாமஸ் மன் படைத்திருந்தார். அந்த முக்கிய கதாபாத்திரம் உணர்ச்சி மற்றும் பகுத்தறிவுக்கு உடன்படாது உணர்வுகளின் அடிப்படையில் செயல்படும் கடவுளான “டையானிசஸின்(DIONYSUS)” சக்தியை அஸ்ஹென்பெச் மறுதலித்திருந்த பட்சத்தில், அவரை அழிப்பதற்காகவே டையானிசஸ் வெனிஸ் வரை பின் தொடர்கிறான். பல்வேறு தருணங்களில் அவரிடம் குறுக்கிடும் செந்நிற முடிக் கொண்ட நபர்கள் டையானிசஸின் சீடர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கஸ்டவ் வோன்அஸ்ஹென்பெச் என்ற கதாப்பத்திறத்தை தாமஸ் மன் ஜெர்மன் கவிஞரான “ஆகஸ்ட் வோன் பிளாட்டனின்,” உந்துதல் கொண்டு படைத்திருந்தார். அந்த கவிஞர் ஓரின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்ததாகும். அவன் மீது அவர் தீரா காதல் கொண்டிருந்தார். அதன் பிதற்றல், பித்து மொழியாக எழுத்து வடிவம் பெற்று, சூழல் வெளியில் தவிப்பை ஏய்திக்கொண்டியிருந்தது.

கடற்கரை பிரதேசத்தில் அவன் திரிந்த இடமெல்லாம் அஸ்ஹென்பெச்சின் தடமும் ஆழப் பதிந்துக் கிடக்கிறது. அதீத உணர்ச்சி பிரவாகத்துள் அவர் ஆட்படுகிறார். டாட்ஜியோ என்ற அந்த சிறுவன் அவருக்கு ஒரு விந்தையாவனாகவும், காதலின் பிம்பம் போலவும், ஏன் ஒரு கடவுளாகவும் காட்சித் தருகிறான். அவன் மீதுள்ள காதல் இருந்து விடுபட எண்ணுகிறார். அரவரால் முடியவில்லை. மரணம் சம்பவிக்கும் வரை அவரிடம் இருந்து கொண்டிருந்த மோகம் விடுபட்டு போகவில்லை.

தாமஸ் மன் 1911ஆம் ஆண்டு விடுமுறையைக் கழிக்க வெனிஸ் சென்றிருந்தபோது இந்த நாவலைப் பற்றிய கரு உருவானதாக அவரது மனைவி காட்டியா நினைவுப்படுத்தினார்.

இந்த நாவலானது சிறுவன் ஒருவனிடம் எழுத்தாளர் ஒருவர் கொண்டிருக்கும் உணர்ச்சி சற்றும் வக்கிரமாகாமல் தாமஸ் மன் வெளிப்படுத்திருக்கிறார். தாமஸ் மன்னின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக மரணத்தடம் நாவல் பதிவாகி உள்ளது . நாவலில் குறுக்கு வெட்டாக கிரேக்க புரண காதல் தெய்வங்கள் மற்றும் அவைகளின் சல்லாபங்கள் ஊடி வருவதும், நிற கூடுகள் கடலில் கலந்து, கறைந்த நேர் கோட்டற்ற கலமாக நாவலில் பதிவாகி உள்ளது.

பல்வேறு உலகலாவிய விருதிகளை தாமஸ் மன் பொற்றிருந்தாலும், அவருக்கு 1929 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கபட்டது.

மரணத்தடம் நாவல் முன்னுரையிலிருந்து...

விளம்பரங்களைத் தேடி...

விளம்பரங்களைத் தேடியலையும் இன்றைய பத்திரிக்கைச் சூழலில், நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு சிற்றிதழை தங்களுக்கு வழங்க உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக மலர உள்ளது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைக் கொண்டது. விரைவில் வெளிவர உள்ள இந்த சிற்றிதழின் முன் அட்டைப் பக்கம் உங்கள் பார்வைக்கு...